தமிழ்நாட்டின் 235வது சமத்துவபுரத்தை திறந்து வைத்தார் தமிழக முதல்வர்..!
சென்னை 08 ஜூன் 2022 தமிழ்நாட்டின் 235வது சமத்துவபுரத்தை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் ..!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் 235வது சமத்துவபுரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சிவகங்கை மாவட்டம் கோட்டை வேங்கைபட்டியில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 1.90 கோடி செலவில் 100 சமத்துவபுர வீடுகள், அங்கன்வாடி மையம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய பெரியார் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டின் 235வது சமத்துவபுரத்தை ரிப்பன் வெட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் திருவுருவ சிலையை திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பெரியார் சிலைக்கு அமைச்சர்கள், பெரியகருப்பன், கே.என்.நேரு, ராஜகண்ணப்பன், மூர்த்தி உள்ளிட்டோரும் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து கோட்டை வேங்கைபட்டியில் அமைக்கப்பட்ட சமத்துவபுரம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அனைத்து பயனாளிகளுடன், முதல்வர், மற்றும் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், சிறப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் குழு புகைப்படங்களை எடுத்தனர்.