புத்தம் புதிய குஷாக் மாண்டே கார்லோ அறிமுகம் ஸ்கோடா ஆட்டோ இந்தியா கர்ஜனை ‘அசத்தல் தோற்றத்தைப் பெறுங்கள்‘!!
சென்னை 09 மே 2022 புத்தம் புதிய குஷாக் மாண்டே கார்லோ அறிமுகம் ஸ்கோடா ஆட்டோ இந்தியா கர்ஜனை ‘அசத்தல் தோற்றத்தைப் பெறுங்கள்‘!!
- ஸ்கோடா மோட்டார் ஸ்போர்ட் பாரம்பரியம் மற்றும் ராலே மாண்டே கார்லோவுக்கு மரியாதை செலுத்தும் மாண்டே கார்லோ எடிஷன்
- பிரத்யேக மாண்டே கார்லோ பேட்ஜுடன் அலங்கரிக்கும் இந்தியாவின் இரண்டாவது மகிழுந்து குஷாக்
- பிளாக் க்ளாஸி வெளிப்புற மற்றும் சிவப்பு உள் அலங்காரங்கள், ஓட்டுனருக்கான புதிய வெர்சுவல் காக்பிட் ஆகியவை குஷாக் மாண்டே கார்லோவின் உறுதிப்பாடு, அழகியல் மற்றும் சுறுசுறுப்புக்கு எடுத்துக்காட்டாக அமையும்.
- ஆற்றல்மிகு திறமையான 1.0 டிஎஸ்ஐ மற்றும் 1.5 டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின்கள்
- 1.0 டிஎஸ்ஐ மீதான ஸ்டார்ட்–ஸ்டாப் ரிகூபரேஷன் எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்தும்
- பிரத்யேக டொர்னாடோ ரெட் மற்றும் கேண்டி வொயிட் கண்கவர் வண்ணங்களில் குஷாக் மாண்டே கார்லோ மகிழுந்து
- குஷாக் மாண்டே கார்லோ எடிஷன் எக்ஸ்-ஷோரூம் தொடக்க விலை ரூ 15,99,000
சென்னை: 2022 மே 9 : செழுமை, நல்ல வாழ்க்கை, சுவை, மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆகியவற்றை எண்ணும் போது ஐரோப்பா, மொனாகோ, மாண்டே கார்லோவை நீங்கள் கண்டிப்பாக நினைத்தே ஆக வேண்டும். கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக காண்டே கார்லோ கவர்ச்சியிலும், பெருமையிலும், முன்னிலை வகித்து வருகிறது. ஜெக் நாட்டைச் சேர்ந்த இந்த மகிழுந்து தயாரிப்பு நிறுவனம் பிரபல மாண்டே கார்லோ போட்டிகளில் ஏராளமான வெற்றிகளைக் குவித்துத் தனது மோட்டார் விளையாட்டு ஈடுபாட்டை வெளிப்படுத்தி உள்ளது. 1912இல் போட்டிகளில் இரண்டாம் இடத்தை லாரின் & க்ளேமெண்ட் வாகனங்கள் பதிவு செய்தன. 1936இல் விங்க்ட் ஏரோ என்னும் மாடல் பாரம்பரியப் போட்டிகளில் முதன் முறையாகப் பங்கேற்றது. பாபுலர் ஸ்போர்ட் ரோட்ஸ்டர் அண்டர் 1.5 லிட்டர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றது.
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது முதல் பாரம்பரியப் பெருமை மிக்க ‘க்வீன் ஆஃப் ராலீஸ்’ மற்றும் ‘உலக போட்டி சாம்பியன்ஷிப்ஸ்’ ஆகியவற்றில் பெற்ற வெற்றிக் கொண்டாட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. ஸ்கோடா போட்டி, மோட்டார் ஸ்போர்ட் பாரம்பரியம் மற்றும் இந்தியா 2.0 வெற்றி ஆகியவற்றை வாழ்த்தி வரவேற்றது. ஸ்கோடா ஆட்டோ இந்தியா ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே கார்லோ ரகத்தை ஸ்போர்ட்டி கருப்பு வடிவமைப்பு அம்சங்களுடன் அறிமுகப்படுத்தி உள்ளது.
புத்தம் புதிய ஸ்கோடா குஷாக் மாண்டே கார்லோ அறிமுகம் குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட் இயக்குனர் ஜாக் ஹோலிஸ் கூறுகையில் ‘எங்களது சமீபத்திய வெற்றிகள் மற்றும் இந்தியாவில் மிகப் பெரிய மாதாந்திர விற்பனை காரணமாக, ஸ்கோடா வெற்றி உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் பேட்ஜுடன் கொண்டாடியது மிகவும் சரியே. மாண்டே கார்லோ இதயத்துக்கு நெருக்கம் என்பதால் வித்தியாசமான, மென்மையான மற்றும் ஸ்போர்ட்டியான அழகியல் அம்சங்களைக் கொண்ட மகிழுந்தை வாங்கக் கூடுதல் முனைவுகள் எடுக்க விரும்புவர். மாண்டே கார்லோ தனித்துவமான ஸ்டைலுடன் கூடிய உணர்வை வெளிப்படுத்துகிறது. சிலிர்ப்பான அனுபவத்தைப் பெறும் வகையில் மோட்டார் விளையாட்டின் மரபு மற்றும் பாரம்பரியப் பெருமையில் திளைத்திருக்கும் பிரபல பெயர் கொண்ட வாகனத்தை நீங்கள் ஓட்டுகிறீர்கள் என்பதே நிஜம்’ என்றார்.
குஷாக் மாண்டே கார்லோ 1.0 டிஎஸ்ஐ 6 ஸ்பீட் மேனுவல் ரூ 15,99,000 மற்றும் 1.5 டிஎஸ்ஐ 7 ஸ்பீட் டிஎஸ்ஜி ரூ 19,49,000 எக்ஸ்-ஷோரூம் விலைகளில் அறிமுகமாகின்றன. குஷாக் மகிழுந்து சிறப்பு எடிஷன் டொர்னாடோ ரெட் மற்றும் கேண்டி வொயிட் பிரத்யேக வண்ணங்களில் வருகிறது. மேலும், குஷாக் மாண்டே கார்லோ 1.0 டிஎஸ்ஐ ஸ்டார்ட்-ஸ்டாப் ரீகுபரேஷன் சிறப்பம்சம் காரணமாக எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்தும்.
அசத்தல் தோற்றத்தைப் பெறுங்கள்
குஷாக் மாண்டே கார்லோ மாடலில், க்ளாஸி பிளாக் சர்ரவுண்ட்டுடன் ஸ்கோடா சிக்னேசர் கிரில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஓஆர்விஎம்-களும் க்ளாஸி பிளாக்கில் ஜொலிக்கின்றன. ஆர்17 ட்யூயல்-டோன் வேகா 43.18 செமீ அல்லாய் உலோகத்தில் தயாரான சக்கரங்கள் ஸ்கோடாவின் அதி வேகத் தயாரிப்பான ஆக்டேவியா விஆர்எஸ் 245 பிரதிபலிப்புகளாகும். புதிய குஷாக் மகிழுந்தில் ஸ்கோடா பேட்ஜுக்கு பதிலாக மாண்டே கார்லோ ஃபெண்டர் கார்னிஷ் பொருத்தப்பட்டிருக்கும். உடலின் வண்ணம் டொர்னேடோ ரெட் மற்றும் கேண்டி வொயிட் ஆகிய இரு நிறங்களிலும், கூரை க்ளாஸி கார்பன் ஸ்டீல் பெயிண்ட் நிறத்திலும், மாண்டே கார்லோவுக்கு ட்யூயல் டோன் அழகியலைத் தருகிறது. ஆண்டி பிஞ்ச் தொழில்நுட்பத்துடன் கூடிய கூரையிலுள்ள எலெக்ட்ரிக் சன் ரூஃப் மேலும் மெருகூட்டும். முனைகளிலுள்ள மேட் பிளாக் ரூஃப் ரயில்களும், கருப்பு க்ரோம் வெளிப்புறக் கதவுகளின் கைப்பிடிகளும் கார்பன் ஸ்டீல் கூரைகளின் அழகுக்கு அழகு சேர்க்கும்.
ட்யூயல் டோன் டெயில்கேட் ஸ்பாயிலர் தொடங்கும் இடத்தில் கூரை முடிகிறது. இன்னும் கீழே பின்பக்கத்தில் பொருள்களை வைக்கும் டிக்கி டிரங்க் கார்னிஷும், ரியல் பம்பர் கீழே டிஃப்யூசரும், க்ளாஸி பிளாக் வண்ணத்தில் குஷாக் மாண்டே கார்லோவை இன்னும் வசீகரமுடன் காட்சியளிக்க உதவும். இது மாண்டே கார்லோ முன்பக்கமுள்ள க்ளாஸி பிளாக் டிஃப்யூசருக்கு இணையாக மிளிரும். பின்புறமுள்ள க்ரோம் ஸ்கோடா மற்றும் குஷாக் எழுத்துகளும், முன்புற பம்பரிலுள்ள ஏர்-வெண்ட்களுக்கான எல்-வடிவிலான சர்ரவுண்ட்களும் க்ளாஸி பிளாக் வண்ணத்தில் பளபளக்கும்.
1.0 டிஎஸ்ஐ மற்றும் 1.5 டிஎஸ்ஐ எஞ்சின்களுக்கு இடையேயான விஷுவல் டிஃபரென்ஷியேட்டராக, குஷாக் மாண்டே கார்லோ 1.5 டிஎஸ்ஐ முன்புறச் சக்கரங்களில் ஸ்போர்ட்டி ரெட் காலிப்பர்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
புதிய வெர்சுவல் காக்பிட்டுடன் கூடிய ராலி-ப்ரெட் இண்டீரியர்கள்
சிவப்பு மற்றும் பிளாக் ட்யூயல் டோன் அஃபோல்ஸ்டரி மற்றும் ரூபி ரெட் மெட்டாலிக் இன்செர்ட்ஸுடன் கூடிய லக்ஸ் இண்டீரியர்கள் மூலம், குஷாக் மாண்டே கார்லோ கேபின், மோட்டார் ஸ்பொர்ட் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கிறது. இந்த உள் அலங்காரம் அழகியல், ஸ்போர்ட்டினெஸ் மற்றும் குஷாக் மாண்டே கார்லோவுக்குள் இருக்கும் இட வசதி ஆகியவற்றை இன்னும் மேம்படுத்துகிறது. டேஷ்போர்டின் அகலத்தை ரூபி ரெட் மெட்டாலிக் கன்சோல் மையம் வழியே சென்று முன்பக்க கதவுகள் வரை அழகாக அலங்கரிக்கிறது. முன் பக்க வெண்டிலேடெட் ரெட் அண்ட் பிளாக் தோல் இருக்கைகளின் ஹெட்ரெஸ்ட்களில் ‘மாடே கார்லோ’ எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கும்.
பின்புறத்தில் ரெட் அண்ட் பிளாக் தோல் இருக்கைகளிலும் ‘மாண்டே கார்லோ’ எழுத்துகள் ஹெட் ரெஸ்ட்களில் பொறிக்கப்பட்டிருக்கும். ஓட்டுனரும் பயணியும் கைகளை வசதியாக வைத்திருக்க டோர் ஆர்ம் ரெஸ்ட்கள் உண்டு. முன்புறம் நடுவில் உள்ளதில் சிவப்பு வண்ணத் தையல் போடப்பட்டிருக்கும். 2 ஸ்போக் மல்டி ஃபங்க்ஷன் ஸ்டீரிங்கிலுள்ள தோல் பட்டையிலும் சிவப்புத் தையல் உண்டு. குஷாக் மாண்டே கார்லோ கேபின் முன்பக்க பயணி டேஷ்போர்டிலுள்ள விளக்குகள் சிவப்பு வண்ணத்தில் ஒளிரும்.
சிவப்பு வண்ணத்தில் 20.32 செமீ ஸ்கோடா வெர்சுவல் காக்பிட்டைக் கொண்டது ஓட்டுனரின் கன்சோல் ஆகும். டேஷ்போர்டின் மையத்தில் ஸ்கோடா ப்ளே செயலிகள் மற்றும் சிவப்பு வண்ணத்தில் 25.4 செமீ இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு உள்ளது. அக்ஸிலரேட்டர், பிரேக் மற்றும் க்ளட்ச் பணிகளை பிடிமானத்துடன் கூடிய அலு பெடல்கள் அழகாகக் கையாளும். கதவைத் திறந்தவுடன் மாண்டே கார்லோ எனக் கதவுகளில் பொறிக்கப்பட்ட ஸ்க்ஃப் பிளேட்கள் உங்களைக் கேபினுக்குள் அன்புடன் வரவேற்கும்.
மாண்டே கார்லோவில் ஸ்கோடாவின் வெற்றிகளையும், 2022இல் ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சி மற்றும் வெற்றிக்குக் குஷாக்கின் பங்களிப்பையும், குஷாக்கின் புத்தம் புதிய மாண்டே கார்லோ எடிஷன் பிரதிபலிக்கிறது. இந்தியாவில் முதல் காலாண்டு சாதனைக்கும், ஸ்கோடா நிறுவனத்தின் இந்தியா 2.0 திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதிலும், குஷாக் வழிகாட்டியாக விளங்குகிறது. எனவே இந்தச் சாதனைகளை வெளிப்படுத்தும் வகையிலும், ஸ்கோடா வெற்றி உணர்வைப் பிரதிபலிக்கும் வகையிலும், பேட்ஜ் பெறுவது சாலச் சிறந்ததாகும்.
விலை விவரம் : குஷாக் மாண்டே கார்லோ
மாடல் | 1.0 (எம்டி) | 1.0 (ஏடி) | 1.5 (எம்டி) | 1.5 (டிஎஸ்ஜி) |
குஷாக் மாண்டே கார்லோ | 15,99,000 | 17,69,000 | 17,89,000 | 19,49,000 |
Further information:
Sunny Arora Saurabh Dedhia
Product and Brand Communications Product and Brand Communications
T – +91 22 3313 7332 T – +91 22 3313 7046
[email protected] [email protected]
ŠKODA AUTO
- is successfully steering through the new decade with the NEXT LEVEL – ŠKODA STRATEGY 2030.
- aims to be one of the five best-selling brands in Europe by 2030 with an attractive line-up in the entry-level segments and additional e-models.
- is emerging as the leading European brand in India, Russia and North Africa.
- currently offers its customers 11 passenger-car series: the SLAVIA, FABIA, RAPID, SCALA, OCTAVIA and SUPERB as well as the KAMIQ, KAROQ, KODIAQ, ENYAQ iV and KUSHAQ.
- delivered over 870,000 vehicles to customers around the world in 2021.
- has been a member of the Volkswagen Group for 30 years. The Volkswagen Group is one of the most successful vehicle manufacturers in the world.
- independently manufactures and develops not only vehicles but also components such as engines and transmissions in association with the Group.
- operates at three sites in the Czech Republic; manufactures in China, Russia, Slovakia and India primarily through Group partnerships, as well as in Ukraine with a local partner.
- employs more than 43,000 people globally and is active in over 100 markets.
ŠKODA AUTO INDIA
- fascinating customers in India since 2001.
- offers five models in India – SLAVIA, SUPERB, OCTAVIA, KUSHAQ and KODIAQ.
- present in more than 100 cities across the country with over 175 customer touchpoints
- recorded a triple digit growth of 130% with 23,858 units sold in 2021
- ŠKODA AUTO India website – www.škoda-auto.co.in
- ŠKODA AUTO India Communications Twitter Handle – @SKODAIndia_PR