சிம்ஸ் மருத்துவமனையில் உலக ஐவிஎஃப் தின கொண்டாட்டம்! பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி !

சென்னை 25 ஜூலை 2022 சிம்ஸ் மருத்துவமனையில் உலக ஐவிஎஃப் தின கொண்டாட்டம்! பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி !

குழந்தைகளுக்கான ஒரு பிரத்யேக கேக் வெட்டும் நிகழ்வு சிம்ஸ் மருத்துவமனையில் சிறப்பாக நடைபெற்றது 

சென்னை, ஜுலை 25, 2022: சென்னையின் முன்னணி பன்முக சிறப்பு சிகிச்சை மையமான  சிம்ஸ் மருத்துவமனை, உலக ஐவிஎஃப் தின அனுசரிப்பின் ஒரு அங்கமாக பெற்றோர்களுக்கும் மற்றும் சிறார்களுக்கும் ஒரு விழிப்புணர்வு நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தியது.  இந்நிகழ்வின்போது குழந்தைப்பேறு என்ற இலக்கை எட்டுவதற்கான தங்களது உணர்ச்சிப்பூர்வமான வாழ்க்கைப் பயணத்தைப் பற்றியும் மற்றும் தங்களது வாழ்க்கையை அது எப்படி மாற்றியிருக்கிறது என்றும் பெற்றோர்கள் பகிர்ந்துகொண்டனர்.  சிம்ஸ் மருத்துவமனையில் ஐவிஎஃப் என்ற செயற்கை கருத்தரிப்பு மூலம் பிறந்த 30 அற்புத குழந்தைகளுக்கு இந்நிகழ்வின் பங்கேற்பு வேடிக்கையும், விளையாட்டும் நிறைந்த மகிழ்ச்சியான மாலைப்பொழுதாக அமைந்தது.  சிம்ஸ் மருத்துவமனையில் ஐவிஎஃப் சிகிச்சையின் மூலம் பிறந்த அழகான  சின்னஞ்சிறிய குழந்தைகளுக்கு  கேக் வெட்டி பகிர்ந்துகொள்ளும் நிகழ்வும் இடம்பெற்றது. சிம்ஸ் மருத்துவமனையில் இயங்கி வரும் மகப்பேறியல், மகளிர் நலவியல் மற்றும் ஐவிஎஃப் சிகிச்சை மையத்தில் மிக நவீன தொழில்நுட்பமும், அனுபவமும், திறனும் மிக்க மருத்துவமும், மிகச்சிறந்த மேம்பட்ட தீர்வுகளும் கிடைக்கப்பெறுகின்றன.  குழந்தையியல் மருத்துவ துறையைச் சேர்ந்த மருத்துவர்களும் மற்றும் அதன் பணியாளர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.  

தேசிய குடும்பநல சர்வேயில் கிடைக்கப்பெற்ற சமீபத்திய புள்ளியியல் விவரங்களின்படி, இந்தியாவில் மொத்த கருவுருத்திறன் விகிதம் 2.2 என்பதிலிருந்து, நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகள் உட்பட, பல்வேறு காரணங்களினால் 2.0 என்ற அளவிற்கு குறைந்திருக்கிறது.  கருவுற இயலாமை என்ற பிரச்சனை எண்ணற்ற தம்பதியரை உணர்வு ரீதியாக பாதிக்கிறது.  ஐவிஎஃப் போன்ற நவீன சிகிச்சை செயல்முறைகள் வழியாக தங்களுக்கென குழந்தைச் செல்வம் வேண்டுமென்ற தங்களது கனவை பூர்த்தி செய்கின்றனர்.  இந்த மருத்துவ செயல்முறையானது, இயல்பாக கருத்தரிக்க இயலாத பெண்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்ற சமூக அவப்பெயரை துடைத்தெறியவும், உணர்வு ரீதியான சவால்களை சமாளிக்கவும், வெற்றிகரமாக பெற்றோர்களாகவும் ஆவதற்கு ஐவிஎஃப் செயல்முறை சிறப்பான தீர்வை வழங்கியிருக்கிறது.  

Read Also  காவேரி மருத்துவமனையில் நீரிழிவு நோயற்ற வாழ்வை திரும்பப் பெறும் செயல் திட்டத்தை மாண்புமிகு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.!!

சிம்ஸ் மருத்துவமனையில் இயங்கி வரும் மகப்பேறியல், மகளிர் நலவியல் மற்றும் ஐவிஎஃப் சிகிச்சை மையத்தின் இயக்குனரும், முதுநிலை மருத்துவ நிபுணருமான டாக்டர். பி.எம். கோபிநாத் இதுகுறித்து கூறியதாவது: “திருமணத்திற்குப் பிறகு குழந்தைப்பேறு வேண்டுமென்று பல தம்பதியரின் கனவாகவும், பிரார்த்தனையாகவும் எப்போதுமே இருந்து வருகிறது.  கருவுற இயலாமை என்ற பிரச்சனைக்கான சிகிச்சைகளில் ஐவிஎஃப் ஆல் கிடைத்திருக்கின்ற  ஆராய்ச்சியின் பலன்களும், தீர்வுகளும், மகப்பேறியல் மற்றும் மகளிர் நலவியல் செயல்தளத்தையே உண்மையிலேயே புரட்சிகரமாக மாற்றியிருக்கிறது.  2015 – ம் ஆண்டிலிருந்து, 2022-ம் ஆண்டில் இதுவரை 2152-க்கும் அதிகமான நேர்வுகளை நாங்கள் கையாண்டிருக்கிறோம்.  இச்செயல்முறைகளுக்கு இக்குழந்தைகளை வெற்றிகரமாக பிரசிவித்திருக்கின்ற பெற்றோர்களோடும், அக்குழந்தைகளோடும் இந்த மகிழ்ச்சிகரமான நிகழ்வில் பங்கேற்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். கருவுறல் திறனின்மை தொடர்பாக மகப்பேறியல் பல்வேறு சவால்களை தம்பதியர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. கருக்குழல் பழுதுகள், பிசிஓக்கள், குறைவான விந்து எண்ணிக்கை, தைராய்டு பிரச்சனைகள் மற்றும் கருப்பையில் சிக்கல்கள் போன்ற பொதுவான பிரச்சனைகள் இயல்பான கருவுறல் திறனின்மைக்கு காரணமாக இருக்கின்றன.  பணியாற்றும் சூழல்கள், அளவுக்கு அதிகமான மிகை அழுத்தம், அறுவைசிகிச்சைகள், புகைப்பிடித்தல் / மதுஅருந்துகள் மற்றும் சில நேர்வுகளில் மரபியல் காரணங்கள் போன்ற அம்சங்கள் கருவுறல் திறனின்மைக்கு பங்களிப்பு வழங்குபவையாக இருக்கக்கூடும்.  இத்தகைய தம்பதியருக்கு உதவவும், சமூக அழுத்தங்களை எதிர்கொள்வதற்கான சக்தியையும், ஆதரவையும் தரவும் மற்றும் குழந்தைப் பேறுக்கான அவர்களது கனவுகளை நிஜமாக்கவும் மிகச்சிறந்த, நவீன சிகிச்சைக்கான சாதனங்களையும், திறனையும், அனுபவத்தையும் நாங்கள் கொண்டிருக்கிறோம்.” 

எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர் திரு. ரவி பச்சமுத்து இது தொடர்பாக பேசுகையில், “மிக சிக்கலான நேர்வுகளையும் கையாண்டு வெற்றிகர தீர்வுகளை வழங்குவதற்கு நிபுணத்துவம் மிக்க மருத்துவர்கள் குழுவோடு நவீன தொழில்நுட்பத்தையும், சாதனங்களையும் சிம்ஸ் மருத்துவமனையின்  மகப்பேறியல், மகளிர் நலவியல் மற்றும் ஐவிஎஃப் சிகிச்சை மையம் கொண்டிருக்கிறது. கருவுறல் திறனின்மை பிரச்சனையுள்ள நபர்களின் எண்ணிக்கை நாம் நாட்டில் உயர்ந்து வருவது பெரிய கவலையளிக்கும் விஷயமாகும்.  ஆகவே இதுகுறித்து நோயாளிகளுக்கு சரியான தகவலை எடுத்துக்கூறி கற்பிப்பதும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் முக்கியம்.  மக்கள் மத்தியில் நம்பிக்கையோடு கூடிய நேர்மறை கண்ணோட்டத்தையும், மனப்பான்மையையும் உருவாக்குவதற்கான இந்நிகழ்ச்சியை நாங்கள் ஏற்பாடு செய்தோம்; மேலும் எமது மருத்துவமனையில் இந்த அற்புதமான செயல்முறையின் 

Read Also  சிம்ஸ் மருத்துவமனையில், லைஃப்செல்  டயாக்னாஸ்டிக்ஸுடன் இணைந்து சிம்ஸ் ஜெனெடிக் க்ளினிக் தொடக்கம்.!!

மூலம் பிறந்திருக்கும் ஆரோக்கியமான மற்றும் ஆனந்தமான குழந்தைகளை கொண்டாடுவதும், அவர்களை குதூகலப்படுத்துவதும் எமது நோக்கமாகும்.” என்று குறிப்பிட்டார். 

சிம்ஸ் மருத்துவமனையின் துணைத்தலைவர் டாக்டர். ராஜு சிவசாமி இம்மருத்துவ கூறியதாவது: “நோயாளிகளது தேவைகளின் அடிப்படையில் அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த தீர்வுகளையும், நீண்டு நிலைக்கும் பராமரிப்புகளையும் வழங்குவது மீது சிம்ஸ் மருத்துவமனையில் நாங்கள் எப்போதும் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம்.  மகப்பேறியல், மகளிர் நலவியல் மற்றும் ஐவிஎஃப் சிகிச்சை மையத்தின் இயக்குனர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர். பி.எம். கோபிநாத் அவர்களது தலைமையின் கீழ் சிம்ஸ் மருத்துவமனையில் இயங்கி வரும் இத்துறை, செயற்கை கருத்தரிப்பு செயல்முறையான ஐவிஎஃப் சிகிச்சையை வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கிறது மற்றும் மகப்பேறியல் மற்றும் மகளிர் நலவியல் என்ற இப்பிரிவில் பாராட்டுதலுக்குரிய வெற்றிச்சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. 

எமது மருத்துவமனையில், இச்செயல்முறை மூலம் பிறந்த குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களோடு என்றும் நினைவில் இருக்கக்கூடிய இந்நாளைக் கொண்டாடுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.” 

சிம்ஸ் மருத்துவமனையில் ஐவிஎஃப் மூலம் வெற்றிகரமாக கருத்தரித்த தங்களது உணர்ச்சிகரமான தருணங்கள் பற்றிய செய்திகளை பெற்றோர்கள் பகிர்ந்து கொண்டனர்.  இந்த அற்புதக் குழந்தைகளைப் பொறுத்தவரை வேடிக்கையும், விளையாட்டும் மகிழ்ச்சியும் நிறைந்த பொழுதாக இந்நிகழ்வு இருந்தது.  வாழ்க்கையில் அடைய முடியாதது என்று எதுவுமில்லை மற்றும் இங்கு கிடைக்கக்கூடிய மேம்பட்ட சிகிச்சை செயல்முறைகளின் மூலம் குழந்தைப்பேறு என்பது, நிஜமாகும் என்ற கருத்தை பங்கேற்ற அனைவருக்கும் இந்நிகழ்வு நினைவூட்டியது.  

ஐவிஎஃப் – ல் ஃபெல்லோஷிப் கல்வித் திட்டங்கள், கருவளர்ச்சியியலில் ஒரு ஆண்டு பயிற்சி திட்டம் மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சையை மேற்கொள்ளும் நோயாளிக்கு கருவை பாதுகாத்து தக்கவைத்துக் கொள்வது தொடர்பான சிறப்பு கல்வித்திட்டங்களையும் சிம்ஸ் மருத்துவமனை நடத்தி வருகிறது.  

Read Also  எம்ஜிஎம் ஹெல்த்கேர், மாற்று அறுவை சிகிச்சைக்காக உறுப்புகளை வேகமாக கொண்டு செல்ல புரட்சிகர தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறார்கள்! 

மகப்பேறியல், மகளிர் நலவியல் மற்றும் ஐவிஎஃப் சிகிச்சை மையம் குறித்து: சிம்ஸ் மருத்துவமனையில் சிறப்பாக மகப்பேறியல், மகளிர் நலவியல் மற்றும் ஐவிஎஃப் சிகிச்சை மையம், கட்டமைப்பு ரீதியிலான தாய்மைப்பேறு ஆதரவு செயல்திட்டத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்துகிறது. இதன் காரணமாகவே சென்னை மாநகரில் சிறந்த மகப்பேறு மருத்துவமனை என்ற அங்கீகாரத்தையும், மக்களது அபிமானத்தையும் இது பெற்றிருக்கிறது,  நோயறிதல் மதிப்பீடு, மருத்துவ சிகிச்சை, வலியில்லாத பிரசவ செயல்முறை, இன்விட்ரோ ஃபெர்ட்டிலைசேஷன் (புற கருக்கட்டல் / ஐவிஎஃப்) மற்றும் பெண்களின் அனைத்து ஆரோக்கிய தேவைகளுக்கான கல்வி ஆகியவற்றிற்கு ஒரு அமைவிடத்தில் முழுமையான சேவைகள் தொகுப்பை இம்மையம் வழங்கி வருகிறது.  

குழந்தைகள் மருத்துவவியல் துறை குறித்து:  சிம்ஸ் மருத்துவமனையில் இயங்கி வரும் குழந்தைகள் மருத்துவவியல் துறை புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தைகளிலிருந்து, 18 ஆண்டுகள் வயது வரையிலான இளையோர் வரை பல்வேறு நோய்கள் மற்றும் பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க முழுமையான வசதிகளைக் கொண்டிருக்கிறது. அதிக இடர்ஆபத்துள்ள பச்சிளம் குழந்தைகளை கையாள்வதற்கு முழுமையான வசதிகளை உள்ளடக்கிய பிரத்யேக தீவிர சிகிச்சை பிரிவுகள்  (NICU மற்றும் PICU ஆகிய இரண்டும்) இத்துறையில் இயங்கி வருகின்றன.  ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 300 சிக்கலான நேர்வுகளை இந்த தீவிர சிகிச்சை பிரிவுகள் வெற்றிகரமாக கையாள்கின்றன.  உயர்திறன் வாய்ந்த குழந்தை நல மருத்துவர்கள், பச்சிளம் குழந்தை நல மருத்துவர் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்களைக் கொண்டிருக்கும் இத்துறை, நோய் பாதிப்புள்ள மற்றும் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை (26 வாரமே கர்ப்பத்தில் இருந்த குழந்தை இங்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் உடல்தேறி உயிர் பிழைத்திருப்பது குறிப்பிடத்தக்கது) திறம்பட கையாள்வதற்குத் தேவையான நவீன, சாதனங்களையும், தொழில்நுட்பத்தையும், சிறந்த நிபுணத்துவத்தையும் கொண்டிருக்கிறது. 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *