மெட்ரோ போலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் புதிய முயற்சியாக செல் மூலம் மூலக்கூறு மரபியல் நுட்பம் மூலம் சிறப்பு நோயியல் கண்டறியும் வசதியை ஏற்படுத்தியுள்ளது!

சென்னை 07 ஜூலை 2022 மெட்ரோ போலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் புதிய முயற்சியாக செல் மூலம் மூலக்கூறு மரபியல் நுட்பம் மூலம் சிறப்பு நோயியல் கண்டறியும் வசதியை ஏற்படுத்தியுள்ளது!

~சிறப்பு நோய் கண்டறியும் முறை மூலம் கருவிலுள்ள குழந்தைக்கு மரபியல் நோய் உள்ளதா என்பதைக் கண்டறிய முடியும். இதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே குரோமோசோம் மாறுபாட்டால் ஏற்படும் குறைகளைக் கண்டுபிடிக்கமுடியும்~

BRCA1 / BRCA 2 மரபியல் சோதனை மூலம் பரம்பரை நோய்களான மார்பக புற்று மற்றும்  கருப்பை புற்று (ஹெச்பிஓசி)  மூலக்கூறு புற்றுநோயியல் குழாய் சோதனை மூலம் நுரையீரல் மற்றும் பொதுவான புற்று நோய்களைக்கண்டறியும் வசதி.

சென்னை, 7 ஜூலை, 2022: மக்களுக்குத் தொடர்ந்து உயர் தரத்திலான நோய் கண்டறியும் பரிசோதனை முறைகளைக் கட்டுபடியாகும் கட்டணத்தில் அனைவருக்கும் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனம், இந்தியாவிலேயே முன்னணி நோய் கண்டறியும் மையங்களில் முன்னணியில் திகழ்கிறது. இந்நிறுவனம் இன்று முன்னேறிய நோய் கண்டறியும் பரிசோதனை முறையை செல்லிலிருந்து மூலக்கூறு மரபியல் மூலம் உயர்வகையிலான நோய் கண்டறியும் முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய செல் முறையில் மெட்ரோபோலிஸ் பல்வேறு சிறப்பு பரிசோதனைகளை கருவுற்றிருக்கும்போதும், புற்றுநோய், பரவும் நோய்கள் மற்றும் உறுப்பு மாற்று நிர்வாக முறை மூலம் செயல்படுத்தும். 

மெட்ரோபோலிஸ் பிரத்யேக செல் நுட்பம் நோய் கண்டறியும் முறை குறித்து திருமிகு அமீரா ஷா, மேம்பாட்டாளர் மற்றும் நிர்வாக இயக்குநர், மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் கூறியதாவது: “இப்புதிய புத்தாக்க முறையை மெட்ரோபோலிஸ் இன்னொவேஷன் செல் பிரிவின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம் உருவாக்கியுள்ளது. இது அடிப்படையான அறிவியல் ஆராய்ச்சி பின்புலத்தினால் உருவானது. இதன் மூலம் நோயாளியின் நோய் குறித்த விவரங்கள் அனைத்தையும் செல் மூலம் கண்டுபிடித்துவிடலாம். இதன் மூலம் நிறுவனத்தின் பிரதான நோக்கமான மிகவும் நம்பகமான அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரை எட்டுவதற்கு இதுபோன்ற ஆதாரபூர்வ தகவல், நோய் கண்டறிதலில் நிபுணத்துவம், நேர்மை மற்றும் நோயாளிகளிடம் அணுகும் தன்மை ஆகியவைதான் உதவும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளது. மேலும் நீண்ட கால இலக்காக இதுபோன்ற நோய் கண்டறிதலில் தொடர்ந்து முதலீடு செய்து அறிவியல் ஆராய்ச்சி மூலமும் அதற்குறிய கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறது,’’ என்று குறிப்பிட்டார். 

ஆய்வக சோதனைகளில் மற்றும் நோய் கண்டறிதலில் மெட்ரோபோலிஸ் எப்போதுமே புதிய நுட்பத்தை பயன்படுத்தி துல்லியமான முடிவுகளை உரிய நேரத்தில் நோயாளிகளுக்கு அளித்து வருவதில் முன்னோடியாகத் திகழ்கிறது. டிஜிட்டல் நுட்பத்திலான நோய் கண்டறிதல் (முழுமையான ஸ்லைட் பிம்பம்), உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எப்டிஏ) அனுமதிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை தெரபி, குறிப்பிட்ட பகுதிகளுக்கான தெரபி, திரவ பயாப்சி, மருத்துவ மரபியல், ஆய்வு வேதியியல், நோயியல், கொரோனா கண்டறிதல் மற்றும் பிற மருத்துவ நோய் கண்டறிதலை சிறப்பாக செயல்படுத்துகிறது. பல லட்சக்கணக்கான நோயாளிகளை பரிசோதித்ததில் புற்றுநோய் கண்டறிவது, குழந்தை பிறப்பதற்கு முன்பு பரிசோதனை, உறுப்பு மாற்று நோய்தொற்றை தாங்கும் திறன், பரவக்கூடிய, அதிதீவிரமான நோய்கள் அடுத்த தலைமுறைக்கு பரவாமல் செயற்கை நுட்பம் மூலம் கண்டறிவது உள்ளிட்ட இம்மையத்தின் சிறப்பம்சம் என்று டாக்டர் கீர்த்தி சத்தா, தலைமை மருத்துவ அதிகாரி, மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் தெரிவித்தார்.

Read Also  பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 60 வயது முதியவர் ஃபோர்டிஸ் வடபழனியில் ஆழ்ந்த மூளை தூண்டுதலுக்குப் பிறகு புதிய வாழ்க்கையைப் பெற்றார் .!!

__________________________________________________________________________

பிரெகாஸ்கிரீன் – ஒருங்கணைந்த மகப்பேறு நோய் கண்டறிதல் மற்றும் தீர்வு மற்றும் அடுத்த தலைமுறை (என்ஐபிடி) – செல் மூலம் கருவிலுள்ள குழந்தைக்கு பரிசோதனை (என்ஐபிஎஸ்)

உலகம் முழுவதும் மேற்கொண்ட ஆய்வில் டவுன் சின்ட்ரோம் ஆயிரத்தில் ஒருவருக்கு ஏற்படுகிறது.  இதில் இந்தியாவில் மட்டும் பிறக்கும் 830 குழந்தைகளில் ஒரு குழந்தை இக்குறைபாட்டுடன் பிறப்பதாக இந்திய டவுன் சிண்ட்ரோம் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இத்தகைய சூழலில் நமக்குத் தேவையானது கட்டுபடியாகும் கட்டணத்தில் துல்லியமாக மருத்துவ ஆய்வு மூலம் இத்தகைய குறைபாடு உடைய கருவை முன்கூட்டியே அறிவதாகும்.

கரு உருவான மூன்று மாதத்திலேயே இதுபோன்ற குறைபாடு மற்றும் குரோமோசோம் மாறுபாடு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டுபிடித்துவிட முடியும். முந்தைய மருத்துவ பரிசோதனைகளில் 5% அளவுக்கு தவறான தகவல்கள் கிடைக்கவும் வாய்ப்பிருந்தது. இதனால் தேவையற்ற ஆர்வம் மற்றும் மன அழுத்தம் தம்பதியர்களுக்கு ஏற்பட்டது. இந்த நிலையைப் போக்க மெட்ரோபோலிஸ் அறிமுகப்படுத்தியதுதான் பிரெகாஸ்கிரீன் பரிசோதனை முறையாகும். இது துல்லியமான ஒருங்கிணைந்த பரிசோதனை முடிவுகளை தெரிவிப்பதோடு, தம்பதியர்கள் உரிய நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பதற்கும் வழிவகுக்கிறது.

பிரெகாஸ்கிரீன் என்பது இந்தியாவிலேயே முதல் முறையாக ஒருங்கிணைந்த மருத்துவ பரிசோதனை முறையாகும். இத்தகைய மேம்பட்ட பரிசோதனை முறையை சில ஆண்டுகளுக்கு முன்பே மெட்போபோலிஸ் செயல்படுத்தி வருகிறது. இந்த ரிப்ளெக்ஸ் டெஸ்டிங் என்ற முறையிலான பரிசோதனை ஒருங்கிணைந்த வகையிலான தீர்மானமான பரிசோதனை வழிமுறையாகும். இது நோயாளி மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைக்கான வழிகாட்டுதலாகும். இது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு கூடுதல் செலவுகளை நோயாளிகளுக்கு குறைக்க உதவுகிறது. மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் ஒரு வருட காலத்திற்கும் மேலாக நடத்திய ஒரு சோதனை ஆய்வில் (இந்தத் துவக்கத்திற்கு முன்), 51,574 கர்ப்பிணிப் பெண்களில்  dual and quadruple marker maternal screening  சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சுமார் 2.7% அதிக ஆபத்தில் உள்ளனர் என்று கண்டறியபட்டது.  இந்தப் பெண்கள் மற்றும் மருத்துவர்களுக்கு NIPTக்கான வாய்ப்பு அல்லது கூடுதல் செலவு மற்றும் அவர்களின் விருப்பப்படி காரியோடைப் மூலம் உறுதிப்படுத்தல்; இந்த ரிஃப்ளெக்ஸ் உறுதியான சோதனையானது உண்மையான அதிக ஆபத்தை அளித்தது அல்லது குரோமோசோமால் இயல்பற்ற தன்மையை <0.5% மட்டுமே உறுதிப்படுத்தியது. எனவே மக்கள்தொகையில் ஒரு பெரிய குழுவானது உகந்த மருத்துவ மேலாண்மைக்காக குறைந்த செலவில் உயர்நிலைப் பரிசோதனையை அணுகியது.

Read Also  வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவமனை தொடங்கும் பிரத்யேக  ‘ஈரல் – கணையம் – பித்தநீர் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையம்’.

மெட்ரோபோலிஸ் நெக்ஸ்ட்ஜென் என்ஐபிடிகருவுற்ற பெண்களுக்கான இந்த பரிசோதனை மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்திலானது. தாய் வழி மரபணு ரத்தமாதிரி மற்றும் மரபியல் அடிப்படையில் அடுத்த தலைமுறைக்கு அதுஎப்படி மாறும் (என்ஜிஎஸ்) என்பதன் அடிப்படியில் கணக்கீடு செய்வதாகும். இதன் மூலம் குரோமோசோம் மாறுபாடு அதனால் ஏற்படும் டவுன் சிண்ட்ரோம் (டி21) உள்ளிட்டவற்றைக் கண்டறிய முடியும். எட்வர்ட் சிண்ட்ரோம் (டி18),  படாவ் சிண்ட்ரோம் (டி13), டர்னர் சிண்ட்ரோம் (மோனோசோமி எக்ஸ்), உள்ளிட்ட குறைபாடுகளை துல்லியமாக முந்தைய பாரம்பரிய முறையை விட கண்டறிய முடியும்.

மரபியல் புற்றுநோய் – மார்பகம் மற்றும் கருப்பை புற்று – அடுத்த தலைமுறை BRCA சோதனை வசதி மெட்ரோபோலிஸில் உள்ளது.

பரம்பரையாக ஏற்படும் மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய் (ஹெச்பிஓசி)  ஆகியன பரம்பரையாக உருவாவதாக அதிலும் குறிப்பாக மார்பக புற்று நோய் 50 வயதுக்கு முன்பாக ஏற்படுவதாகவும் கருப்பை புற்று  வழக்கத்தைவிட அதிகமாக உருவாவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலான ஹெச்ஓபிசி சிண்ட்ரோம் சில BRCA1 மற்றும் BRCA 2 குரோமோசோம் மாறுபாடுகளால் உருவாவதாக கண்டறியப்பட்டுள்ளது.  சுமார் 7% மார்பக புற்று நோய் மற்றும் 15% கருப்பை புற்றுநோய் மரபியல் ரீதியாக  வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக அளவிலான நோயாளிகள் குறிப்பாக மார்பக புற்று மற்றும் கருப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20 முதல் 25% மெட்ரோபோலிஸ் புற்றுநோய் கண்டறியும் மையங்கள் மூலம் கண்டறியப்பட்டவர்களாவர். இதில் முக்கியமான பரிசோதனை BRCA எனப்படுவதாகும். இது பரிசோதனை மட்டுமல்ல  தொடர் சிகிச்சைக்கும் உதவியாக அமையும். இது மார்பக புற்று நோய் மற்றும் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்வர்களுக்கானது. இதுதவிர ஆண்களுக்கு ஏற்படும் பிராஸ்டேட் புற்றுநோய், இது பரவக்கூடியதாகும். இந்நோயை ஹார்மோன் சிகிச்சை மூலம் தடுக்க முடியும். இது சிகிச்சை மூலம்தடுக்கக் கூடிய நோயாக கருதப்படுகிறது.

மரபியல் புற்று – நுரையீரல்

நுரையீரல் புற்று நோய் இது பெரும்பாலானவர்களுக்கு உலகம் முழுவதும் ஏற்படக்கூடியது. பெரும்பாலான புற்றுநோய் மரணங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் காரணமாக அமைவதுண்டு. இந்தியாவில் நுரையீரல் புற்றுநோய் 6.9 சதவீதம் பேருக்கு உருவாகிறது. புற்றுநோய் சார்ந்த மரணங்களின் (இரு பாலருக்கும்) விகிதம் 9.3 சதவீதமாக உள்ளது. ஒட்டுமொத்தமாக நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டு அதில் உயிர் பிழைத்திருப்போர் விகிதம் மிகக்குறைவாக உள்ளது. இந்நோய் ஏற்பட்டு 5 ஆண்டுகள் வரை உயிர் பிழைத்திருப்போர் விகிதம் 24% ஆக உள்ளது.இவர்களில் 5.5 சதவீதம் பேர் மரபியல் ரீதியில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். 5 ஆண்டுகள் வரை உயிர் பிழைத்திருப்போரில் சராசரியாக 6% நோயாளிகள் மரபியல் ரீதியில் சைடாக்ஸிக் கீமோ தெரபி சிகிச்சை பெற்றவர்களின் வாரிசுகளாக உள்ளனர். பெரும்பாலும் மரபியல் ரீதியாக 75% நுரையீரல் நோயாளிகள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர் இஎப்ஜிஆர் எனப்படும் (தொற்று வளர்சிதை மாற்றம்) காரணமாகவும் 25% பேர் புதிதாக இந்நோய்க்கு ஆளானவர்களாகவும், தெரபி மற்றும் நோய் எதிர்ப்புதிறன் குறைவு காரணமாக பாதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர். இதன் காரணமாக 5 ஆண்டுகளில் உயிர் பிழைத்திருப்போர் விகிதம் 15% முதல் 50% ஆக உள்ளது. இது நோய்கண்டறிவதன் மூலமாக கிடைத்த தகவலாகும். மரபியல் ரீதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முயற்சிகள் மூலம் நோயாளிகள் உயிர் பிழைத்திருக்கும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. என்ஜி ஸ் சோதனையின் பலனாக உரிய நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ள உதவியாக அமைந்துள்ளது. நோய் சார்ந்த பல பரிசோதனைகள் மூலமாக இது சாத்தியமாகியுள்ளது. 

Read Also  கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில் பெருந்தொற்றுக் காலத்தில், முதலமைச்சரின் விரிவான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 125 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றன!!

புதிய பரிசோதனை முறைகள் குறித்து டாக்டர் வி. கவிதா, மூத்த ஆலோசகர் மற்றும் தலைமை ஆய்வக சேவை (தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கான) மெட்ரோபோலிஸ்  ஹெல்த்கேர் கூறியதாவது: “முன்னேறிய பரிசோதனை முறைகளை வழங்குவதில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் மிக்க நிறுவனமாகத் திகழ்கிறது. நோய் கண்டறியும் திறனை பல்வேறு வகையிலும் அதிகரித்துக் கொள்வதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். அனைத்து தரப்பினருக்கும் இத்தகைய நோய் கண்டறியும் திறன் கிடைப்பதற்காக கட்டுபடியாகும் விலையில் 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை நகரங்களில் வசிப்போருக்கும் இதை வழங்கி வருகிறோம். பெருமளவிலான ஒருங்கிணைப்பு வசதி மற்றும் விற்பனை சந்தை செயல்பாடு இந்தியா முழுவதும் உள்ளதால் இது சாத்தியமாகியுள்ளது. இதற்காக மருத்துவமனைகள், கிளினிக்குகள், உள்ளிட்ட சுகாதார அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளோம். இது குறித்து பல்வேறு காணொளி வாயிலான கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறோம். மேலும் பல கூட்டங்களையும் நடத்தி மருத்துவ பரிசோதனை குறித்த தகவல்களை பகிர்ந்து வருகிறோம். அனைத்துக்கும் மேலாக டிஜிட்டல் மற்றும் தானியங்கி தொழில்நுட்பம் வாயிலாக பரிசோதனை முடிவுகளை துல்லியமாக அளித்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வழிவகுக்கிறோம்’’ என்று குறிப்பிட்டார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *