மாரடைப்புடன், இதயக் கோளாறுள்ள 55-வயது பள்ளி ஆசிரியைக்கு  உயிர்காக்கும் பல்வேறு மருத்துவ செயல்முறைகளை வெற்றிகரமாக மேற்கொண்ட காவேரி மருத்துவமனையின் இதயவியல் மருத்துவர்கள்!  

சென்னை 19 ஜூலை 2022 மாரடைப்புடன், இதயக் கோளாறுள்ள 55-வயது பள்ளி ஆசிரியைக்கு உயிர் காக்கும் பல்வேறு மருத்துவ செயல் முறைகளை வெற்றிகரமாக மேற்கொண்ட காவேரி மருத்துவமனையின் இதயவியல் மருத்துவர்கள் !

  • ஒரு வார காலஅளவிற்குள் சிறப்பாக உயிர்காக்கும் 3 மருத்துவ செயல்முறைகள் செய்யப்பட்டன 
  • தமிழ்நாட்டில் முதன்முறையாக ஹார்ட் ரிதம் சேவைகள் காவேரி குழும மருத்துவமனைகளில் தொடங்கப்பட்டுள்ளது 
  • படபடப்புகள், மயக்கமடைதல், உணர்விழந்த நிலை போன்ற ஹார்ட் ரிதம் கோளாறு அறிகுறிகள் உள்ள நோயாளிகளுக்கும்  மற்றும் திடீர் மாரடைப்பிலிருந்து மீண்டு உயிர் பிழைத்தவர்களுக்கும் சிகிச்சைக்கான  தொடர்புக்கு ஒரு பிரத்யேக 24*7 உதவி எண் நிறுவப்பட்டுள்ளது.  

சென்னை: 19 ஜுலை 2022:  தமிழ்நாட்டின் பன்முக சிறப்பு மருத்துவமனை சங்கிலித்தொடர் நிறுவனங்களில் முதன்மை வகிக்கும் காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான சென்னை, காவேரி மருத்துவமனை, மிகவும் ஆபத்தான இதயத்தாள / லய பிரச்சனைகள் இருந்த 55 வயது பெண்மணியின் உயிரைக் காப்பதற்காக மூன்று மருத்துவ செயல்முறைகளை வெற்றிகரமாக செய்திருக்கிறது.  

55 வயதுடைய ஒரு பள்ளி ஆசிரியையான திருமதி. ராதா பாலாஜி, காவேரி மருத்துவமனையின் அவசரநிலை சிகிச்சை துறைக்கு கடுமையான இதய நோய் பாதிப்புடன் அழைத்து வரப்பட்டார்கடுமையான மாரடைப்புடன் மெதுவான இதயத்துடிப்பு மற்றும் இருதய அதிர்ச்சி (உடலுக்குத் திறனுடன் இரத்தத்தை பம்ப் செய்வதற்கு இதயத்தால் இயலாத காரணத்தினால் இரத்த அழுத்தமானது ஆபத்தான அளவுக்கு குறைவதை விளைவிப்பது) போன்ற சிக்கல்கள் அவருக்கு இருப்பது கண்டறியப்பட்டது.  

உடனடியாக அவருக்கு பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்டியும் மற்றும் அடைப்பு இருந்த இரத்தநாளத்தில் (வலது இதயத்தமனியில்) ஸ்டெண்ட் பொருத்துதலும் செய்யப்பட்டன. இருதய அதிர்ச்சியின் காரணமாக, இந்த செயல்முறையை பாதுகாப்பாக மேற்கொள்வதற்கு இன்ட்ராஆர்டிக் பலூன் பம்ப் (IABP) என்ற சாதனத்தின் உதவி அவருக்குத் தேவைப்பட்டதுஇச்செயல்முறையின்போதும் மற்றும் அதற்குப் பிறகும் மிக ஆபத்தான இதய லய பிறழ்வான இதயக்கீழறையில் மிகை இதயத்துடிப்பு (VT) நிலை அவருக்கு திரும்பத் திரும்ப ஏற்பட்டதுஇதனால் ஒரு வெளியார்ந்த உதறல்நீக்கி சாதனத்திலிருந்து குறைந்தபட்சம் 14 அதிர்ச்சிகள் அவருக்குத் தேவைப்பட்டன.  

Read Also  கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி (GGHC) - ஒரு பிரத்யேக ஆம்புலன்ஸ் கண்காணிப்பு செயலியான MSIRENPILOT ஐ அறிமுகப்படுத்துகிறது!!

சென்னை காவேரி மருத்துவமனையின் இதய மின் உடலியங்கியல் மருத்துவத் துறையின் டாக்டர். தீப் சந்த் ராஜாஇந்நோயாளியின் நிலைமை மற்றும் அவருக்கு செய்யப்பட்ட பல்வேறு மருத்துவ செயல்முறைகள் குறித்து கூறியதாவது: “இத்தகைய மருத்துவ நிலையானது, போஸ்ட் – MI VT ஸ்டார்ம் என அழைக்கப்படுகிறது; அதாவது ஒரு புயலின் மைய சுழல் பகுதியில் நோயாளி சிக்கியிருப்பதையே இது குறிக்கிறதுமருந்துகளின் மூலம் இயல்பு நிலைக்கு VT திரும்பவில்லைஇதயத்தின் இடப்பகுதியில் உள்ள மிட்ரல் வால்வு சரிவு மற்றும் நீண்ட QT சிண்ட்ரோம் ஆகியவற்றின் காரணமாக, இப்பெண்ணின் நிலைமை மேலும் சிக்கலானதாக இருந்ததுஆகவே, 4வது நாளன்று, இதய லயமின்மையை ஏற்படுத்துகின்ற செல்களை அழிப்பதற்கான ஒரு செயல்முறையான ரேடியோ ஃப்ரீக்வென்சி அப்லேஷன் என்ற மருத்துவ செயல்முறைக்காக ஹைபிரிட் கேத்லேப் அறுவைசிகிச்சை அறைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்இதய கீழறையில் மிகை இதயத்துடிப்பை முடுக்கி விடுகின்ற ஆதாரத்தை கண்டறிவதற்காக ஒரு மேம்பட்ட முப்பரிமாண நேவிகேஷன் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது.  6 மணி நேரம் நீடித்த கடினமான நீண்ட செயல்முறைக்குப் பிறகு VT பிரச்சனையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்அதன்பிறகு அவரது இரத்த அழுத்தமும், இரத்தஓட்ட செயல்பாடும் விரைவாகவே மேம்பட்டனஆபத்துகரமான இதய லய பிரச்சனைகளுக்கான சாத்தியக்கூறு அந்நோயாளிக்கு அதிகமாக இருந்ததால், இத்தகைய பாதிப்புகள் எதிர்காலத்தில் ஏற்படுவதிலிருந்து அவரைக் காப்பதற்காக அடுத்த நாளன்று சருமத்தின் ஊடாக டிஃபைபிரிலேட்டர் என்ற உதறல் நீக்கி சாதனமும் அவருக்குப் பொருத்தப்பட்டதுஅதன்பிறகு படிப்படியாக அதிகரிக்கப்பட்ட மொபிலிசேஷன் மற்றும் ஊட்டச்சத்துடன் அவருக்கு இதய மறுவாழ்வு சிகிச்சை வழங்கப்பட்டது.  14-ம் நாளன்று குணமடைந்த நிலையில் மருத்துவமனையிலிருந்து அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.” 

Read Also  பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 60 வயது முதியவர் ஃபோர்டிஸ் வடபழனியில் ஆழ்ந்த மூளை தூண்டுதலுக்குப் பிறகு புதிய வாழ்க்கையைப் பெற்றார் .!!

காவேரி மருத்துவமனையில் நவீன உட்கட்டமைப்பு வசதி, ஹைபிரிட் கேத் லேப், இதயவியல் மருத்துவர்கள், இதயவியல் சார்ந்த உணர்விழப்புத்துறை மருத்துவர்கள் மற்றும் இதய அறுவைசிகிச்சை நிபுணர்களை உள்ளடக்கிய சிறப்பான ஒருங்கிணைப்புடன் இயங்கும் மருத்துவக் குழுவினர் என்ற அம்சங்களே, இந்நோயாளிக்கு இத்தகைய சிக்கலான மருத்துவ செயல்முறைகளை செய்வதற்கான நம்பிக்கையை எனக்கு வழங்கியதுஇந்த செயல்முறைகள் இல்லையென்றால், VT புயல் (ஸ்டார்ம்) என அழைக்கப்படும் கடுமையான சிக்கலிலிருந்து இந்நோயாளியை வெளியே கொண்டு வருவது  சாத்தியப்பட்டிருக்காது.” என்று டாக்டர். தீப் சந்த் ராஜா மேலும் விளக்கமளித்தார்கான்பெர்ரா ஹாஸ்பிட்டல்ஸ் மற்றும் ஆஸ்திரேலியன் நேஷனல் யுனிவெர்சிட்டியில் இதய மின் உடலியங்கியல் சிகிச்சையில் 3 ஆண்டுகள் மேம்பட்ட பயிற்சியை பெற்றதற்குப் பிறகு ஆஸ்திரேலியாவிலிருந்து டாக்டர். தீப் சந்த் ராஜா திரும்ப வந்திருக்கிறார்.  

ஆரம்பநிலை சிகிச்சைக்கான இடையீட்டு இதயவியல் நிபுணரான டாக்டர். சுந்தர் C. கூறியதாவது: “உரிய நேரத்தில் செய்யப்பட்ட ஆஞ்சியோபிளாஸ்டி, ஒரு மிகப்பெரிய மாரடைப்பு மற்றும் இருதய அதிர்ச்சியிலிருந்து இப்பெண்ணை காப்பாற்றியதுஇச்சிகிச்சையின்போதும் மற்றும் அதற்குப் பிறகும் VT ஸ்டார்ம் இருந்ததால், சிக்கலான சூழலே நிலவியதுஅப்பெண்ணுக்கு ஏற்கனவே இருந்த நீண்ட VT சிண்ட்ரோமே இதற்கு காரணம்அப்லேஷன் (அகற்றல்) செயல்முறையை செய்வதன் வழியாக இதயவியல் மின் உடலியங்கியல் நிபுணர் உறுதி செய்தார். அவசியமான உட்கட்டமைப்பு வசதி இல்லையென்றால், இந்த சிக்கலான சூழலை நிர்வகிப்பது சாத்தியமில்லாமல் போயிருக்கும்மருத்துவ பணியாளர்களது குழுவின் ஆதரவும் மற்றும் நோயாளியின் குடும்பத்தினர் வைத்திருந்த தளராத நம்பிக்கையும் இந்த வெற்றியை எட்டுவதற்கு எங்களுக்கு உதவியிருக்கிறது.” 

சென்னை, காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குனர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ், வெற்றிகரமான இச்சிகிச்சை குறித்து கூறியதாவது: “ஆரம்பநிலை சருமத்தின் ஊடான ஆஞ்சியோபிளாஸ்டி என்பது உயிர்காக்கும் சிகிச்சையாக இருக்கிறதுஎனினும், ஒரு VT ஸ்டார்ம் என்பதில் சிக்கிய இந்நோயாளியின் உயிரை காப்பதற்கு ஆபத்துகரமான இதய லய பிரச்சனையை அகற்றுவதற்கான ரேடியோ ஃப்ரீக்வென்சி சிகிச்சையும் மிக முக்கியமானதுஎக்மோ, ஹைபிரிட் கேத்லேப் மற்றும் அவசியமான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன், சர்வதேச அளவில் பயிற்சி பெற்ற இதய மின் உடலியங்கியல் மருத்துவர்களும் எமது மருத்துவமனைகளில் இருப்பதால், இதய லய கோளாறுகளில் இத்தகைய கடும் சிக்கல்களுக்கு எங்களால் சிகிச்சையளிக்க முடிகிறதுபள்ளி ஆசிரியையான இச்சிறப்பான பெண்மணியின் உயிரைக் காப்பாற்றியதற்காக டாக்டர். சி. சுந்தர், டாக்டர். தீப் சந்த் ராஜா மற்றும் மருத்துவக் குழுவினரை நான் மனமார பாராட்டுகிறேன்.” 

Read Also  பிரசாந்த் கருத்தரிப்பு மற்றும் பெண்கள் மையம் சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.ஆர். ராஜா அவர்கள்  பங்கேற்று துவக்கி வைத்தார்.!!

காவேரி மருத்துவமனை, டாக்டர். S. தீப் சந்த் ராஜா, இதயவியல் மற்றும் இதய மின் உடலியங்கியல் மருத்துவர் –  (சென்னை), டாக்டர். சக்திவேல்மின் உடலியங்கியல் மருத்துவர் (சென்னை), டாக்டர். வி. விஜய் சேகர்இதயவியல் மற்றும் இதய மின் உடலியங்கியல் மருத்துவர் (திருச்சி) மற்றும் டாக்டர். T. ஜோசப், இதய இடைவினையாற்றல் மற்றும் மின்உடலியங்கியல் மருத்துவர் (திருச்சி) ஆகிய  நான்கு இதய மின் உடலியங்கியல் (இதய லய சிறப்பு நிபுணர்) சிறப்பு நிபுணர்களை தமிழ்நாட்டில் கொண்ட ஒரே மருத்துவமனையாகும். சென்னை, திருச்சி மற்றும் திருநெல்வேலியில் ஆகிய இடங்களில் 3-முப்பரிமாண எலக்ட்ரோபிசியாலஜி நேவிகேஷன் அமைப்புகளையும் காவேரி மருத்துவமனை கொண்டிருக்கிறது

ஹார்ட் ரிதம் சிறப்பு மருத்துவர்களை தொடர்புகொள்ள பிரத்யேக 24*7 ஹெல்ப்லைன் +91 80562 04449 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம் அல்லது வாட்ஸ்அப் செய்யலாம். ஏதேனும் விசாரணைகள் இருந்தால், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் எழுதலாம்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *