மூன்று ஆண்டு காலம் கிடப்பில் போடப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் அப்டேட்ஸ்.

சென்னை 20 மார்ச் 2022 மூன்று ஆண்டு காலம் கிடப்பில் போடப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் அப்டேட்ஸ்.

மூன்று வருடங்களுக்கு முன்பு தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக நடிகர் நாசர், பொதுச் செயலாளராக நடிகர் விஷால் பொருளாளராக நடிகர் கார்த்தி பதவி வகித்தனர்.

அதன்பின் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது.

கடந்த மூன்று வருடங்களாகவே தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாமல் கிடப்பில் கிடக்கின்றன.

நடிகர் இயக்குனர் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், நடிகர் நாசர் தலைமையில் ஒரு அணியினரும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டனர்.

ஆனால் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால் நடந்த தேர்தலை செல்லாது என நீதிமன்றம் அறிவித்தது.

இதனால் பதிவான வாக்குகள் மூன்று வருடங்களாக அப்படியே எண்ணப்படாமல் இருந்தன.

தேர்தல் வாக்கு பெட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மேல் முறையீடு செய்தனர்.

நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தேர்தல் செல்லும் என்று அறிவித்து வாக்குகளை எண்ணவும் உத்தரவிட்டது.

அதன்பின்னர் ஏழுமலை என்ற துணை நடிகர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு பிறகு இன்று மார்ச் 20ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள குட் ஷெப்பர்ட் பள்ளி வளாகத்தில் காலை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

Read Also  'விக்ரம்' திரைப்படத்தின் வெற்றி உலகநாயகனை நேரில் அழைத்து கெளரவித்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி.!

வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்படுகிறது

இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

நாளை மதியம் அல்லது மாலைக்குள் நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published.