இந்தியாவின் முதல் முறையாக MITRIS வால்வு மூலம் செய்யப்பட்ட மிட்ரல் வால்வு மாற்று அறுவை சிகிச்சை 38 வயதான ஆண் நோயாளிக்கு எம்ஜிஎம் ஹெல்த்கேரில் சாதனை!

சென்னை 26 ஏப்ரல் 2022 இந்தியாவின் முதல் முறையாக MITRIS வால்வு மூலம் செய்யப்பட்ட மிட்ரல் வால்வு மாற்று அறுவை சிகிச்சை 38 வயதான ஆண் நோயாளிக்கு எம்ஜிஎம் ஹெல்த்கேரில் சாதனை!

சென்னை, ஏப்ரல் 26, 2022: சென்னையின் இதயப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவத் துறையின் உயர் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட மருத்துவமனையான எம்ஜிஎம் ஹெல்த்கேர் இந்தியாவின் முதல் MITIS வால்வு மூலம் செய்யப்பட்ட மிட்ரல் வால்வு மாற்று அறுவை சிகிச்சையை மதுரையைச் சேர்ந்த 38 வயதான நோயாளி ஒருவருக்கு வெற்றிகரமாக செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த அறுவைசிகிச்சை கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

இன்டர்வெண்ஷனல் கார்டியாலஜி மற்றும் எலெக்ட்ரோபிசியாலஜி மூத்த நிபுணரும் TAVR மற்றும் எண்டோவாஸ்குலார் தெரப்பி இயக்குநருமான டாக்டர் ஏ.பி. கோபாலமுருகன் வழிகாட்டுதல் அடிப்படையில் கார்டியோ வாஸ்குலார் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரஷாந்த் விஜயானந்த், கார்டியோவாஸ்குலார் அறுவை சிகிச்சை மூத்த நிபுணர் டாக்டர் மோகன்  மற்றும் பல மருத்துவத் துறைகளைச் சேர்ந்த குழுவினரால் இந்த அறுவைசிகிச்சை நிகழ்த்தப்பட்டது. 

மிட்ரல் வால்வு எனப்படும் இதய அடைப்பிதழ் செயலிழப்பு காரணமாக மதுரையைச் சேர்ந்த 38 வயதான கமல்.எம் என்ற நோயாளிக்கு தீவிர மூச்சுத் திணறல் பிரச்னை இருந்தது.

தொடர் மூச்சுத் திணறல் அவருக்கு அசௌகரியம் மற்றும் சங்கடத்தை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக அன்றாட வாழ்க்கை செயல்பாட்டைக் கூட அவரால் சரியாக செய்ய முடியவில்லை.

Read Also  பிரத்யேக புற்றுநோய் மையமான MGM ஹெல்த்கேர் இன் MGM கேன்சர் இன்ஸ்டிட்யூட் குறித்த அறிவிப்பு!!

இந்த 38 வயதான நபர் பல மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்குச் சென்று ஆலோசனை செய்த போது, உலோகத்தால் ஆன மிட்ரல் வால்வுகளை பொருத்த பரிந்துரைத்தனர்.

கடைசியில் அவர் சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேருக்கு வந்தார். மெட்டாலிக் வால்வு பொருத்திக் கொண்டால் வாழ்நாள் முழுக்க ரத்தத்தை உறையவிடாமல் தடுக்கும் மாத்திரைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்பதால் அதை அவர் பொருத்திக் கொள்ள விரும்பவில்லை.

மெட்டாலிக் வால்வு இல்லாமல் வேறு வகையான வால்வு பொருத்த வழியுள்ளதா என்று அவர் தேடி கடைசியில் எம்.ஜி.எம் ஹெல்த்கேர் வந்தார்.

இது குறித்து டாக்டர் ஏ.பி.கோபாலமுருகன் அவர்கள் விவரிக்கையில்,

“இந்த நோயாளிக்கு மிட்ரல் வால்வு செயலிழப்பு உள்ளது. இதனால் ஏற்படும் கடுமையான மூச்சுத் திணறலிலிருந்து விடுபட அவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.

நோயாளியின் வயது மற்றும் வாழ்க்கை முழுக்க ரத்தத்தை எளிதில் உறைய விடாமல் தடுக்கும் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதில் விருப்பமின்மையைக் கருத்தில் கொண்டு அவருக்கு இந்த திசு அடிப்படையிலான வால்வைப் பொருத்த முடிவு செய்தோம்.

அமெரிக்காவைச் சேர்ந்த இந்த வால்வுக்கு MITRIS வால்வு என்று பெயர்.

இந்தியாவில் இன்றைய தேதி வரை இந்த வால்வை யாரும் பயன்படுத்தியது இல்லை.

இந்த திசு அடிப்படையிலான வால்வு என்பது இளம் வயதினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த வால்வை பொருத்திக் கொள்வதன் மூலம் வாழ்நாள் முழுக்க எளிதில் ரத்தம் உறைவதைத் தடுக்கும் மாத்திரை எடுத்துக் கொள்ளாமலேயே மிகவும் இயல்பான தரமான வாழ்க்கையை வாழ முடியும்.

மேலும் எதிர்காலத்தில் மீண்டும் வால்வு மாற்ற வேண்டி வந்தாலும் கூட ஓப்பன் முறையில் இதயத்தைத் திறந்து அறுவை சிகிச்சை செய்யாமலேயே டிரான்ஸ்கதீட்டர் மிட்ரல் வால்வு ரீப்ளேஸ்மெண்ட் (டிஎம்விஆர்) செயல்முறை மூலம் வால்வை மாற்றலாம்.

Read Also  பேராசிரியர் டாக்டர் ஆதி ஜோதி பாபுவுக்கு பஞ்ச பூத சிகிச்சைக்கான உலக சாதனை விருது வழங்கப்பட்டது.!!

இந்தியாவிலேயே முதன் முறையாக இந்த திசு அடிப்படையிலான வால்வை பொருத்தி வெற்றிகரமாக அறுவைசிகிச்சை செய்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

நோயாளி தற்போது தன்னுடைய இயல்பான வாழ்க்கை முறைக்குத் திரும்பியுள்ளார்” என்றார்.

எம்ஜிஎம் ஹெல்த்கேர் சிஇஓ திரு ஹரீஷ் மணியன் அவர்கள் கூறுகையில்,

“இளம் நோயாளி ஒருவருக்கு முதன் முறையாக மிட்ரிஸ் திசு வால்வு மாற்று அறுவை சிகிச்சையைச் செய்ததன் மூலம், அவர் தன்னுடைய இயல்பான ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் திரும்பியிருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

மிகச் சிறப்பாக செயல்பட்டு சிகிச்சை அளித்த மருத்துவ நிபுணர் குழுவுக்கும் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களின் இந்த முயற்சியானது இந்த பிராந்தியத்தில் முழுமையான இதய சிகிச்சை அளிக்கும் மையமாக எம்ஜிஎம் ஹெல்த்கேரை கட்டமைக்கும் முயற்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்” என்றார்.

சிகிச்சை அனுபவங்கள் குறித்து திரு கமல், “என்னுடைய பிரச்னைக்கு தீர்வைக் கண்டுபிடித்து உதவிய எம்ஜிஎம் ஹெல்த்கேரின் டாக்டர் கோபாலமுருகன் மற்றும் அவரது குழுவினருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

சிகிச்சை அனுபவம் மிகவும் சிறப்பாக இருந்தது.

என்னுடைய பிரச்னைக்கு கடைசியில் நிரந்தரத் தீர்வு கிடைத்ததில் நான் உண்மையில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *