பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 124வது கிரேட் ஸ்லீப் ஸ்டோர் சென்னையில் திறப்பு!!

சென்னை 13 ஜூலை 2022 பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 124வது கிரேட் ஸ்லீப் ஸ்டோர் சென்னையில் திறப்பு!!

நடப்பு நிதி ஆண்டில் நாடு முழுவதும் மேலும் 30 ஸ்டோர்களை திறக்க இந்நிறுவனம் திட்டம்

சென்னை, ஜூலை 13- இந்திய வாடிக்கையாளர்கள் நல்ல கனவுடன் நிம்மதியாக இரவில் தூங்க சிறந்த மெத்தை மற்றும் தலையணைகளை பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் இந்நிறுவனம் தனது பிரத்யேக பிராண்ட் ஸ்டோரான ‘பெப்ஸ் கிரேட் ஸ்லீப் ஸ்டோரை சென்னையில் திறந்துள்ளது.

இந்த ஸ்டோர் சென்னை, சேலையூரில் உள்ள ஸ்ரீ கௌஷிகன் பிளாசாவில் திறக்கப்பட்டுள்ளது. இங்கு இந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் இடம் பெற்றிருப்பதோடு, குறைந்த விலையில் இருந்து அதிக விலை வரையிலான மெத்தைகள் மற்றும் தலையணைகள் கிடைக்கும். மேலும் இந்த ஸ்டோர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மெத்தைகள் தொடர்பான சிறந்த அனுபவத்தை வழங்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மேலும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளான பெப்ஸ் ஸ்பைன் கார்டு, பெப்ஸ் கிரிஸ்டல், பெப்ஸ் ஆர்கானிகா, பெப்ஸ் விவா மற்றும் பெப்ஸ் ஜெனிமோ போன்ற மெத்தைகள் உட்பட அனைத்து மெத்தைகளின் சிறப்புகளை பற்றி நுகர்வோர் அறிந்து கொள்ள பெப்ஸ் கிரேட் ஸ்லீப் ஸ்டோர் சிறந்த ஒன்றாக இருக்கும். அத்துடன் இங்கு படுக்கை அறைக்கு தேவையான அனைத்து விதமான பொருட்களும் பெப்ஸ் ட்ரீம் டெகார் என்னும் பிரிவில் இடம் பெற்றிருக்கும். இதில் மெத்தை, தலையணை, திண்டு, கம்பளி போர்வைகள் மற்றும் மெத்தைகள் மேல் போடப்படும் விரிப்புகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

Read Also  ITC-ன் சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க், இளம் சாதனையாளர்களுக்கு சூப்பர் கிட்ஸ் 2023 விருது வழங்கி கெளரவித்தது.!!

இந்த புதிய ஸ்டோரை திறந்து வைத்து பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிஙின் துணை தலைவர் திரு சுரேஷ் பாபு இந்த நிகழ்வு குறித்து கூறுகையில் “இந்திய சந்தையைப் பொறுத்தவரை தற்போது ஸ்பிரிங் மெத்தைகளின் தேவை என்பது படிப்படியாக அதிகரித்து வருகிறது. நுகர்வோரின் வசதிக்காக நாடு முழுவதும் எங்களது கடைகளை திறந்து, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். சென்னையில் உள்ள நுகர்வோர் சிறந்த மெத்தைகளை வாங்குவதற்கு வழிகாட்டும் விதமாக எங்கள் ஸ்டோர்கள் சென்னையில் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது இங்கு சேலையூரில் எங்கள் ஸ்டோர் திறக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னையில் மேலும் 10 ஸ்டோர்களை திறந்து ஏராளமான பேருக்கு மகிழ்ச்சியான தூக்கத்தை வழங்குவதை நாங்கள் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம்”.

“ஸ்பிரிங் மெத்தை வகைகள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு உடல்நலப் பலன்களை வழங்குவதாக உலகளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு மேலும் இந்த அனுபவ மையங்கள் மூலம் ஸ்பிரிங் மெத்தை வகையின் பல்வேறு நன்மைகள் மற்றும் அதன் சிறப்புகள் குறித்து எடுத்துக் கூறுவதை நாங்கள் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். நாடு முழுவதும் உள்ள எங்கள் கிரேட் ஸ்லீப் ஸ்டோர்களுக்கு அதிக அளவில் வரும் வாடிக்கையாளர்களே இதற்கு சான்றாகும்” என்று தெரிவித்தார்.

நடப்பு நிதி ஆண்டில், நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட ‘கிரேட் ஸ்லீப் ஸ்டோர்”களை திறக்க பெப்ஸ் திட்டமிட்டுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *