பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 60 வயது முதியவர் ஃபோர்டிஸ் வடபழனியில் ஆழ்ந்த மூளை தூண்டுதலுக்குப் பிறகு புதிய வாழ்க்கையைப் பெற்றார் .!!
சென்னை 28 பிப்ரவரி 2023 பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 60 வயது முதியவர் ஃபோர்டிஸ் வடபழனியில் ஆழ்ந்த மூளை தூண்டுதலுக்குப் பிறகு புதிய வாழ்க்கையைப் பெற்றார் .!!
அறுவை சிகிச்சை 10 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது
~புதிதாக நிறுவப்பட்ட விரிவான பார்கின்சன் நோய் மற்றும் ஆழமான மூளை தூண்டுதல் மையம், மருந்துகளுக்கு கட்டுப்படாத தீவிர பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ~
சென்னை, 28 பிப்ரவரி 2023: பார்கின்சன் நோயால் அவதிப்பட்டு வந்த 60 வயது முதியவர், வடபழனியின் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் புதிதாக நிறுவியுள்ள பார்கின்சன் மற்றும் இயக்கக் கோளாறு மையத்தில் ஆழ்ந்த மூளைத் தூண்டுதல் அறுவை சிகிச்சைக்குப் பிறகு (Deep Brain Stimulation) வாழ்வில் புதிய நம்பிக்கையைப் பெற்றார். டிபிஎஸ் என்பது மூளையைத் தூண்டுவதற்கும் பார்கின்சனின் அறிகுறிகளைப் போக்குவதற்கும் மூளைக்குள் ஆழமான முடியளவில் மெல்லிய மின்முனைகளைப் பொருத்தும் ஒரு நரம்பியல் துறை நுட்பமாகும். நரம்பியல் துறைத் தலைவர் டாக்டர் கே பானுவின் வழிகாட்டுதலின் கீழ், டாக்டர் விகாஷ் அகர்வால் தலைமையிலான ஃபோர்டிஸ் குழு 10 மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தது.
நோயாளி, அவரின் இயக்கம் முற்றிலும் முடங்கிய நிலையில் மற்றும் மருந்துகளுக்கும் பலன் இல்லாத நிலையில் வடபழனியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையை அணுகினார். நோயின் தன்மையை கவனமாக பரிசீலித்த பிறகு, டாக்டர் விகாஷ் அகர்வால், பார்கின்ஸன் நோய் மற்றும் டிபிஎஸ் நிபுணர், டாக்டர் கே. விஸ்வநாதன், மூத்த ஆலோசகர் வலிப்பு மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் சுபா சுப்ரமணியன், நரம்பியல் நிபுணர் மற்றும் டாக்டர் கே. சுதாகர், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் அடங்கிய நரம்பியல் நிபுணர்கள் குழு, டிபிஎஸ் தான் நோயாளியின் நிலைக்கு மிகவும் பயனுள்ள சிகிச்சையாக இருக்கும் என்று முடிவு செய்தனர்.
வடபழனி, ஃபோர்டிஸ் மருத்துவமனையின் பார்கின்ஸன் நோய் மற்றும் டிபிஎஸ் நிபுணர் டாக்டர் விகாஷ் அகர்வால் பேசுகையில், “கடுமையான பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், உடல் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதிக அளவு மருந்துகளை உட்கொள்பவர்களுக்கும் டிபிஎஸ் ஒரு வரப்பிரசாதம். அறுபது வயது நிறைந்த இந்நோயாளி, தீவிர பார்கின்சன் நோயின் மருந்து எதிர்ப்பு வடிவமான ஆஃப் டிஸ்டோனியா நிலையில் எங்களைப் பார்க்க வந்தார். எங்கள் மருத்துவ நிபுணர்கள் குழு 10 மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து மூளையில் மின்முனைகளை பொருத்தினோம். முதல் சவால் என்னவென்றால், எந்தவொரு வயதானவர்களுக்கே உரித்தான சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்ற இதர நோய்கள் ஆகும். கூடுதலாக, உடலில் உள் உடல் உறுப்புகள் அல்லாத எந்த வகையான வெளிப்புற கருவிகள் வைக்கும்போது இரத்தப்போக்கு மற்றும் தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும், இவை இரண்டும் பக்கவாதத்தில் முடிவடையும். மேலும், மூளையின் செயல்பாட்டை சோதிக்க நோயாளி மருத்துவர் கேட்கும் கேள்வியை புரிந்து பதிலளிப்பது அவசியம் என்பதால், நோயாளி விழித்த நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். டிபிஎஸ் அறுவை சிகிச்சையின் வெற்றி விகிதம் சிறப்பாக அமைய சரியான மருத்துவர்கள், நரம்பியல் வல்லுநர்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை தேர்ந்துஎடுப்பது அவசியமாகும். ஒரு வெற்றிகரமான அறுவை சிகிச்சையானது பார்கின்சன் நோயாளிகளுக்கு தரமான வாழ்க்கையை கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் வரை நீட்டிக்கிறது.”
வடபழனி ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மண்டல இயக்குநர் மற்றும் தலைவர் திரு. வெங்கட ஃபனிதர் நெல்லூரி பேசுகையில், “ஃபோர்டிஸின் ஒருங்கிணைந்த பார்கின்ஸன் நோய் மற்றும் டிபிஎஸ் மையம் அதிநவீன சிகிச்சை அளிக்கும் நோக்கத்துடன் திறக்கப்படுவதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். டிபிஎஸ் கிளினிக் இயக்கக் கோளாறுகளை நிவர்த்தி செய்து, நோயாளிகள் இயல்பான, தன்னிறைவான வாழ்க்கையை வாழ வழி வகுக்கும்.”
“தமிழகத்தில் இயக்கக் கோளாறுகளுக்கான சிறப்பு சிகிச்சை மையம் கொண்ட மருத்துவமனைகள் மிகக் குறைவு. எங்கள் மையத்தில் பார்கின்சன், ஆழ்ந்த மூளை தூண்டுதல் அறுவை சிகிச்சை மற்றும் பிற நரம்பியல் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், நரம்பியல் மயக்க நிபுணர்கள், மனநல மருத்துவர்கள், உளவியலாளர்கள், வலி மேலாண்மை நிபுணர்கள் மற்றும் நரம்பியல் மறுவாழ்வு நிபுணர்கள் உள்ளனர். அனைவருக்கும் ஏற்ற விலையில் டிபிஎஸ் சிகிச்சைகளை வழங்குவதை உறுதிசெய்ய நாங்கள் அணைத்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என்று திரு. வெங்கடா மேலும் கூறினார்.
வடபழநி, ஃபோர்டிஸ் மருத்துவமனை பற்றி:
நாட்டில் மிக வேகமாக வளரும் சுகாதாரப் பாதுகாப்பு குழுவான ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் சென்னையின் பரபரப்பான மையப் பகுதியான வடபழநி, ஆர்காடு சாலையில் அமைந்துள்ள இரண்டாவது மருத்துவமனை ஆகும். 250 படுக்கை வசதிகளுடன் நான்காம் நிலை மல்டி சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவனையில் இதயம், இதய அறுவை சிகிச்சை, நுரையீரல், நரம்பியல், சிறுநீரகவியல், நீரிழிவு, முடநீக்கவியல், முதுகுத் தண்டுவட இயல், இரைப்பைக் குடலியல், கல்லீரலியல், பொது அறுவை சிகிச்சை மற்றும் ஏனைய சிறப்பு சிகிச்சைகளும் உண்டு.
ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் பற்றி
ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் – ஒரு IHH ஹெல்த்கேர் பெர்ஹாட் நிறுவனம் – இந்தியாவின் முன்னணி ஒருங்கிணைந்த சுகாதார சேவை வழங்குநராக உள்ளது. இது 27 சுகாதார வசதிகள் (வளர்ச்சியில் உள்ள திட்டங்கள் உட்பட), 4100 செயல்பாட்டு படுக்கைகள் மற்றும் 419 க்கும் மேற்பட்ட நோயறிதல் மையங்கள் (JV கள் உட்பட) கொண்ட நாட்டின் மிகப்பெரிய சுகாதார நிறுவனங்களில் ஒன்றாகும். ஃபோர்டிஸ் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் இலங்கையில் உள்ளது. இந்நிறுவனம் இந்தியாவின் BSE Ltd மற்றும் தேசிய பங்குச் சந்தை (NSE) ஆகியவற்றில் பட்டியலிடப்பட்டுள்ளது. உலகத் தரம் வாய்ந்த நோயாளி பராமரிப்பு மற்றும் மருத்துவத்தில் சிறந்து விளங்கும் அதன் கலாச்சாரத்தின் மீது கட்டமைக்க, உலகளாவிய முக்கிய மற்றும் தாய் நிறுவனமான IHH உடனான அதன் கூட்டாண்மை மூலம் பலத்தைப் பெறுகிறது. Fortis 23,000 நபர்களைப் பணியமர்த்தியுள்ளது (SRL உட்பட) அவர்கள் உலகின் மிகவும் நம்பகமான சுகாதாரப் பாதுகாப்பு வலையமைப்பாக மாறுவதற்கான அதன் நோக்கத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஃபோர்டிஸ் கிளினிக்குகள் முதல் குவாட்டர்னரி பராமரிப்பு வசதிகள் மற்றும் பலவிதமான துணை சேவைகள் வரையிலான ஒருங்கிணைந்த சுகாதார சேவைகளை வழங்குகிறது.