கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் ரத்த வகையால் ஏற்படக்கூடிய தடைக்கு எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவர்கள் வெற்றிகரமாகத் தீர்வு கண்டுள்ளனர்!
சென்னை 18 மே 2022 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் ரத்த வகையால் ஏற்படக்கூடிய தடைக்கு எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவர்கள் வெற்றிகரமாகத் தீர்வு கண்டுள்ளனர்!
ஆயிரக் கணக்கானோருக்கு புதிய நம்பிக்கையை அளிக்கும் புதிய தொழில்நுட்பம்.
சென்னை, மே 18, 2022: முன்னணி அனைத்து அதிநவீன தொழில்நுட்ப வசதிகள், நுட்பங்கள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான எம்ஜிஎம் ஹெல்த்கேர்45 வயதான நோயாளி ஒருவருக்கு ஓரே ரத்த வகையைச் சாராத உயிருடன் உள்ளவரிடமிருந்து கல்லீரல் தானமாகப் பெற்று வெற்றிகரமாகப் பொருத்தி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை செய்துள்ளது.
12 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையை டாக்டர் தியாகராஜன் ஶ்ரீனிவாசன் தலைமையில் டாக்டர்கள் கார்த்திக் மதிவாணன் மற்றும் மயக்கவியல் மூத்த மருத்துவர்கள் டாக்டர் தினேஷ் மற்றும் டாக்டர் நிவாஷ் உள்ளிட்ட மருத்துவர்கள் அடங்கிய குழு செய்துள்ளது.
ஏபிஓ ரத்தக் குழு என்பது ஒன்றுக்கு ஒன்று ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்காது.
குறிப்பாகச் சிறுநீரகம், கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையின் போது தானமாகக் கொடுப்பவர் மற்றும் தானம் பெறுபவரின் ரத்த வகை மாறுபாடு மிகப் பெரிய தடையாக இருக்கிறது.
எம்ஜிஎம் ஹெல்த்கேரின் மருத்துவர்கள் ரத்த வகை ஆன்டிபாடி அப்சார்ப்ஷன் (glycosorb) கருவி என்ற புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இதற்குத் தீர்வு கண்டுள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் என்பவருக்கு நாட்பட்ட கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக அவர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருந்தார்.
இதற்காக இந்தியாவின் பல்வேறு மருத்துவ மனைகளுக்கும் அவர் சென்று வந்துள்ளார்.
உன்னிகிருஷ்ணனுக்குக் கல்லீரல் கிடைப்பதில் மிகப்பெரிய பற்றாக்குறை, அவருடைய ரத்த வகைக்கு பொருந்தும் கல்லீரல் கிடைக்காமை போன்றவை ஏற்பட்டது.
அவருடைய ரத்த வகைக்கு ஏற்ப மூளைச் சாவு அடைந்த நபரிடமிருந்து கல்லீரல் கிடைக்கவில்லை.
மேலும், அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் மத்தியிலிருந்து கல்லீரல் தானமாகப் பெற, அவருடைய ரத்த வகைக்கு ஏற்ற கல்லீரல் கிடைக்கவில்லை.
இது குறித்து அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்த பல்வேறு மருத்துவத் துறை நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவை வழிநடத்தியவரும் எம்ஜிஎம் ஹெல்த்கேரின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் எச்.பி.பி அறுவை சிகிச்சை நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் தியாகராஜன் ஶ்ரீனிவாசன் அவர்கள் கூறுகையில்…
“இந்த அறுவைசிகிச்சையானது மாற்று வாய்ப்புக்காகக் காத்திருக்கும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியிருக்கும் பலருக்கு நம்பிக்கையையும் மிக விரைவாக நலம் பெறுவதற்கான வாய்ப்புக்கும் வழிவகுத்துள்ளது.
எங்களுடைய குழுவானது பல வகைப்பட்ட ரத்தக் குழுவைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை செய்த அனுபவத்தைக் கொண்டுள்ளது.
இதில் அதிகரித்த நோய்த் தொற்று, புதிய கல்லீரலை உடல் நிராகரிப்பு உள்ளிட்ட பல்வேறு சவால்களைச் சமாளித்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
ஆனால், ரத்தத்தில் உள்ள ரத்த வகை ஆன்டிபாடிகளை மட்டும் உறிஞ்சி எடுக்கும் கருவி (glycosorb) என்ற புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்திய பிறகு மிகச்சிறந்த முடிவு கிடைத்துள்ளது.
இந்த சிக்கலான நெறி முறைகளைச் செய்வதற்குத் தேவையான வசதிகள் மற்றும் வளங்கள் சிறந்த மையங்களில் கூட பொதுவாகக் கிடைப்பதில்லை.
பிரத்தியேக கல்லீரல் நோய் சிகிச்சை அளிக்கும் மேம்பட்ட அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட மையங்களால் மட்டுமே இப்படிப்பட்ட அறுவைசிகிச்சையை செய்ய முடியும்” என்றார்.
அறுவை சிகிச்சை செயல்முறைகள் பற்றி டாக்டர் தியாகராஜன் அவர்கள் விவரிக்கையில…
முதலில் ரிட்டுக்சிமாப் (rituximab) மூலம் புதிய ரத்தக் குழு ஆன்டிபாடிகள் உற்பத்தியை நிறுத்தினோம்.
கிளைகோசார்ப் வடிகட்டியுடன் (glycosorb filter) மற்றும் சிறப்பு தூண்டல் முகவர் (basiliximab) மூலம் ஏற்கனவே இருக்கும் ரத்தக் குழு ஆன்டிபாடிகளை அகற்றி, உயிருள்ள நன்கொடையாளர் அளித்த கல்லீரலை, ரத்தக் குழுவுக்கு ஒத்துப் போகாத நன்கொடையாளருக்கு பொருத்தி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது” என்றார்.
மூத்த கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை மற்றும் எச்.பி.பி அறுவைசிகிச்சை நிறுவனத்தின் இணை இயக்குநர் டாக்டர் கார்த்திக் மதிவாணன் அவர்கள் கூறுகையில்…
“கடைசி நிலை கல்லீரல் சுருக்கம், கல்லீரல் புற்றுநோய் நோயாளிகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே மற்றும் சிறந்த தீர்வாக உள்ளது.
துரதிருஷ்டவசமாக போதுமான அளவில் கல்லீரல் தானமாகக் கிடைப்பது இல்லை.
இதனால் பற்றாக்குறை காரணமாக கல்லீரல் நோயாளிகள் அவதியுறுகின்றனர்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக ABO-incompatible (ABOi) grafts மூலம் தானம் அளிப்பதை அதிகரிக்க முடியும்.
சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேரின் கல்லீரல் நோய்கள், கல்லீரல் மாற்று மற்றும் எச்.பி.பி நிறுவனத்தின் குழு புதிய தொழில்நுட்பத்தை பயன் படுத்திக் கடந்த ஓராண்டில் இதுவரை நான்கு ABOi கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளது.
ABOi உறுப்பு மாற்றுக் கல்லீரலுக்கு மட்டுமல்ல சிறுநீரகத்துக்கும் பொருந்தும். ABOi அறுவை சிகிச்சை தற்போது சென்னையிலேயே கிடைக்கத் தொடங்கிவிட்டது.
மேலும், அனைத்து தரப்பு மக்களுக்கும் மலிவான கட்டணத்தில் இந்த சிகிச்சை கிடைக்கிறது” என்றார்.
மூத்த மயக்க மருந்து நிபுணர்கள் டாக்டர் தினேஷ் மற்றும் டாக்டர் நிவாஷ் கூறுகையில்…
“உயிருள்ளவரிடமிருந்து தானமாகப் பெற்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதில் மயக்க மருந்து ஆபத்து அதிகம்.
இருப்பினும் சிக்கலான பிரச்னைகளுக்கான புதுமையான தீர்வுகளுடன் கவனமாக ஒருங்கிணைக்கப்பட்ட திட்டம் மற்றும் அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் நோயாளியை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் வெற்றிகரமான முடிவு காண முடிந்தது” என்றனர்.
எம்ஜிஎம் ஹெல்த்கேரின் சிஇஓ ஹரீஷ் மணியன் அவர்கள் கூறுகையில்…
“தொழில்நுட்பத்தின் சமீபத்திய முன்னேற்றங்கள் ABO இணக்கமின்மைக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறையில் வெற்றிகரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற உயர் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதுடன் உயர் மருத்துவ அனுபவம் கொண்ட மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து நோயாளிகளுக்கு உயர் தர அறுவை சிகிச்சையை வழங்குவதில் எம்ஜிஎம் ஹெல்த்கேர் பெருமிதம் கொள்கிறது.
எம்ஜிஎம் ஹெல்த்கேர் புதிய அதிநவீன தொழில்நுட்பமான குறிப்பிட்ட ரத்தக் குழு ஆன்டிபாடி உறிஞ்சு (ஹைலி செலக்டிவ் பிளட் குரூப் ஆன்டிபாடி அப்சார்ப்ஷன்) கருவியைப் பயன்படுத்துவதன் மூலம் எம்ஜிஎம் ஹெல்த்கேரில் மேலும் தரமான மருத்துவ சேவைகளைத் தொடர்ந்து வழங்கும்” என்றார்.