இனி வரும் காலங்களில் சிம் கார்டு தேவையில்லை இ-சிம் போதும்!

இனி வரும் காலங்களில் சிம் கார்டு தேவையில்லை இ-சிம் போதும்!

சென்னை 27 நவம்பர் 2023 நவீன தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக இ-சிம்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

அடிப்படைத் தேவையில் ஒன்றாக இன்று போன்கள் மாறிவிட்டன. போன்கள் இல்லாமல் மனிதர்களின் ஒரு நாள் பொழுது இல்லை என்ற அளவிற்கு போன்கள் வாழ்க்கையோடு இணைந்து விட்டன.

இந்த நிலையில் போன்களில் பல்வேறு புதிய புதிய தொழில் நுட்பங்கள் பயனாளர்களின் வசதிக்கேற்ப புகுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தற்போது ஸ்மார்ட்போன்களுக்கான இ-சிம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

நாம் இதுவரை பயன்படுத்திய சிம் கார்ட் ஆனது வன்பொருள் வடிவம் கொண்டது.

இனி உலகை இ-சிம்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கும் என்று தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

எம்பெடட் சிம் தான் இ சிம் என்று அழைக்கப்படுகிறது.

இது ஸ்மார்ட் ஃபோன்களின் மதர்போர்ட்டுகளில் மென்பொருள் வடிவில் பயன்படுத்தப்படுகிறது.

இதனால் ஃபோனில் இருந்து சிம் கார்டை பிரித்து எடுக்க முடியாது.

மேலும் ஸ்மார்ட் வாட்ச்களுடனும் எளிதில் இ சிம்யை இணைக்க முடியும்.

இது மட்டுமல்லாது ஒரு ஸ்மார்ட் போனில் பல இ சிம் எண்களை இணைத்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இ சிம் மூலம் தங்கள் தொலைத்தொடர்பு நிறுவனத்தை மிக எளிதில் மாற்றிக் கொள்ள முடியும்.

தற்போது ரிலையன்ஸ், ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் இ சிம் பயன்பாட்டை தொடங்கி இருக்கின்றன.

இ சிம் பாதுகாப்பு ரீதியாகவும் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.

Read Also  யூடியூப் போல் வாட்ஸ்அப் சேனல் வருகிறது.!!

திருட்டு போனால் சிம்மை தனியாக பிரித்து எடுக்க முடியாது என்பதால் எளிதில் போனை ட்ராக் செய்து பிடிக்க முடியும்.

தற்போது இ சிம் வாங்க அதிக அளவிலான தொகையை செலவு செய்ய வேண்டி உள்ளது.

இன்னும் சில ஆண்டுகளில் குறைந்த கட்டணத்தில் மிக எளிதாக மக்களிடம் புழக்கத்திற்கு இ-சிம்கள் வரும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *