அப்போலோ எஜூகேஷன் யுகே நிறுவனம் அப்போலோ இன்டர் நேஷனல் கிளினிக்கல் ஃபெல்லோஷிப் புரோக்ராம் (ICFP) திட்டத்தை தொடங்கியுள்ளது!
சென்னை 28 ஜூன் 2022 அப்போலோ எஜூகேஷன் யுகே நிறுவனம் அப்போலோ இன்டர் நேஷனல் கிளினிக்கல் ஃபெல்லோஷிப் புரோக்ராம் (ICFP) திட்டத்தை தொடங்கியுள்ளது!
இதன் மூலம் இங்கிலாந்தில் MCh/MMed பட்டம் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது!
சென்னை, 28 ஜூன், 2022 : அப்போலோ எஜூகேஷன் யுகே (AEUK) நிறுவனம் அதன் உலகளாவிய தொழிலாளர் மேம்பாட்டு முன்னெடுப்பின் ஒருபகுதியாக அப்போலோ இன்டர்நேஷனல் கிளினிக்கல் ஃபெல்லோஷிப் புரோக்ராம் (ICFP),2022 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 3 ஆண்டுகால ICFP பயிற்சியின் போது, மருத்துவர்கள் (MS/MD/DnB) கற்றுக் கொண்டே சம்பாதிக்கவும் முடியும். மேலும் இந்தியாவில் உள்ள அப்போலோ மருத்துவமனைகளின் மூத்த மருத்துவர்களின் வழிகாட்டுதலையும் பெறலாம். அடுத்த 2 அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனைகளில் பணியமர்த்தப்படுவதற்கு முன்பாக என்எச்எஸ் மருத்துவ நடைமுறைக்கு மாறுவதற்கு ஓராண்டில் தயாராகிக் கொள்ள உதவுகிறது. அங்கு அவர்கள் தங்களது மருத்துவப் படிப்பை நிறைவு செய்து கொள்ள முடியும். சிறப்புப் பிரிவில் சர்வதேசத் தரத்திலான இந்த பணி அனுபவத்தை பெறும் அதே வேளையில், மருத்துவர்கள் அறுவை சிகிச்சையில் முதுகலை பட்டம் அல்லது மருத்துவ பிரிவில் முதுகலைப் பட்டத்தையும் எட்ஜ் ஹில் யூனிவர்சிட்டியில் பெறுவார்கள். மருத்துவர்கள் வழிகாட்டுதலை பெற்று, உலகத் தரம் வாய்ந்த மருத்துவ பணி வாய்ப்பையும், சுகாதாரத்துறையில் தரம் வாய்ந்த சேவைகளை வழங்குவதற்கான அனுபவத்தையும் பெறும் வகையில், அப்போலோ ICFP கல்வித் திட்டம் மிகவும் அக்கறையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது, ரிட்டிங்டனில் உள்ள குளோபல் டிரெய்னிங் அன்ட் எஜூகேஷன் சென்டர் (GTEC), விகான் அன்ட் லெய் டீச்சிங் ஹாஸ்பிட்டல்ஸ் என்எச்எஸ் பவுண்டேஷன் டிரஸ்ட் மற்றும் எட்ஜ் ஹில் யூனிவர்சிட்டி, இங்கிலாந்து ஆகியவையும் AEUK நிறுவனமும் கூட்டு சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.
அப்போலோ ICFP என்பது அப்போலோ குழுமத்தின் திறன், பயிற்சி, கல்வி மற்றும் வளம் ஆகியவற்றை கொண்டுள்ள “அப்போலோ நாலெட்ஜ்” என்ற ஒரே அமைப்பின் கீழ் முன்னெடுக்கப்படும் அதன் சமீபத்திய முயற்சியாகும். AEUK இன் உலகளாவிய தொழிலாளர் மேம்பாட்டின் முன்முயற்சியின் ஒரு பகுதியாகும். மருத்துவ கல்வி நிபுணர்களுக்கு கல்வி கற்பிக்கும் திறன் மேம்படுத்தும், பணியிலமர்த்தும் மற்றும் வேலை வாய்ப்புக்களுக்கான ஒரு சிறப்புத் திட்டமாகும். இது அவர்களின் எல்லைகளை விரிவுபடுத்தவும், நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளவர்கள் பயிற்சி மற்றும் பணி அனுபவத்தை பெறுவதற்கும் இது உதவுகிறது.
அப்போலோ நாலெட்ஜ் பிரிவின் சிஇஓ, திரு. சிவராமகிருஷ்ணன் வெங்கடேஸ்வரன் (Mr. Sivaramakrishnan Venkateswaran, CEO, Apollo Knowledge) கூறுகையில், “ இது எங்களது உலகளாவிய தொழிலாளர் மேம்பாட்டின் (GWD) ஒரு பகுதியாகும். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள மருத்துவ துறை நிபுணர்கள் கல்வி, பயிற்சி, வேலை வாய்ப்புகளை பெறுகிறார்கள். இதன் மூலம் அவர்கள் பயிற்சி பெறுவதுடன் திறமையானவர்களாகவும் தங்களை மேம்படுத்தி கொள்வதன் மூலம், அவர்களுக்கும் அவர்கள் சார்ந்திருக்கும் சுகாதார நிறுவனங்களுக்கும் மதிப்பையும் பெருமையையும் சேர்க்கிறார்கள்” என்றார்.
குளோபல் பயிற்சி மற்றும் எஜூகேஷன் மையத்தின் கிளினிக்கல் இயக்குநர், பேராசிரியர் Raj Murali MBE, FRCS (Eng), FRCS Ed, FRCS (Tr & Orth), கூறுகையில், “ICFP திட்டத்தில் இணைய உள்ள புதிய மருத்துவர்களை வரவேற்க நான் தயாராக உள்ளேன், குறிப்பாக WWL-ல் உள்ள எங்களது சிறப்பு பிரிவுகளில் சேர்பவர்களை வரவேற்கிறேன். என்எச்எஸ் என்பது உலகத் தரம் வாய்ந்த வழிகாட்டிகளிடமிருந்து விலை மதிப்பில்லாத பணி அனுபவத்தை பெறுவதற்கான ஒரு அற்புதமான நிறுவனமாகும். மேலும் இந்த பயிற்சி காலத்தில் மருத்துவர்கள் எங்களுடன் இருக்கும் நேரத்தை பயன்படுத்தி பயன் பெறுவார்கள்” என்றார்.
எட்ஜ் ஹில் யுனிவர்சிட்டியின் உடல் நலம், சோஷியல் கேர் அன்ட் மெடிசின் துறைத் தலைவர், இணை வேந்தர் பேராசிரியர் கிளாரே ஆஸ்டின் (Professor Clare Austin, Pro Vice Chancellor, Dean of the Faculty of Health, Social Care and Medicine, Edge Hill University) கூறுகையில், “எங்களது நீண்ட காலமாக செயல்படுத்தப்பட்டுவரும், கற்கும் வசதியுடன் சம்பாதிக்கும் வாய்ப்பையும், வெற்றிகரமாக தங்கள் நாட்டுக்கு திரும்பும் வாய்ப்பையும் அளிக்கும் சிறப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக சர்வதேச மருத்துவர்களின் ஆள்சேர்ப்பு மற்றும் பயிற்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில், முதுகலை அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ முதுகலை படிப்புக்கான இது ஒரு முக்கியமான வாய்ப்பாகும்” என்றார்.
அப்போலோ நாலெட்ஜ் குறித்து : ஒரு ஆரோக்கியமான உலகத்துக்காக அதிகாரமளிக்கப்ப்ட்ட சுகாதார கட்டமைப்பை உருவாக்குவதற்காக, மனித வளத்தின் திறன்களை மேம்படுத்த உதவும் ஒரு உலகளாவிய கற்றல் சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் அப்போலோ குழுமத்தின் ப்ரமோட்டர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் அப்போலோ நாலெட்ஜ் பின்வரும் நிறுவனங்களை தனது ஒரே குடையின் கீழ் கொண்டுள்ளது. அவை,
ஆந்திர மாநிலம், சித்தூரில் உள்ள அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எஜூகேஷன் மற்றும் ரிசர்ச் பவுண்டேஷன். இது அப்போலா பல்கலை கழகம், அப்போலோ மருத்துவ கல்லூரி, நர்சிங் கல்லூரி, அதனுடன் தொடர்புடைய சுகாதார கல்லூரிகள் மற்றும் சுகாதார மேலாண்மை கல்லூரிகள் ஆகியவற்றை உள்ளிடக்கி உள்ளது. இந்த வளாகத்தில் ஒட்டு மொத்தமாக 2500-க்கும் அதிகமானோர் பயின்று வருகின்றனர்.
ஐதராபாத்தில் உள்ள அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எஜூகேஷன் அன்ட் ரிசர்ச் பவுண்டேஷன்- இதில் நர்சிங் கல்லூரி, அதனுடன் தொடர்புடைய சுகாதார கல்லூரிகள், சுகாதாரத்துறை மேலாண்மை கல்லூரி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இதில் மொத்தமாக 2 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்தியா மற்றும் பூடானில் உள்ள அப்போலோ நர்சிங் கல்லூரிகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் இணைந்துள்ளனர்.
எங்களது ஆன்லைன் நிறுவனமான மெட்வர்சிட்டி வாயிலாக மருத்துவர்கள், அவற்றுடன் இணைந்த சுகாதாரத்துறை நிபுணர்கள் தொலைநிலை மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனர் சுகாதாரத் துறையில் தொலைநிலை மருத்துவ கல்வி சேவைகளை வழங்கும் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றாக மெட்வர்சிட்டி விளங்கி வருகிறது.
பாரா மெடிக்கல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதாரத்துறை நிபுணர்களுக்கு திறன்களை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் மிகப் பெரிய சுகாதாரத்துறை நிறுவனமாக அப்போலோ மெடிஸ்கில்ஸ் உள்ளது.
எங்களது உலகளாவிய பணியாளர் மேம்பாட்டு (GWD) செயல்பாட்டின் ஒரு பகுதியாக, உலகளவில் சுகாதாரத்துறை நிபுணர்களுக்கு, வளம் அளித்தல், பயிற்சி, தகுதிப்படுத்தல் மற்றும் பணியமர்த்தல் ஆகியவற்றுக்கான ஒரு கூட்டு முயற்சியை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம்..