சென்னையில், ஜூன் 10 முதல் 13 வரை சர்வதேச பிளாஸ்டிக்ஸ் கண் காட்சியினை நடத்துகிறது, டாப்மா!

சென்னை 06 ஜூன் 2022 சென்னையில், ஜூன் 10 முதல் 13 வரை சர்வதேச பிளாஸ்டிக்ஸ் கண் காட்சியினை நடத்துகிறது, டாப்மா!

  • தமிழ்நாட்டில் பிளாஸ்டிக்ஸ் தொழிலை ஊக்குவிக்க நடவடிக்கை!
  • இக்கண்காட்சியில் 350 நிறுவனங்கள் பங்கேற்பு; ரூ. 500 கோடி அளவிலான வர்த்தக வாய்ப்பு; 75 ஆயிரம் பார்வையாளர்கள் பார்வையிடுவர்!
  • பிளாஸ்டிக்ஸ் குறித்த தவறான அபிப்ராயங்களைப் போக்கும் வகையில் “பிளாஸ்டிக்ஸ் உலகம் – சரியான பார்வை” என்ற தலைப்பில் பிரத்யேக அரங்கு! 
  • இதே கருத்துருவை வெளிப்படுத்தும் வகையில் இலவசக் கையேடு இன்று வெளியிடப்பட்டது! 
  • பிளாஸ்டிக்சை மறு சுழற்சி செய்யும் அரங்குகளில் அதற்குரிய தொழில்நுட்பமும், அதன் மூலம் இத்துறைக்குக் கிடைக்கும் வருவாய் வாய்ப்புகளும் விளக்கப்படும்!
  • இக்கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிடலாம்! 

சென்னை, 6 ஜூன் 2022

தமிழ்நாடு பிளாஸ்டிக்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கம் (The Tamil Nadu Plastics Manufacturers’ Association (TAPMA)), சர்வதேச பிளாஸ்டிக்ஸ் கண்காட்சியை, ‘ஐ.பி.எல்.ஏ.எஸ். 2022’ (IPLAS 2022) என்ற பெயரில் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், ஜூன் 10 முதல் 13-ஆம் தேதி வரை நடத்தவுள்ளது. 

பிளாஸ்டிக்ஸ் பொருள்களை எவ்வாறு கையாள்வது, அதை எவ்விதம் அகற்றுவது என்ற விவரங்கள் அடங்கிய கையேட்டை டாப்மா (TAPMA) இன்று (6 ஜூன் 2022) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது வெளியிட்டது. இந்தக் கையேட்டில் பிளாஸ்டிக்ஸ் சார்ந்த விவரங்கள் மற்றும் பிளாஸ்டிக்ஸ் மீதான தவறான அபிப்ராயங்கள், அவற்றை அழிப்பதில் உள்ள தவறான கருத்துகளுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கண்காட்சி அரங்கில் இந்தக் கையேடு அனைத்து பார்வையாளர்களுக்கும் இலவசமாக விநியோகிக்கப்படும்.

13 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பில், நான்கு நாள் நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியில் 350 அரங்குகள் இடம்பெறுகின்றன. 75 ஆயிரம் பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 60 நிறுவன இயந்திரங்களின் செயல்பாடு, அரங்குகளில் விளக்கப்படும். இக்கண்காட்சியில் பழைய பிளாஸ்டிக்சை மறு சுழற்சி செய்யும் கருவிகளும் விற்பனை செய்யப்படும். ஐ.பி.எல்.ஏ.எஸ். 2022 மூலம் ரூ. 500 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தகர்கள், தொழில்துறையினர், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அனுமதி இலவசமாகும்.

Read Also  ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் முதன் முறையாக பிரசவத்துக்கு முந்தைய காலம் மற்றும் கர்ப்ப கால செலவுகள், பிறந்த குழந்தையின் மருத்துவ  செலவுகளுக்கான காப்பீட்டை முதல் நாளிலில் இருந்தே வழங்கும் புதிய காப்பீட்டை அறிமுகம் செய்துள்ளது!

இக்கண்காட்சியின் முக்கிய நோக்கமானது, பொதுமக்களிடையே பிளாஸ்டிக்ஸ் மற்றும் பிளாஸ்டிக்ஸின் பயன்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். இதற்கென பிளாஸ்டிக்ஸ் உலகம் – சரியான பார்வை (A World of Plastics – a Right View) என்ற கருத்துருவில் ஒரு பிரத்யேக அரங்கையும் அங்கு உருவாக்கவுள்ளது டாப்மா. இது தவிர பிளாஸ்டிக்ஸ் மறு சுழற்சி செய்யும் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கென பிரத்யேகப் பிரிவு உருவாக்கப்படவுள்ளது. இதில் பழைய பிளாஸ்டிக்ஸ் பொருள்கள் எவ்விதம் பிளாஸ்டிக்ஸ் ஜல்லிகளாக உருவாக்கப்படுகிறது என்று நேரடி செயல்முறை மூலம் விளக்கிக் காண்பிக்கப்படும். இந்த ஜல்லிகள் மூலம் புதிய பிளாஸ்டிக்ஸ் பொருள்கள் எப்படி தயாராகின்றன என்பதும், இது சுழற்சி பொருளாதாரம் (Circular Economy) என்பதை உணர்த்தும் வகையிலும் இந்த அரங்கங்கள் இருக்கும். புதிய கண்டுபிடிப்புகளான – பேக்கேஜிங்கில் பயன்படுத்தும் மறு சுழற்சி செய்யக்கூடிய பல அடுக்கு லேமினேட்கள் மற்றும் பிளாஸ்டிக்ஸ் உறைகள் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளன. 

ஐ.பி.எல்.ஏ.எஸ். 2022 கண்காட்சி குறித்து டாப்மா அமைப்பின் தலைவர் திரு. எஸ். ராக்கப்பன் கூறுகையில், “இந்தக் கண்காட்சி மூலம் ரூ. 15,000 கோடி மதிப்பிலான 8 ஆயிரம் தமிழக பிளாஸ்டிக்ஸ் நிறுவனங்களுக்கு புதிய ஊக்கம் கிடைக்கும். இந்த நிறுவனங்கள் மூலம் தற்போது நேரடியாக 3 லட்சம் பேரும், மறைமுகமாக 8 லட்சம் பேரும் வேலை வாய்ப்பைப் பெற்று வருகின்றனர். இத்துறை மூலம், அரசுக்கு ஆண்டுதோறும்  ரூ. 2,700 கோடி சரக்கு மற்றும் சேவை வரியாகக் (GST) கிடைக்கிறது. இத்துறையில் மிக அதிக அளவில் சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவற்றில் சிறிய நிறுவனங்கள் (Small Scale Industries) 85 சதவீதமும், மிகச் சிறிய நிறுவனங்கள் (Micro Industries) 5 சதவீதமும். நடுத்தர நிறுவனங்கள் (Medium Industries) 5 சதவீதமும் ஆகும். மீதமுள்ள 5 சதவீதம் மட்டுமே பெரிய பிளாஸ்டிக்ஸ் நிறுவனங்களாகும். இவை அனைத்தும் அரசின் சட்டங்களை முறைப்படி பின்பற்றக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது. 

Read Also  காரப்பாக்கத்தில் உள்ள அப்போலோ க்ரேடில் & சில்ரன்’ஸ் ஹாஸ்பிடல், குழந்தைப் பேற்றை எதிர் நோக்கியிருக்கும் தம்பதியினர்களுக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கும் மகப்பேறு திட்டத்தை  ஏற்பாடு செய்துள்ளது!!

இத்துறையானது குறுகிய கால நோக்கில் 20 சதவீத வளர்ச்சியையும், நீண்ட கால நோக்கில் 25 சதவீதம் முதல் 40 சதவீத வளர்ச்சியையும் எட்டக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. இதனால் இத்துறையில் மேலும் ஒரு லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். இதன் மூலம் மாநிலமும் தொழில் வளம் பெறும். 

தற்போதைய சூழலில் தமிழகத்தில் பிளாஸ்டிக்ஸ் துறையின் வளர்ச்சி, ஆண்டுக்கு 5 சதவீதம் என்ற குறைவான அளவிலேயே உள்ளது. இத்துறை வளர்ச்சிக்காக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எங்களது சங்கம் வெள்ளை அறிக்கை ஒன்றை அரசிடம் விரைவில் சமர்ப்பிக்க உள்ளது. 2021-22-ஆம் நிதி ஆண்டில் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி 14 சதவீதமாக இருந்த நிலையில் இத்துறை 5 சதவீத வளர்ச்சியை மட்டுமே எட்டியுள்ளது. தற்போதைய சூழலில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள பிளாஸ்டிக்ஸ் தொழில் துறை 25 சதவீத வளர்ச்சியை எட்டி வருகின்றன. அப்படி பார்க்கும் போது தேசிய சராசரியைவிட தமிழக பிளாஸ்டிக்ஸ் தொழில்துறை மிகவும் பின்தங்கியுள்ளது. தமிழகத்தில் இத்துறை 28 சதவீத வளர்ச்சியை எட்டுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. அரசு இத்துறைக்கு தேவையான ஆதரவை அளிக்கும் பட்சத்தில் இந்த இலக்கை எட்டுவது சாத்தியமே” என்று குறிப்பிட்டார்.

பிளாஸ்டிக்ஸ் மறுசுழற்சி குறித்து டாப்மா அமைப்பின் சுற்றுச் சூழல் குழுவின் தலைவர் திரு பி. சுவாமிநாதன் கூறுகையில், “தமிழகத்தில் பிளாஸ்டிக்ஸ் மறுசுழற்சி துறை வேகமாக வளர்வதை மிகவும் ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறோம். பிளாஸ்டிக்ஸ் மறுசுழற்சி தொழில் (Plastics Recycling Industry) மட்டுமே எதிர்காலத்தில் ரூ. 300 கோடி அளவிற்கு முதலீட்டு வாய்ப்புகளை ஈர்க்கவல்லது. இதற்காக ஐ.பி.எல்.ஏ.எஸ். கண்காட்சியில் மறுசுழற்சி தொழில்நுட்பத்தை விளக்கும் கருவிகள் கொண்ட அரங்குகள் பிரத்யேகமாக இடம்பெறவுள்ளன. மறு சுழற்சி செய்ய இயலாத பல அடுக்கு பேக்கேஜிங் பிளாஸ்டிக்ஸ்களைக் கூட மறு சுழற்சி செய்யும் கருவிகளும், தற்போது அறிமுகமாகிவிட்டன. இவையும் இங்கு காட்சிப்படுத்தப்படும். 

Read Also  எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் உங்கள் வாழ்க்கையை சிறப்பாக்க சென்னையில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறது!!

இந்தக் கண்காட்சி முடிந்த பிறகு இந்தக் கருத்துரு அரங்கை மாநிலம் முழுவதும் அடுத்த 12 மாதங்களில் கொண்டு சென்று நவீன மறுசுழற்சி தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிக்க வலியுறுத்துவோம். பாதுகாப்பான மறுசுழற்சி இயந்திரங்களை பொதுமக்களின் பார்வைக்கு வைத்து அங்கு திட பிளாஸ்டிக்ஸ் கழிவுகள் எப்படி சிறு சிறு பிளாஸ்டிக்ஸ் ஜல்லிகளாக மாற்றப்பட்டு பிறகு அது புதிய பிளாஸ்டிக்ஸ் பொருள் தயாரிப்புக்கு பயன்படுகிறது என்பது விளக்கப்படும். பிளாஸ்டிக்ஸ் மறுசுழற்சிக்கு இத்தகைய இயந்திரங்களைப் பயன்படுத்துமாறு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு பரிந்துரைக்கும் திட்டமும் உள்ளது. இதன் மூலம் பிளாஸ்டிக்ஸ் மறுசுழற்சி நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ள முடியும். 

இந்த இயந்திரங்கள் சிங்கிள் பேஸ் மின் இணைப்பில் கூட செயல்படும். இது தெருவோர குப்பை அள்ளுவோர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு (NGO) பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் அதிக அளவில் பழைய பிளாஸ்டிக்ஸ் கழிவுகள் பொதுக் கழிவுகளோடு சேர்வது தவிர்க்கப்படும். இன்னும் சில ஆண்டுகளில் குப்பைகளில் பிளாஸ்டிக்ஸ் கழிவுகள் கலக்கும் விகிதம் 7 சதவீதத்திலிருந்து 2 சதவீத அளவுக்கு குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *