நீர்வளத்துறை திட்ட உருவாக்கப் பிரிவு பொறியாளர்களுக்கு 214 மடிக்கணினிகளை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்!

சென்னை 05 ஜூன் 2022 நீர்வளத்துறை திட்ட உருவாக்கப் பிரிவு பொறியாளர்களுக்கு 214 மடிக்கணினிகளை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்!

நீர்வளத்துறை சார்பில் திட்ட உருவாக்கப் பிரிவைச் சேர்ந்த 214 பொறியாளர்களுக்கு 04.06.2022 அன்று தலைமைச் செயலகத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மடிக்கணினிகளை மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர். சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., முதன்மை தலைமைப் பொறியாளர் திரு. கே. ராமமூர்த்தி, தலைமைப் பொறியாளர் திரு. க. பொன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

23.08.2021 அன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற 2021-2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரில், மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள், தலைமைப் பொறியாளர், திட்ட உருவாக்கப்பிரிவில் உள்ள அனைத்து உதவிப் பொறியாளர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்களுக்கு 9 DGPS, 214 மடிக்கணினிகள், 214 கையடக்க GPS மற்றும் 500 பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு ரூ.9.50 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும் என அறிவித்தார்கள். அறிவிப்பினை தொடர்ந்து, முதற்கட்டமாக 214 மடிக்கணினிகள் வாங்குவதற்கு ரூ.1.90 கோடி நிதி, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், முதல் நிகழ்வாக, புவியியல் தகவல் அமைப்பு (GIS) மற்றும் அதன் தொடர்புடைய சர்வே மென்பொருட்களுக்கு மிகவும் இணக்கமாக செயல்படும் (11th Generation intel i7) மடிக்கணினிகள் 214 எண்கள் Elcot மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேற்காணும் 11th Generation Intel i7 சமீபத்திய பதிப்புடன் (Latest Version) கூடிய மடிக்கணினிகளை பயன்படுத்தி

Read Also  நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 21 முடிவுற்ற திட்டப்பணிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.!

திட்ட உருவாக்கப் பொறியாளர்களால் பணிகளை மிகவும் விரைவாகவும், துல்லியமாகவும்
செயல்படுத்த இயலும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *