256 நடமாடும் மருத்துவ மனைகளின் சேவையை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு .மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை 17 மே 2022 256 நடமாடும் மருத்துவ மனைகளின் சேவையை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு .மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று ( 17.5.2022 ) சென்னை கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 389 நடமாடும் மருத்துவ மனைகளின் சேவையை தொடங்கி வைப்பதன் இரண்டாம் கட்டமாக 46 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக 256 நடமாடும் மருத்துவ மனைகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தொலை தூரத்தில் உள்ள கிராமங்களுக்கு , மாதந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் அங்கேயே சென்று நோய்களை கண்டறிந்து அதற்கான சிகிச்சையை நடமாடும் மருத்துவக்குழுக்கள் மூலம் அளித்திட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையிலான அரசால் 2007 -ஆம் ஆண்டு 100 நடமாடும் மருத்துவ வாகனங்களும் , 2008 -ஆம் ஆண்டு 285 நடமாடும் மருத்துவ வாகனங்களும் வாங்கப்பட்டது.

மொத்தம் 385 நடமாடும் மருத்துவக் குழுக்கள் உருவாக்கப்பட்டன.

ஒரு மருத்துவ குழுவில் ஒரு மருத்துவ அலுவலர் ஒரு செவிலியர் ஒரு ஓட்டுநர் ஒரு துப்புரவு பணியாளர் பணியமர்த்தப்பட்டு தொலை தூர கிராமங்களில் வாழும் மக்களுக்கு அவர்களின் இருப்பிடத்திலேயே  தேவையான மருத்துவ வசதி அளிக்கும் நோக்கத்தில் 385 வட்டாரங்களிலும் நடமாடும் மருத்துவக் குழு வாகனங்கள் மூலம் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்த 385 நடமாடும் மருத்துவக் குழு வாகனங்களை நடமாடும் மருத்துவமனைகளாக மேம்படுத்தி ஆய்வக நுட்புனர்களை நியமனம் செய்து ஆய்வக வசதிகளுடன் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு தரமான மருத்துவச் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

Read Also  அரசு வாகனம் அல்லாத வாகனங்களில் ‘ஜி' அல்லது ‘அ' என்ற எழுத்தைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - தமிழக அரசு.

2021-2022 – ஆம் ஆண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில் தொலைதுார கிராமங்களுக்கு மருத்துவ சேவையை வலுப்படுத்த 389 புதிதாக நடமாடும் மருத்துவக் குழு வாகனங்கள் ரூபாய் 70 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும் ” என்று அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் ஒரு வாகனத்திற்கு தலா ரூபாய் 18 இலட்சம் செலவில் தமிழ்நாட்டில் உள்ள 389 நடமாடும் மருத்துவ வாகனத்தை மாற்றுவதற்கு ரூபாய் 70.02 கோடி நிதியினை தேசிய நலவாழ்வு குழுமத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிதாக 389 வாகனங்கள் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மூலம் வாங்கப்பட்ட 389 வாகனங்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு அதன் சேவையை சேவையை தொடங்கி வைக்கும் அடையாளமாக முதற்கட்டமாக 133 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 8.4.2022 அன்று தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாவது கட்டமாக 256 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை மாண்புமிகு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டு நடமாடும் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையும் செய்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் , மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க . பொன்முடி , மாண்புமிகு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு . தா.மோ. அன்பரசன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு . மா . சுப்பிரமணியன் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா , துணை மேயர் திரு . மு.மகேஷ்குமார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் மரு. ஜெ . ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப. , பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் மரு . டி.எஸ் . செல்வவிநாயகம் , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *