நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் சென்னையில் நடத்திய “வாக்கத்தான்”!
சென்னை 07 ஏப்ரல் 2022 நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் சென்னையில் நடத்திய “வாக்கத்தான்”!
“சுய- நோயறிதல் சோதனையை தவிர்ப்பதன்” முக்கியத்துவம் மீது விழிப்புணர்வை பரப்புவதே இந்நிகழ்வின் நோக்கம்
சென்னை, வியாழன், ஏப்ரல் 7, 2022: உலக சுகாதார தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி இந்தியாவில் தோற்று விக்கப்பட்ட முதன்மையான 4 நோயியல் பரிசோதனையக சங்கிலித் தொடர் நிறுவனங்களுள் ஒன்றான நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ், இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் ஒத்துழைப்போடு ஒரு வாக்கத்தான் நிகழ்வை நடத்தியது.
“சுயநோயறிதல் சோதனையை தவிர்ப்போம்” (“Saying No to Self-Diagnosis”) என்ற கருப் பொருளை முன்னிலைப் படுத்தி இந்நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்த வாக்கத்தான் நிகழ்வில் நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் – ன் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட, பல்வேறு வயதுப் பிரிவுகளைச் சேர்ந்த 100-க்கும் அதிகமான நபர்கள் பங்கேற்றனர்.
மருத்துவ ஆலோசனையின்றி சுயமாகவே நோயறிதல் நடவடிக்கைகளை மேற் கொள்வதன் ஆபத்துகள் பற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தியவண்ணம் அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு. சங்கர் ஜிவால் ஐபிஎஸ் அவர்கள் இந்த விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர். ஜிஎஸ்கே. வேலு, இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் கிளையின் 2022-ம் ஆண்டுக்கு தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டாக்டர். T.செந்தமிழ் பாரி மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் வடமண்டலத்திற்கான துணைத் தலைவர் டாக்டர். வி. சரவணன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்ற பிற முக்கிய பிரமுகர்களுள் சிலர்.
தீங்கு விளைவிக்க வாய்ப்பிருக்கின்ற சுய நோயறிதல் சோதனைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக உரிய ஆலோசனையைப் பெற ஒரு மருத்துவரை சந்திப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸின் இந்த செயல்முயற்சிக்கான குறிக்கோள் இலக்காக இருந்தது.
நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர். ஜிஎஸ்கே. வேலு பேசுகையில்,
“பரவலாக எல்லா இடங்களிலும் எளிதாகக் கிடைக்கக்கூடிய இன்டர்நெட் (இணையம்) தொடர்பு மற்றும் தகவல் பெறுவதில் தற்போதுள்ள எளிமையான அணுகுவசதியில் அதற்கே உரிய சாதக அம்சங்களுடன் சில பாதகங்களும் உள்ளன. ஒருபுறத்தில் இது நம்மை திறனதிகாரம் பெற்றவர்களாக ஆக்குகிறது என்றாலும், மறுபுறத்தில் நமக்கு எல்லாம் சிறப்பாகத் தெரியும் என்ற போலியான / தவறான நம்பிக்கையுணர்வையும் தருகிறது. உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களைப் பொறுத்தவரை நோயறிதல் செயல்பாடு மட்டுமின்றி, சுயமாக மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டலைப் பெற பல நேரங்களில் நாம் இன்டர்நெட்டில் தேடுகிறோம். உங்களது ஆரோக்கியத்திற்கும், நலவாழ்விற்கும் தீங்கு விளைவிக்கின்ற ஆபத்தாக இது இருக்கக்கூடும். சுய – நோயறிதல் மற்றும் சுய மருந்தளிப்பு என்பது, உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்று தோன்றினாலும் கூட, தவறான மருந்துகளை உட்கொள்வதும், தேவையற்ற சுய நோயறிதல் சோதனைகளை செய்துகொள்வதும் கடுமையான அச்சுறுத்தலாக மாறக்கூடும். ஆகவே, சுய – நோயறிதல் செயல்பாட்டின் மூலம் சோதனைக்கு தங்களையே உட்படுத்திக்கொள்ள வேண்டாமென்று ஒவ்வொருவரையும் நாங்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்;
அதற்குப் பதிலாக மருத்துவ நிபுணரிடமிருந்து சரியான மருத்துவ ஆலோசனையை நாடிப் பெறுவதே நலம் பயக்கும்.,” என்று கூறினார்.
2022-ம் ஆண்டுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் கிளையின் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டாக்டர். T. செந்தமிழ் பாரி, இந்நிகழ்வில் பேசுகையில்,
“இன்டர்நெட் உதவியைக் கொண்டு எளிதாக செய்து கொள்ள முடியும் என்பதால், சுயநோயறிதல் நடவடிக்கையை பொதுவாக மக்கள் விரும்புகின்றனர்.
இத்தகைய சுய – நோயறிதல் செயல்பாட்டின் காரணமாக, அவர்களது மருத்துவ நோய் நிலை குறித்து முற்றிலுமாகத் தவறான கருத்தைக் கொண்டிருக்கின்ற அல்லது உண்மை நிலையை விட குறைவானதாக கருதிக் கொள்கின்ற இடர்ஆபத்தில் தங்களையே வைத்துக் கொள்கின்றனர்.
நமது உடலில் வெளிப்படுகின்ற அறிகுறிகள் உள்ளார்ந்த நோய் நிலையை சுட்டிக்காட்டும் அம்சங்களாக இருப்பதால், அவைகளை உதாசீனம் செய்யக்கூடாது; முறையான மருத்துவ ஆலோசனையையும், சிகிச்சையையும் நாடிப் பெறுவதே அவசியம்,” என்று கூறினார்.