முக்கிய மேம்பாடுகளை அறிவிக்கும் சியல் குழுமம் (Ciel Group)

சென்னை 03 மே 2022 முக்கிய மேம்பாடுகளை அறிவிக்கும் சியல் குழுமம் (Ciel Group)

  • CielJobs.com என்ற இந்தியாவின் முதல் திறன்தொழில்நுட்ப செயல்தளம் அறிமுகம்.
  • சியல் ஹெச்ஆர் சர்வீசஸ் நிறுவனத்தில், ஸோஹோ கார்ப், இதயம், ஶ்ரீ காளீஸ்வரி ஃபயர்வொர்க்ஸ் மற்றும் HNI (முக்கிய முதலீட்டாளர்களிடமிருந்து) தனிப்பட்ட முதலீடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

சென்னை, 03 மே, 2022: இந்தியாவில் பணியாளர்களுக்கான தீர்வுகள் மற்றும் திறனளிப்பு தீர்வுகள் வழங்கும் துறையில் முதன்மை வகிக்கும் சியல் குழுமம், அதன் வளர்ச்சிக்கான அடுத்தக் கட்டத்தின் ஒரு பகுதியாக சில முக்கிய மேம்பாடு செயல்திட்டங்களை இன்று அறிவித்திருக்கிறது.

வேலைவாய்ப்பு செயற்பிரிவின் மீது ஆழமான புரிதலும், பல ஆண்டுகள் செழுமையான அனுபவமும் கொண்டிருக்கும் சியல், இன்றைய காலகட்டத்திற்கும் மற்றும் எதிர்காலத்திற்குமான பணி தேவைப்பாடுகளை பூர்த்தி செய்யக்கூடிய பன்முக தன்மையும் சிறப்பு திறனும் கொண்ட பணியாளர்களை மிக அதிக எண்ணிக்கையில் உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளின் மீது உறுதிபூண்டிருக்கிறது.

பணி வழங்குனர்களுக்கும் மற்றும் பணியாளர்களுக்குமான இந்தியாவின் முதல் திறன்தொழில்நுட்ப (SkillTech) செயல்தளம் – CielJobs.com அறிமுகம் செய்யப்பட்டிருப்பதையும், இந்நிறுவனத்தின் வருடாந்திர நிதிசார் முடிவுகளையும் இக்குழுமம் அறிவித்திருக்கிறது. 

இந்நாட்டில் முதன்மையான 10 மனிதவள சேவை நிறுவனங்களுள் ஒன்றாக அதிவேகமாக உருவாகியிருக்கும் சியல் ஹெச்ஆர் சர்வீசஸ் நிறுவனத்தில் ரூ. 20 கோடிக்கு (2.8 யுஎஸ் டாலர் மில்லியன்) தனிப்பட்ட முதலீடுகள் செய்யப்பட்டிருப்பதையும் சியல் அறிவித்திருக்கிறது.

சியல் குழுமத்தின் செயலாக்க தலைவர் திரு. கே. பாண்டியராஜன், இந்நிறுவனத்தின் வருடாந்திர நிதி முடிவுகள் அறிக்கையை வெளியிட்டதற்குப் பிறகு ஊடகத்தினரோடு பேசுகையில், “இலாபகரமான வளர்ச்சி மற்றும் புத்தாக்க செயல்பாடுகள் மீது தெளிவான கூர்நோக்கத்தை நாங்கள் கொண்டிருக்கிறோம். நமது நாட்டில் ஹெச்ஆர் தொழில்துறையை மேம்பட மாற்றியமைக்கும் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுத பணியமர்த்தல் தளத்தில் 30 ஆண்டுகளுக்கும் அதிகமான ஆழமான அனுபவத்தை நடப்பு தொழில்நுட்பங்களோடு ஒருங்கிணைத்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கிற சியல் குழுமத்தின் தலைமைத்துவ பணியாளர்களையும் மற்றும்  ஒட்டுமொத்த குழுவினரையும் நான் பாராட்டுகிறேன். தொடங்கப்பட்ட ஏழு ஆண்டுகளுக்குள்ளாகவே இந்தியாவில் முதன்மையான 10 மனிதவள சேவைகள் நிறுவனங்களுள் ஒன்றாக சியல் ஹெச்ஆர் சர்வீசஸ் வளர்ச்சி கண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியும், உத்வேகமும் தருகிறது; இத்தொழில்துறை 15% என்ற அளவில் வளர்ச்சியடைந்திருக்கும் நிலையில், 70% வருவாய் வளர்ச்சியை சியல் ஹெச்ஆர் சர்வீசஸ் பதிவுசெய்திருக்கிறது. இந்திய மனிதவள தொழில்துறையில் சியல் குழுமத்தின் தலைமைத்துவ நிலையை CielJobs.com செயல்தளத்தின் அறிமுகம் மேலும் மேம்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று கூறினார்.

  • CielJobs.com-ன் அறிமுகம் – இந்திய அரசின் ஸ்கில் இந்தியா செயல்திட்டத்திற்கு உதவும் வகையிலும் ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளின் மாணவர்கள் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு உதவ 125 பிரிவுகளைக் கொண்டிருக்கும் இந்தியாவின் முதல் திறன்தொழில்நுட்ப செயல்தளமான CielJobs.com அறிமுகம் செய்யப்படுவதை இக்குழு அறிவித்திருக்கிறது. பணி வழங்குனர்களுடனும் மற்றும் செயல்திட்ட அமலாக்க முகமைகளோடும் தொடர்புகொள்வதற்கும் இச்செயல்தளம் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நாடெங்கிலும் உள்ள மாணவர்கள் மற்றும் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தொடர்புகொள்ளவும், கற்றுக்கொள்ளவும் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளைப் பெறவும் மற்றும் தாங்கள் விரும்புகிற முதல்நிலை, இரண்டாம்நிலை மற்றும் மூன்றாம்நிலை நகரங்களில் சரியான வேலைவாய்ப்பை தேடிக்கொள்ளவும் உதவுகிற ஒரு செயல்தளமாக CielJobs.com இருக்கிறது. எளிதில் பயன்படுத்துவதற்காக CielJobs என்கிற மொபைல் ஆப், பிளே ஸ்டோரில் கிடைக்கிறது.
  • சியல் ஹெச்ஆர் சர்வீசஸில் தனிப்பட்ட முதலீடுகள் – பிரபல பெரு நிறுவனங்களான ஸோஹோ கார்ப், இதயம், ஶ்ரீ காளீஸ்வரி ஃபயர்வொர்க்ஸ் மற்றும் நாடெங்கிலுமிருந்து சில ஹெச்என்ஐ-கள் ரூ. 20 கோடி அளவிற்கு சியல் ஹெச்ஆர் சர்வீசஸில் தனிப்பட்ட முதலீடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதையும் இக்குழுமம் அறிவித்திருக்கிறது. தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதற்காகவும் மற்றும் இனிவரும் காலங்களில் இந்நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்கவும் இம்முதலீட்டு நிதி பயன்படுத்தப்படும். அடுத்த சில காலாண்டுகளில் உலளவில் பெரிதும் மதிக்கப்படும் பெரு நிறுவனமாக உருவாவதற்கு பொது பங்குகளை பங்குச்சந்தையில் வெளியிடவும் சியல் ஹெச்ஆர் சர்வீசஸ் திட்டமிட்டிருக்கிறது.
  • சியல் ஹெச்ஆர் சர்வீசஸின் வருடாந்திர நிதி முடிவுகள் –2022-ம் நிதியாண்டில் சியல் ஹெச்ஆர் சர்வீசஸ் 70% வளர்ச்சியையும் மற்றும் 7 ஆண்டுகள் காலஅளவில் 121% CAGR-ஐயும் பதிவு செய்திருக்கிறது. முந்தைய நிதியாண்டில் 306 கோடி என்ற அளவில் இருந்த விற்றுமுதல் 2022 மார்ச் 31 அன்று முடிவடைந்த நிதியாண்டில் 520 கோடியாக உயர்ந்திருப்பதையும் சியல் ஹெச்ஆர் சர்வீசஸ் தெரிவித்திருக்கிறது. பணி வழங்கும் நிறுவனங்கள் தங்கள் தேவைகளுக்கேற்றவாறு சரியான, திறன்மிக்க பணியாளர்களையும் மற்றும் பணிவாய்ப்பை தேடுபவர்கள் தங்களுக்கேற்ற சரியான பணி வழங்கும் நிறுவனங்களையும் கண்டறிய உதவுகிற இந்நிறுவனம் இதற்கு செயற்கை நுண்ணறிவால் செயல்படுத்தப்படும் மனிதவள சேவைகள் மாடலை பயன்படுத்துகிறது. இந்தியா முழுவதிலும் 51 நகரங்களில் 65 அலுவலகங்களுடன் இந்நிறுவனம் இயங்கிவருகிறது.
Read Also  Vi தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களை தொடக்க நிலை ரீசார்ஜ் பேக்குகளில் மிகச் சிறந்த பலன்களை வெறும் 99 ரூபாய் ரீசார்ஜ் மூலம் பெற அழைக்கிறது!

சியல் ஹெச்ஆர் சர்வீசஸின் வளர்ச்சி கதை பற்றி தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அதன் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு. ஆதித்ய நாராயண் மிஷ்ரா, “புதிய முதலீடுகளைக் கொண்டு உள்ளார்ந்த திறனளவுகளை உயர்த்துகிற டிஜிட்டல் தொழில்நுட்பங்களை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்தவிருக்கிறோம்; அதே நேரத்தில் எமது வாடிக்கையாளர்கள், பணிவாய்ப்பைத் தேடுபவர்களுக்கு அதிகரித்த மதிப்பினை வழங்குவதையும் நாங்கள்  தொடர்ந்து மேற்கொள்வோம். சேவை தரம், வலுவான செயல்முறைகள் மற்றும் பணியாளர்களின் திறன் மேம்பாடு மீது கவனம் செலுத்துவதும் மற்றும் இந்தியா முழுவதும் 51 நகரங்களில் அலுவலகங்களைக் கொண்டு சிறப்பாக சேவையாற்றி வருவதும் எமது வளர்ச்சி பயணத்தை இன்னும் துரிதமாக்கும்; உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் ஒரு மாபெரும் நிறுவனமாக உருவெடுக்க சந்தையில் நாங்கள் கொண்டிருக்கும் தலைமைத்துவ நிலை உதவும்,” என்று கூறினார்.

சியல் ஸ்கில்ஸ் அண்டு கரியர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அலுவலருமான திரு. ராஜிவ் கிருஷ்ணன், CielJobs.com தொடக்கம் குறித்து கூறியதாவது: “பணியமர்த்தப்படும் திறன் நிலையில் காணப்படும் தனிப்பட்ட மற்றும் ஒட்டுமொத்த இடைவெளிகள் மீதும் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பணி வழங்கும் நிறுவனங்களுக்கும் மற்றும் பணியாளர்களுக்கும் இடையே தொடர்பினை உருவாக்குவதிலும் ஆழமான புரிதலை சியல் ஸ்கில்ஸ் அண்டு கரியர்ஸ் கொண்டிருக்கிறது. திறனை மேம்படுத்திக் கொள்ளவும் மற்றும் நாடு முழுவதிலுமிருந்தும் சரியான வேலைவாய்ப்புகளை கண்டறியவும் ஆயிரக்கணக்கான நபர்களை ஒரு செயல்தளத்தின் மூலம் இணைக்கின்ற CielJobs.com, பணியில் ஒரு புதிய மற்றும் திறன்மிக்க எதிர்காலத்தை உருவாக்க தன்னையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது.”

Read Also  இந்தியா 2023க்கான பினாங்கு ரோட்ஷோ: MICE தொழில் துறையை மேம்படுத்த ‘சலோ பினாங்கு’ பிரச்சாரம்.!!

சியல் குழுமம் குறித்து: இந்திய மனிதவள துறையில் 30 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவத்தைக் கொண்டிருக்கும் திருமதி. லதா மற்றும் திரு. பாண்டியராஜன் அவர்களால் உருவாக்கப்பட்ட சியல் குழுமம், பணியமர்த்தல் துறையில் முன்னணி பெரு நிறுவனமாக செயலாற்றி வருகிறது. வலுவான குறிக்கோளுடன் அனுபவமும், அறிவுத்திறனும் கொண்ட 650 பணியாளர்களைக் கொண்டிருக்கும் சியல் குழுமம் பன்முக தன்மையுள்ள திறன்மிக்க பணியாளர் குழுவை உருவாக்கவும், மேம்படுத்தவும் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. சியல் ஹெச்ஆர் சர்வீசஸ், சியல் ஸ்கில்ஸ் அண்டு கரியர்ஸ், சியல் டெக்னாலஜீஸ் & இன்டகிரம் டெக்னாலஜீஸ் ஆகியவை சியல் குழுமத்தின் பிசினஸ் பிரிவுகளாக இருக்கின்றன.

CIEL என்பது, ‘வானம்’ என்று பொருள்படுகின்ற ஒரு ஃபிரெஞ்ச் மொழி வார்த்தையாகும்.  உங்களது பணியாளர் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற மற்றும் பணி வாய்ப்பை தேடும் நபர்களின் கரியர் விருப்பங்களை நிஜமாக்குவதற்கு நாங்கள் முயற்சிக்கின்ற போது உயர்நேர்த்தி செயல்பாட்டின் சிகரமாக இதனை நாங்கள் கருதுகிறோம்.

சியல் ஹெச்ஆர் சர்வீசஸ் குறித்து: இந்தியாவில் மிகப்பெரிய மனிதவள சேவைகள் நிறுவனமாக வளர்ந்திருக்கும் மா ஃபா – ன் நிறுவனர்களால் 2015 – ம் ஆண்டில் CIEL ஹெச்ஆர் சர்வீசஸ் தொடங்கப்பட்டு, உலக அளவில் 14 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.  தொழில்நுட்பம் மற்றும் பகுப்பாய்வின் திறனோடு, மனிதவள சேவைகள் தொழில்துறைக்கு இத்துறையில் தொலைநோக்கு பார்வை கொண்ட தீர்க்கதரசிகளின் மறுவருகையாக இது இருக்கிறது.  30 ஆண்டுகள் என்ற செழுமையான அனுபவத்தைக் கொண்ட நிறுவனர்களின் வலுவான ஆதரவோடு, இந்தியாவில் பணிக்கு ஆட்சேர்ப்பு சேவைகள் மற்றும் மனிதவளம் தொடர்பான ஆலோசனை சேவைகளை நிறுவனங்களுக்கு CIEL வழங்கி வருகிறது. மா ஃபாய் நிறுவனத்தில் 20 ஆண்டுகள் செயலாற்றியிருக்கிற இரு வெற்றிகரமான மனிதவளத்துறை நிபுணர்களான திரு. ஆதித்ய நாராயண் மிஷ்ரா மற்றும் திரு. சந்தோஷ் நாயர் ஆகியோர் இதன் இணை நிறுவனர்களாவர். 1200-க்கும் அதிகமான வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கு பணியாளர்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய    CIEL உதவுகிறது.  1,00,000-க்கும் அதிகமான தொழில்முறை பணியாளர்களை நாடெங்கிலும் 51 நகரங்களில் அமைந்துள்ள தனது 65 அலுவலகங்களிலிருந்து இந்நிறுவனம் ஏற்கனவே பணியமர்த்தல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.  மெஷின் லேர்னிங் போன்ற புதிய  தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம், புத்தாக்க நடைமுறைகளை அறிமுகம் செய்வதில் இத்தொழில்துறையில் CIEL முன்னணியில் இருந்து வருகிறது.  உற்பத்தி, ஆற்றல், உட்கட்டமைப்பு, தகவல்தொழில்நுட்பம் & அவுட்சோர்சிங், நிதிசார் சேவைகள், நுகர்வோர் தயாரிப்புகள், மருந்து தயாரிப்பு மற்றும் சேவைகள் ஆகிய துறைகளில் பணியாளர்களை CIEL  அடையாளம் கண்டு பணியமர்த்துகிறது.

Read Also  31 மார்ச் 2023 அன்று நிறைவுற்ற  காலாண்டு/ மற்றும் நிறைவுற்ற ஆண்டிற்கான வங்கியின் நிதி நிலை குறித்த முடிவுகள்.!!

சியல் ஸ்கில்ஸ் அண்டு கரியர்ஸ் குறித்து: மா ஃபாய் நிறுவனர்களால் 2015ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், திறனளிப்பு பணியமர்த்தப்படும் திறனிலை மற்றும் பணிவாய்ப்பு ஆகிய பிரிவுகளை ஒருங்கிணைத்திருக்கிற இந்தியாவின் முக்கிய நிறுவனங்களுள் ஒன்றாக வளர்ந்திருக்கிறது. பணியமர்த்தப்படும் திறன் நிலையில் காணப்படும் தனிப்பட்ட மற்றும் ஒட்டுமொத்த இடைவெளிகள் மீதும் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பணி வழங்கும் நிறுவனங்களுக்கும் மற்றும் பணியாளர்களுக்கும் இடையே தொடர்பினை உருவாக்குவதிலும் ஆழமான புரிதலை சியல் ஸ்கில்ஸ் அண்டு கரியர்ஸ் கொண்டிருக்கிறது, நாடெங்கிலும் தற்போது 65-க்கும் அதிகமான அலுவலகங்களுடன் சேவையாற்றிவரும் இந்நிறுவனம் விரைவில் 100 அலுவலகங்களைக் கொண்டிருக்கும்.

மாணவர்களை “பணியாற்ற தயார் நிலையில் உள்ளவர்களாக” ஆக்குவதற்கு அவர்களை ஒன்று திரட்டவும், பயிற்சியளித்து திறமையானவர்களாக மாற்றவும் பல்வேறு மாநில அரசுகளுடனும் மற்றும் மத்திய அரசுடனும் சியல் ஸ்கில்ஸ் அண்டு கரியர்ஸ் ஒருங்கிணைந்து செயலாற்றுகிறது; இம்மாணவர்கள் பணியமர்த்தப்படுவதற்கும் ஆதரவளித்து வருகிறது.

களத்தில் வலுவான செயலிருப்பு, கிளைண்ட் நிறுவனங்களின் மாபெரும் வலையமைப்பு மற்றும் அதன் ஆழமான, கூர்நோக்கம் கொண்ட பயிற்சியளிப்பு ஆகிய சிறப்பான அம்சங்களினால் பணியமர்த்தப்படுதலில் இருந்துவரும் இடைவெளியை நிரப்புவதற்கு சியல் ஸ்கில்ஸ் அண்டு கரியர்ஸ் திறனுள்ள அமைப்பாக இருக்கிறது. கூடுதலாக, மாணவர்கள் பணியமர்த்தப்படுதலில் காணப்படும் பிரச்சனைகள் மற்றும் கவலைகளுக்கு தீர்வுகாண இலக்குடன்கூடிய பிரத்யேக செயல்திட்டங்களின் வழியாக கல்லூரிகளுடனும், பல்கலைக்கழகங்களுடனும் இந்நிறுவனம் ஒருங்கிணைந்து செயலாற்றிவருகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *