கற்றல் மற்றும் சம்பாதித்தல் பிரச்சாரத்தின்தின் மூலம் இசை உருவாக்குபவர்களுக்கு  IPRS முழுமையான ஆதரவை வழங்குகிறது!!

சென்னை 04 மே 2022 கற்றல் மற்றும் சம்பாதித்தல் பிரச்சாரத்தின்தின் மூலம் இசை உருவாக்குபவர்களுக்கு  IPRS முழுமையான ஆதரவை வழங்குகிறது!!

  • படைப்பாளரின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தமிழ் இசைத் துறைக்கான முதல் அமர்வுடன் IPRS இன் ஆண்டு முழுமைக்குமான இந்தியா முழுமைக்குமான முன்முயற்சியை இந்தப் பயிலரங்கம் வழங்கியது.
  • வைரமுத்து ராமசாமியுகபாரதிMr. Viveka திரு. ராகேஷ் நிகம்நிர்வாகக் குழுவினர்பிராந்தியத்தின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் இயக்குநர்கள் குழுவினர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சென்னை, 04 ஏப்ரல் 2022இந்தியன் பெர்ஃபார்மிங் ரைட் சொசைட்டி லிமிடெட் (“IPRS”) அதன் உறுப்பினர்களின் நலனில் பெரும் அக்கறை கொண்டுள்ளது. இந்நிறுவனம் துவங்கப்பட்ட 1969-ஆம் ஆண்டு முதல் இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்களின் உரிமைகளை IPRS பாதுகாத்து வருகிறது திறமையான படைப்பாளிகள் தங்கள் உரிமைகள் மற்றும் வாய்ப்புகள் பற்றிய முழுமையான தகவல் கொண்டிராமல் இருப்பது கவலை அளிப்பதாகவும் மற்றும் இந் நிலைமையை சீர் செய்ய எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சிந்திக்க வைத்தது.

ஒரு பொறுப்புள்ள பதிப்புரிமை சங்கமாக, தொற்றுநோய் தாக்கத்தின் போது அதன் உறுப்பினர்கள் சந்தித்த பொருளாதாரக் கொந்தளிப்பை IPRS நன்கு அறிகிறது. விரைவாக மாற்றங்களைக் கண்டு வரும் இந்த இசைசார் பிரிவில், உறுப்பினர்கள் கொண்டிருந்த பல சந்தேகங்கள் மற்றும் வினவல்களையும் அமைப்பு கவனத்தில் கொண்டது. இது சார்ந்து, அதன் உறுப்பினர்களுக்குத் தகவல் மற்றும் அதிகாரம் வழங்கும் முன்முயற்சியைத் தொடங்க வேண்டிய அவசியம் எழுந்தது. இந்த முயற்சியின் மூலம் அதன் உறுப்பினர்களைச் சென்றடைவது IPRS இன் பிரதான நோக்கங்களில் ஒன்றாக மாறியது.

Read Also  இரண்டு வசீகரிக்கும் பெண்கள், ஒரு மறக்க முடியாத கதை.!!

இந்நோக்கம் சார்ந்து உறுப்பினர்களுக்காக தொடர் கருத்துப்பட்டறைகளைத் தொடங்க IPRS முடிவு செய்தது. இந்தியா முழுவதும் நடக்கவுள்ள பயிலரங்கங்கள் IPRS உறுப்பினர்களுக்கு முழுமையான தகவலை வழங்கும் மற்றும் அவர்களின் ஆக்கப்பூர்வமான பயணம் மற்றும் வாழ்க்கைக்கு பயனளிக்கும். “கற்றல் மற்றும் சம்பாதித்தல்” என்ற தலைப்பில் பயிலரங்கம் தமிழகத்தில் வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.

மே 4, 2022 அன்று நடந்த முதல் “கற்றல் மற்றும் சம்பாதித்தல்” பயிலரங்கள் சென்னையில் நடத்தப்பட்டது. இந்திய இசைத் துறையின் முக்கிய பிரபலங்கள், குறிப்பாக தமிழ் இசைத் துறையின் சிறந்த இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், வெளியீட்டாளர்கள் மற்றும் அனைத்து புகழ்பெற்ற IPRS உறுப்பினர்கள், சந்திப்பில் பங்கேற்றனர்.

இசைசார் பதிப்புரிமை மற்றும் டிஜிட்டல் சகாப்தத்தில் வளர்ந்து வரும் போக்குகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் படைப்பாளர்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் IPRS இன் பங்கு போன்ற தொடர்புடைய பகுதிகளை இப்பயிலரங்கம் மையமாகக் கொண்டிருந்தது.

காப்புரிமை சங்கமாக IPRS இன் முன்முயற்சி மற்றும் பங்கு குறித்து கருத்து தெரிவித்த புகழ்பெற்ற பாடலாசிரியர்கவிஞர் மற்றும் IPRS உறுப்பினரான ஸ்ரீ வைரமுத்து ராமசாமி கூறுகையில், “IPRS இன் இந் நடவடிக்கையை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நான் பல வருடங்களாக இத்துறையில் ஒரு அங்கமாக இருந்து வருகிறேன்மேலும் சரியான தகவல் இல்லாததால் பல படைப்பாளிகள் தங்கள் உரிமைகளைப் பெறமுடியாமல் போவனதையும் நான் கண்டிருக்கிறேன்.

ஒரு படைப்பாளிக்கு உரிய மதிப்பை வழங்குவதுஅவர்கள் மேலும் உயர வழிவகுக்கிறது. இசைத் துறை முன்னேற உதவும் அதே வேளையில்அவர்களின் படைப்பு முயற்சிகளுக்கு முழுமையான பங்கை அளிக்கவும் உதவுகிறது.” என்றார்.

Read Also  தனது ரசிகர்களுக்கு பிஸ்சா ட்ரீட் வைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன்!

 

இந்தப் பிரச்சாரத்தைப் பாராட்டி கருத்தித் தெரிவித்த புகழ்பெற்ற பாடலாசிரியர் திரு. மயூர் பூரி மேலும் கூறுகையில், “இசை படைப்பாளர் சமூகத்தின் ஒருமித்த குரலாக IPRS திகழ்கிறது. தற்போதுஇசைத் துறையானது ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் பரவலாக்கப்பட்டு வருகிறதுமேலும் எங்கள் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் ஸ்ரீ ஜாவேத் அக்தர் அவர்களின் எண்ணப்படி, IPRS இல் நாம் அனைவரும் நமது பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கிய முன்முயற்சிகளை அதிகரிக்க வேண்டியது அவசியம். கற்றல் மற்றும் சம்பாதித்தல்‘ பயிலரங்கம் பல நகரங்களில் ஒரு நாள் முழுவக்தும் நடத்தப்படும் பயிலரங்கத் தொடராகும்இது எங்கள் உறுப்பினர்கள் செழித்து வளர உதவுகிறது. சமூகத்தை ஒன்றிணைக்க இதுபோன்ற விரிவான உள்ளடக்கம் திட்டமிடப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்மேலும் ஆயிரக்கணக்கான இசை தயாரிப்பாளர்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார்.

செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய IPRS தலைமை நிர்வாக அதிகாரி திரு. ராகேஷ் நிகம், “இந்திய இசைத் துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறதுமேலும் புவி முழுவதும் மிகவும் பிரபலமான பாடலாசிரியர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுக்கு இது ஒரு தாயகமாக உள்ளது. தமிழ் இசைத் துறையானது பெருமளவில் பிரபலமடைந்துமற்றவர்கள் பின்பற்றுவதற்குரிய ஓர் அளவுகோலை அமைக்குமளவு பெரிய தாக்கத்தை உருவாக்கி வருகிறது. தொழில்துறை வளர்ந்து வரும் நிலையில்பாடலாசிரியர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் தங்கள் உரிமைகளை நன்கு அறிந்திருப்பது அவசியமான ஒன்று. இந்த முன்முயற்சியின் மூலம்இசை பதிப்புரிமை மற்றும் உரிமம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி எங்கள் உறுப்பினர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். IPRS இல்எங்கள் உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கிஉறுப்பினர்களையும் இந்திய இசைத் துறையையும் வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்லும் வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை நோக்கி பாதையை அமைப்பதே எங்களது முதன்மையான கவனம்.” என்றார்.

Read Also  சென்னையில் பிரபலமாகி வரும் மீன் குழம்புக்கு மட்டும ஒரு உணவகம் மீன் சட்டி எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்.

 

திரு. நிகாம் மேலும் கூறுகையில், “20-21 நிதியாண்டில் 169.8 கோடி ரூபாயாக இருந்த IPRS , 21-22 நிதியாண்டு 85% வளர்ச்சியைப் பதிவுசெய்து 310+ கோடிகளாக உயர்ந்து வரலாறு படைத்தது. –22. 21-22 நிதியாண்டின் மொத்த வருவாயில் ஸ்ட்ரீமிங்/OTT இயங்குதளங்கள் முக்கியப் பங்களித்துள்ளன.” என்றார்.

ராயல்டி வழங்குவதைப் பொறுத்தவரை, முந்தைய ஆண்டு வழங்கிய INR 183.3 கோடியுடன் ஒப்பிடுகையில், INR 200 கோடிகளை முறியடித்து 210 கோடி ராயல்டி வழங்கிய ஆண்டாக இது அமைந்தது. IPRS அதன் உறுப்பினர்களுக்கு நிவாரண நிதியும் வழங்கியது. 21-22 நிதியாண்டின் போது கோவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட வருமான இழப்பின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் 3900 எழுத்தாளர் உறுப்பினர்களுக்கு 6.2 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *