இந்திய தாய்பாலூட்டும் நடைமுறையில் மருத்துவ நிகழ்நிலைத் தகவல்களின் (Clinical updates in Indian breastfeeding practice) 4-வது கருத்தரங்கு! சிம்ஸ் மருத்துவமனை மற்றும் ஹேப்பி மாம்ஸ் ஹெல்த்கேர் சர்வீசஸ் இணைந்து நடத்தின!

சென்னை 16 ஜூலை 2022 இந்திய தாய்பாலூட்டும் நடைமுறையில் மருத்துவ நிகழ்நிலைத் தகவல்களின் (Clinical updates in Indian breastfeeding practice) 4-வது கருத்தரங்கு! சிம்ஸ் மருத்துவமனை மற்றும் ஹேப்பி மாம்ஸ் ஹெல்த்கேர் சர்வீசஸ் இணைந்து நடத்தின!

சென்னை, 16 ஜுலை 2022: சென்னை மாநகரில் பன்முக சிறப்பு சிகிச்சை மருத்துவமனைகளுள் முதன்மை வகிக்கும் சிம்ஸ் மருத்துவமனை, தாய்ப்பாலூட்டும் பருவத்தின்போது மார்பகம் மற்றும் மார்புக்காம்பில் வலி தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிக்கவும் மற்றும் நோயறிதலில் நிகழ்நிலைத் தகவல்களை ஆராயவும் ஒரு மருத்துவ கருத்தரங்கை நடத்தியது.  இந்திய தாய்ப்பாலூட்டும் நடைமுறையில், மருத்துவ ரீதியிலான நிகழ்நிலைத் தகவல்கள் என்பதன் ஒரு பகுதியான இக்கருத்தரங்கு, ஹேப்பி மாம்ஸ் ஹெல்த்கேர் சர்வீசஸின் தோழமையோடு நடைபெற்றது.  தென்னிந்தியா முழுவதிலுமிருந்து இத்துறையில் பிரபலமான 100 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர்.  இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக திருமதி. வளர்மதி ஐ.ஏ.எஸ். பங்கேற்று இம்மருத்துவக் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.  பிரசவத்திற்காக காத்திருக்கும் மற்றும் பிரசவித்திருக்கும் அன்னையர்களுக்கு உதவுவதற்கான தாய்ப்பாலூட்டுதல் சேவைகளை நெறிப்படுத்த இந்நிகழ்வின்போது, தாய்ப்பாலூட்டல் மேலாண்மை கிளினிக் (LACTATION MANAGEMENT CLINIC) என்ற புதிய பிரத்யேக சேவை தொடங்கப்படுவதையும் சிம்ஸ் மருத்துவமனை அறிவித்தது.  

இந்நிகழ்வின்போது பேசிய டாக்டர். ஜெயஶ்ரீ ஜெயகிருஷ்ணன் (மருத்துவ இயன்முறை சிகிச்சை நிபுணர் – ஹேப்பி மாம் ஹெல்த்கேர்), “தாய்ப்பாலூட்டல் உயிர்களை காப்பது மட்டுமின்றி, தாய்ப்பாலூட்டும் பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் நலவாழ்வையும் மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.  தாய்ப்பாலூட்டல் மீது உடல்நல பராமரிப்பு சேவையில் ஈடுபட்டுள்ள மருத்துவ வல்லுநர்களுக்கு இதுகுறித்த கல்விசார் அமர்வுகள் அத்தியாவசியமானவையாக இருக்கின்றன.  இதுகுறித்த அறிவு மற்றும் திறன்பகிர்வு திட்டங்கள், மாறுபட்ட மருத்துவ சூழல்களில் தாய்ப்பாலூட்டல் உள்ள சவால்களை கையாள்வதற்கு தேவைப்படுகின்ற அறிவையும், திறன்களையும் சிறப்பாக கொண்டிருப்பதற்கு அவர்களுக்கு உதவுகின்றன.  இதற்கு முன்பு இத்தலைப்பின் மீது நடைபெற்ற கருத்தரங்குகள், மருத்துவ சமூகத்தினரின் வரவேற்பையும், அங்கீகாரத்தையும் சிறப்பாக பெற்றிருந்தன.  இந்த அங்கீகாரம் தான் இக்கருத்தரங்கின் நான்காவது பதிப்பை ஏற்பாடு செய்து நடத்த எங்களை ஊக்குவித்திருக்கிறது,” என்று கூறினார்.  

Read Also  உலக இருதய தின அனுசிரப்பை முன்னிட்டு, ‘ரீஸ்டார்ட் ஹார்ட் ஃபவுண்டேஷன்’ - ஐ தொடங்கும் காவேரி மருத்துவமனை !!

சிம்ஸ் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தை மருத்துவப் பிரிவின் முதுநிலை நிபுணர் டாக்டர். E. பத்மப்பிரியா இந்நிகழ்ச்சியின்போது கூறியதாவது: “பிரசவித்திருக்கும் தாய்மார்களுக்கும் மற்றும் விரைவில் அன்னையராக ஆகவிருக்கும் பெண்களுக்கும் உதவுவதற்கென்றே நடைபெறுகின்ற இந்த கல்விசார் கருத்தரங்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.  தாய்ப்பாலூட்டல் மீது விரிவான கண்ணோட்டத்தை இக்கருத்தரங்கு பங்கேற்பாளர்களுக்கு சிறப்பாக வழங்கியது.  தாய்ப்பாலூட்டும்  காலத்தின்போது அநேகமாக நிகழக்கூடிய வெவ்வேறு உடல்நல பாதிப்பு நிலைகள் மற்றும் தொற்றுகள் பற்றி நிகழ்நிலைத் தகவல்களையும் மற்றும் அவைகளை கையாள்வது குறித்த திறனையும் இக்கருத்தரங்கு வழங்கியது.” 

சிம்ஸ் மருத்துவமனையின் துணைத்தலைவர் டாக்டர். ராஜு சிவசாமி இம்மருத்துவ கருத்தரங்கில் உரையாற்றியபோது, “தென்னிந்தியா முழுவதிலுமிருந்து ஏறக்குறைய 100 சிறப்பு மருத்துவர்கள் மற்றும் செவிலியப் பணியாளர்கள் பங்கேற்றிருப்பது இம்மாநாட்டின் மிகப்பெரிய வெற்றியை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது.  இந்த வெற்றிகரமான நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தியதில் சிம்ஸ் மருத்துவமனையில் பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கிறது.  தாய்ப்பாலூட்டல் மற்றும் தாய்ப்பால் சுரப்பு என்பவை, மருத்துவர்களால் அதிகம் கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கியமான விஷயங்களாகும்.  இவை மீது மருத்துவ ரீதியிலான நிகழ்நிலைத் தகவல்களை எடுத்துரைக்கவும் மற்றும் விவாதிக்கவும் இச்சிறப்பு பிரிவில் செயல்படும் நிபுணத்துவம் மிக்க மருத்துவர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்றிருக்கின்றனர்.  சிறப்பான நிகழ்நிலைத் தகவலை தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்து, திறனை மேம்படுத்தும் இந்த அமர்வை நடத்துவதற்கு ஹேப்பி மாம் ஹெல்த்கேர் சர்வீசஸ் உடன் இணைந்து செயல்பட்டிருப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்,” என்று குறிப்பிட்டார். 

இக்கருத்தரங்கில் பல்வேறு நேர்வு ஆய்வுகள் (Case Studies) சமர்ப்பிக்கப்பட்டன.  மார்பக அழற்சி, பூஞ்சைத் தொற்றுகள், மார்பகம் மற்றும் மார்புக்காம்பு வலி மீது தாக்கம் ஏற்படுத்தும் மடங்காத நாக்கு (Ankyloglossia) மற்றும் கருவுற்ற காலத்தின்போது தாய்ப்பாலூட்டல் போன்ற முக்கியமான மற்றும் நிகழ்நிலைத் தலைப்புகள் மீது இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டன.  சருமவியல் பாதிப்புகள், தீங்கற்ற பாதிப்புகள், மார்பக மற்றும் மார்புக்காம்பு வலியில் உளவியல் சார்ந்த அம்சங்கள், தாய்ப்பாலூட்டலை நிறுத்தும் செயல்முறை ஆகியவையும் இக்கருத்தரங்கின் பேசுபொருட்களாக இருந்தன.  மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ், சென்னை பிரெஸ்ட் சென்டர், சென்னை விமன் கிளினிக், மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் உட்பட, பல பிரபல மருத்துவமனைகளைச் சேர்ந்த அனுபவமும், நிபுணத்துவமும் கொண்ட மருத்துவர்கள் மேற்குறிப்பிடப்பட்ட வெவ்வேறு பாதிப்பு நிலைகள் பற்றி எடுத்துரைத்தனர் மற்றும் தாய்ப்பாலூட்டல் செயல்பாட்டில் மருத்துவ ஆலோசகராக பணியாற்றும் இந்திய சட்ட தகுதிநிலை குறித்தும் இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.  

Read Also  வடபழனி ஃபோர்டிஸ் மருத்துவ மனையில் நடைபெற்ற அதிக அபாய இதய அறுவை சிகிச்சை 68 வயது விவசாயியின் உயிரைக் காப்பாற்றியது.!!

குழந்தைகள் மருத்துவவியல் துறை குறித்து:  சிம்ஸ் மருத்துவமனையில் இயங்கி வரும் குழந்தைகள் மருத்துவவியல் துறை புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தைகளிலிருந்து, 18 ஆண்டுகள் வயது வரையிலான இளையோர் வரை பல்வேறு நோய்கள் மற்றும் பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க முழுமையான வசதிகளைக் கொண்டிருக்கிறது. அதிக இடர்ஆபத்துள்ள பச்சிளம் குழந்தைகளை கையாள்வதற்கு முழுமையான வசதிகளை உள்ளடக்கிய பிரத்யேக தீவிர சிகிச்சை பிரிவுகள்  (NICU மற்றும் PICU ஆகிய இரண்டும்) இத்துறையில் இயங்கி வருகின்றன.  ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 300 சிக்கலான நேர்வுகளை இந்த தீவிர சிகிச்சை பிரிவுகள் வெற்றிகரமாக கையாள்கின்றன.  உயர்திறன் வாய்ந்த குழந்தை நல மருத்துவர்கள், பச்சிளம் குழந்தை நல மருத்துவர் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்களைக் கொண்டிருக்கும் இத்துறை, நோய் பாதிப்புள்ள மற்றும் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை (26 வாரமே கர்ப்பத்தில் இருந்த குழந்தை இங்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் உடல்தேறி உயிர் பிழைத்திருப்பது குறிப்பிடத்தக்கது) திறம்பட கையாள்வதற்குத் தேவையான நவீன, சாதனங்களையும், தொழில்நுட்பத்தையும், சிறந்த நிபுணத்துவத்தையும் கொண்டிருக்கிறது. 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *