தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!

சென்னை 18 ஜூலை 2022 தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!

மாதம் 101 – 200 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு 27.50 காசுகள் மின் கட்டணம் உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

201 – 300 யூனிட் வரை பயன் படுத்துவோருக்கு மாதம் ரூ. 72.50 காசுகள் உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

301 – 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.147.50 காசுகள் உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

401 – 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு  ரூ.297.50 காசுகள் கூடுதல் மின் கட்டணம் உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

501 – 600 யூனிட் வரை ரூ. 155 காசுகள் கூடுதல் மின் கட்டணம் உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

7601 – 00 யூனிட் வரை ரூ.275 காசுகள் கூடுதல் மின் கட்டணம் உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட் ஒன்றிற்கு ரூ.1 உயர்த்த பரிசீலனை. வணிக மின் நுகர்வோருக்கு ரூ.50 உயர்த்த பரிசீலனை.

கேஸ் இணைப்பை போல, 100 யூனிட் இலவச மின்சாரத்தை நுகர்வோர் வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் புதிய திட்டம் அறிமுகம்.

விசைத்தறி நுகர்வோர்களுக்கு 750 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தினால் யூனிட் ஒன்றுக்கு 70 பைசா உயர்த்த பரிசீலனை.

மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை நிறுத்துவோம் என மத்திய அரசு எச்சரிக்கை

Read Also  வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் "கப்பலோட்டிய தமிழன்" திரைப்படம் நவீன தொழில் நுட்பத்தில் திரையிடப்பட்டது!!!

இவ்வாறு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *