இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் ரூபாய் .23,000 கோடி கடன் ஒப்புதல் அளித்தது.!
சென்னை 02 செப்டம்பர் 2022 இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் ரூபாய் .23,000 கோடி கடன் ஒப்புதல் அளித்தது.!
இலங்கைக்கு ரூபாய் .23,000 கோடி கடன் உதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்தது. வரலாறு காணாத நிதி, பொருளாதார நெருக்கடியால் இலங்கை தவித்து வருகிறது.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவும் கடனில் இருந்து விடுபடவும் இலங்கை அரசு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அவசர கடனுதவியாக ரூ.39,733 கோடி (சுமார் 5 பில்லியன் டாலர்) கோரியுள்ளது.
இதுதொடர்பாக இலங்கைக்கு வந்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அரசு அதிகரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தை நேற்று நிறைவடைந்தது.
இதைத் தொடர்ந்து, இலங்கை ரூ.40,000 கோடி கடன் கேட்டிருந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டித்த நிதி உதவி திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளில் ரூ.23,000 கோடி கடன் வழங்க இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.