ரூ.3.42 கோடி மதிப்பீட்டிலான 25 மின் வாகனங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்களின் பயன் பாட்டிற்காக முதலமைச்சர் வழங்கினார்!

சென்னை 04 ஜூன் 2022 ரூ.3.42 கோடி மதிப்பீட்டிலான 25 மின் வாகனங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்களின் பயன் பாட்டிற்காக முதலமைச்சர் வழங்கினார்!

ரூ.3.42 கோடி மதிப்பீட்டிலான 25 மின் வாகனங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்களின் பயன் பாட்டிற்காக தொடங்கி வைத்து, மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு பசுமை விருதுகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்களுக்கு பசுமை முதன்மையாளர் விருதுகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். –

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு. க.ஸ்டாலின் அவர்கள் இன்று (4.6.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்களின் பயன் பாட்டிற்காக ரூ.3.42 கோடி மதிப்பீட்டிலான 25 மின் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், உலக சுற்றுச்சூழல் தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சிறப்பான பங்களிப்பு ஆற்றியதற்காக மதுரை, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதும் மற்றும் ஐந்து தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்களைப் பாராட்டும் வகையில் ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் பசுமை முதன்மையாளர் விருதுகளையும் வழங்கினார்.

மக்கள் நலமாகவும், வளமாகவும் வாழ்ந்திட தூய்மையான

சுற்றுச்சூழல் மிகவும் அவசியமாகும். மக்கள் சார்ந்திருக்கும் நீர், காற்று மற்றும் நிலம் ஆகியவற்றை சீர்படுத்துவதிலும், தீவிர வானிலை மாற்ற நிகழ்வுகள் மற்றும் காலநிலை மாற்றத்திற்குரிய தாக்கங்களை குறைப்பதிலும் சூழல் அமைப்புகள் முக்கியமான முக்கியமான அம்சங்களாக விளங்குகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பினையும் மேம்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

Read Also  நடிகர் விவேக் வாழ்ந்த சாலைக்கு “சின்னக் கலைவாணர் விவேக் சாலை" தமிழக முதல்வர் அரசாணை வெளியிட்டார்!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக மின் வாகனங்கள்

சென்னை போன்ற பெருநகரங்களில் வாகனப்புகையே காற்று மாசடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இக்காற்று மாசினை குறைக்கும் முயற்சியாகவும், புவி வெப்பமயமாதலை தடுக்க ஏதுவாகவும் மற்றும் கரியமில வாயு வெளியேற்றத்தினை குறைப்பதற்காகவும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.3.42 கோடி மதிப்பீட்டிலான 25 மின் வாகனங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார். மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதுகள்

மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக 2021-ஆம் ஆண்டுக்கான பசுமை விருதினை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் எஸ். அனீஷ் சேகர், இ.ஆ.ப., விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. த. மோகன், இ.ஆ.ப., மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ், இ.ஆ.ப., ஆகியோருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.

தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்களுக்கு பசுமை முதன்மையாளர் விருதுகள்

மாசு தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக செயலாற்றி விருதுக்கு தேர்வான 79 பல்வேறு அமைப்புகளில்,
இராணிப்பேட்டை டேனரி எஃப்ளுயன்ட் டிரீட்மென்ட் கம்பெனி லிமிடெட், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர் சுலோச்சனா காட்டன் ஸ்பின்னிங் மில்ஸ் பிரைவேட் லிமிடெட், நீலகிரி மாவட்டம் கிளீன் குன்னூர் மற்றும் போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிற்கு 2021-ஆம் ஆண்டிற்கான பசுமை முதன்மையாளர் முதன்மையாளர் விருதுடன், பரிசுத்தொகையாக ஒரு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.

Read Also  நியாய விலைக் கடைகளில் விரைவில் அரிசி சர்க்கரை பருப்பு பாக்கெட்டுகளில் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி!

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் திரு. சிவ.வீ. மெய்யநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி, சுப்ரியா சுப்ரியா சாஹு, இ.ஆ.ப., தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் திரு.ஏ. உதயன், இ.வ.ப., வாரிய உறுப்பினர் செயலர் திரு. இரா. கண்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *