ஒபனிங்கில் சொதப்பல்.. அரைசதம் அடித்த தோனி.. கொல்கத்தா அணிக்கு 132 ரன்கள் இலக்கு.

சென்னை 26 மார்ச் 2022 ஒபனிங்கில் சொதப்பல்.. அரைசதம் அடித்த தோனி.. கொல்கத்தா அணிக்கு 132 ரன்கள் இலக்கு.

ஐபிஎல் 2022 தொடர் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சிஎஸ்கே அணியில் சிஎஸ்கே அணியில் டுவைன் பிராவோ, மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, டெவோன் கான்வே என 4 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதையடுத்து சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே களமிறங்கினர். கடந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ருதுராஜ் மீது இந்த சீசனிலும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ருதுராஜ் முதல் ஓவரிலேயே உமேஷ் யாதவ் பந்துவீச்சில் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

உமேஷ் யாதவின் முதல் 3 பந்துகளையும் எதிர்கொள்ள திணறிய ருதுராஜ் 4-வது பந்தில் சிக்கி அவுட்டானார். ருதுராஜ்க்கு அடுத்து வந்த ராபின் உத்தப்பா சிக்சர், பவுண்டரிகளை விளாசி ஆறுதல் அளித்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் டெவோன் கான்வே 3 ரன்னில் அவுட்டானார். உமேஷ் யாதவ் தனது வேகத்தில் மீண்டும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

சிஎஸ்கே அணி பவர் ப்ளேவில் (6 ஓவர்களில்) 35 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து இருந்தது. ராபின் உத்தப்பாவின் அதிரடி மட்டுமே சற்று ஆறுதலாக இருந்த நிலையில் வருண் சக்கரவர்த்தி சுழலில் ஸ்டம்பிங்காகி அவரும் 28 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 5-வது வீரராக களமிறங்கிய ஜடேஜா தேயைில்லாத ரன் எடுக்கும் முயற்சியால் அம்பாதி ராயுடு ரன் அவுட்டானார்.

Read Also  15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா: மும்பையில் இன்று கோலாகல தொடக்கம்.. வெற்றி பெறுமா சென்னை அணி?

ஆல்ரவுண்டர் ஷிவம் துபே 6 பந்துகளில் 3 ரன்களில் ரஷல் பந்துவீச்சில் வெளியேறினார். சிஎஸ்கே 10.1 ஒவர்களில் 61 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இருந்தது. இதையடுத்து மகேந்திர சிங் தோனி உடன் ஜடேஜா பார்ட்னர்ஷிப் அமைத்து மெதுவாக ஓவர்களை நகர்த்தினார்கள்.

இவர்களின் இருவரின் பொறுமையான ஆட்டத்தால் ரன்ரேட் பாதளத்திற்கே சென்றது. கேப்டன் என்பதால் மிகவும் பொறுப்புடன் விளையாடிய ரவீந்திர ஜடேஜா இறுதி ஓவர்களில் கூட சிக்ஸர், பவுண்டரிகளை விளாசவில்லை. தோனி இறுதி ஓவர்களில் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 38 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். தோனி கடைசியாக 2019 -ம் பெங்களூரு அணிக்கு எதிராக அரைசதம் விளாசினார். அதன்பின் தற்போது தான் அரைசதம் அடித்துள்ளார்.

கேப்டன் ரவீந்திர ஜடேஜா தனது பங்கிற்கு கடைசி பந்தில் சிக்ஸர் அணியின் ரன்னை 131 ஆக உயர்தினார். இறுதியாக சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. தோனி 50 ரன்களும், ஜடேஜா 28 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *