“விக்ரம்” திரைப்படம் இத்தனை கோடிக்கு விற்பனையா?
சென்னை 26 மே 2022 “விக்ரம்” திரைப்படம் இத்தனை கோடிக்கு விற்பனையா?
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க, அனிருத் இசையமைக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உலக நாயகன் கமல்ஹாசன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன் உள்ளிட்ட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப் படம்தான் ‘விக்ரம்’.
’விக்ரம்’ திரைப்படம், வெளியாகும் முன்பே மிகப்பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ளது.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து இந்த “விக்ரம்” திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
உலகம் முழுவதும் ஜூன் 3-ஆம் தேதி விக்ரம் திரைப்படம் வெளிவருகிறது.
இந்த நிலையில் திரைப் படத்தின் டீஸர் டிரைலர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவற்றுக்குப் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
காரைக்குடி, சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு கட்டங்களாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
இறுதிகட்ட படப்பிடிப்பு, சில வாரங்களுக்கு முன்னர் முடிந்தது.
இந்த விக்ரம் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே 172 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘விக்ரம்’ தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
ரெட் ஜெயன்ட் நிறுவனம் 35 கோடி ரூபாய் மதிப்பில் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது.
அதேபோல், கேரள உரிமையை ஷிபு தமீம் 5.50 கோடிக்கும், தெலுங்கு உரிமையை நடிகர் நிதினின் நிறுவனம் 5.50 கோடிக்கும், கர்நாடக உரிமையை கற்பக விநாயகா ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் 4.25 கோடிக்கும் கைப்பற்றியுள்ளன.
இதுதவிர, ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம் அனைத்து மொழிகளுக்கான தொலைக் காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமையை ரூ.93 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது.
ஏற்கனவே பாடல் உரிமம் 4.25 கோடிக்கும், வெளிநாட்டு உரிமை 25 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது. ஆக மொத்தம் ரூபாய். 172 கோடி அளவுக்கு ரிலீஸுக்கு முன்பே வியாபாரம் ஆகியுள்ளதாம்.
உலக நாயகன் கமல்ஹாசன் திரைப்படங்களிலேயே இதுவரை இல்லாத அளவு அதிகத் தொகைக்கு இந்த விக்ரம் திரைப்படம் விற்பனையாகியுள்ளது..