முதுகு கூனலால் (Kyphoscoliosis) பாதிக்கப்பட்ட எத்தியோப்பிய நோயாளிக்கு சிம்ஸ் மருத்துவமனையில் வெற்றிகர சிகிச்சை!
சென்னை 05 ஜூலை 2022 முதுகு கூனலால் (Kyphoscoliosis) பாதிக்கப்பட்ட எத்தியோப்பிய நோயாளிக்கு சிம்ஸ் மருத்துவமனையில் வெற்றிகர சிகிச்சை!
சென்னை, 05 ஜுலை 2022: சென்னை மாநகரில் முன்னணி மல்ட்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாகத் திகழும் சிம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் அடங்கிய ஒரு நிபுணர்குழு, கடுமையான முதுகு கூனலால் (Kyphoscoliosis) பாதிப்பை சரிசெய்ய அதிக செயல்திறன் அவசியப்படும் ஒரு சிக்கலான அறுவை சிகிச்சையை சமீபத்தில் வெற்றிகரமாக செய்திருக்கிறது.
டெஸ்ஃபயே மிங்குஷா மெர்ஷா (Master Tesfaye Mengesha Mersha) என்ற 15 வயது எத்தியோப்பிய இளைஞருக்கு கடுமையான முதுகு கூனல் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
மார்புப் பகுதியின் மேல்புற முதுகுத்தண்டில் 110 உருக்குலைவு / ஊனம் இருந்த இந்நிலையில், முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை துறையில், “அனகோண்டா ஸ்பைன்” என அழைக்கப்படுகிறது.
கால்பந்தாட்ட வீரராக அவ்விளையாட்டில் ஜொலிக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த இந்த இளைஞனுக்கு இந்த முதுகுத்தண்டு சீர்குலைவு அவனது கனவை சாதிக்கவிடாமல் ஒரு தடையாக இருந்தது. இதை சரிசெய்வதற்கான அறுவைசிகிச்சை, சிம்ஸ் மருத்துவமனையின் ஏசியன் ஆர்த்தோபெட்டிக் இன்ஸ்டியூட்-ன் முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை பிரிவின் முதுநிலை நிபுணர் டாக்டர். அப்பாஜி கிருஷ்ணன் தலைமையிலான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்டது.
மெர்ஷா என்ற இந்த இளைஞனுக்கு நரம்பு நார்க்கட்டி என்ற ஒரு மரபியல் பிரச்சனையின் காரணமாக முதுகுத்தண்டில் இந்த உருக்குலைவு / ஊனம் ஏற்பட்டிருந்தது. 6 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிற சிறுவர்களைப்போல மெர்ஷாவும் இயல்பான சிறுவனாகவே இருந்தான், அப்போது தான் அவனது மேல்புற முதுகில் உருக்குலைவு ஏற்பட்டிருப்பதை அவனது பெற்றோர்கள் கவனிக்கத் தொடங்கினர். ஆண்டு செல்ல செல்ல இந்த உருக்குலைவு இந்த அளவிற்கு மிகத் தீவிரமானதாக வளர்ச்சி கண்டது. ஒரு அனகோண்டா போன்ற வடிவமைப்பில் முதுகுத்தண்டில் 110 டிகிரி வளைவுடன் – முதுகு கூனல் (Kyphoscoliosis) என்ற ஒரு தனித்துவமான தீவிர பிரச்சனையோடு மே மாதத்தில் சிம்ஸ் மருத்துவமனைக்கு இந்த இளைஞன் அழைத்துவரப்பட்டான். வளைந்திருந்த முதுகுத்தண்டு, நுரையீரல்கள் விரிவாகாதவாறு தடைசெய்ததுடன் அவனது இதயத்தின் பின் பகுதியில் அழுத்தத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இப்பாதிப்பு நிலையின் தீவிரத்தை உணர்ந்த மருத்துவர்கள் குழு, இந்த இளைஞனுக்காக ஒரு தனித்துவமான சிகிச்சை நெறிமுறையை உடனடியாக உருவாக்கினர். அனகோண்டா முதுகுத்தண்டை நீட்டிப்பதற்கும் மற்றும் அந்த உருக்குலைவை நேராக்கவும் தொடர்ந்து 4 வார காலஅளவிற்கு நோயாளியின் கழுத்தில் 13-14 கிலோ எடையை தொங்கவிடுகிற ஹாலோ கிராவிட்டி டிராக்ஷன் (Halo gravity traction) என்ற முறையின் மூலம் மெர்ஷாவுக்கு சிகிச்சையளிக்க முடிவுசெய்யப்பட்டது.
இச்சிகிச்சைக்குப் பிறகு திறன்கொண்ட மருத்துவ குழுவினர் அறுவைசிகிச்சையின்போது, மூளை நரம்பியல் கண்காணிப்பு நிபுணர் ஆகியோரின் உதவியோடு உயர் செயல்திறனுள்ள அறுவைசிகிச்சை இந்நோயாளிக்கு செய்யப்பட்டது. மருத்துவமனையிலேயே கிடைக்கக்கூடிய 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்ட, அறுவைசிகிச்சைக்கு முந்தைய முதுகுத்தண்டு மாதிரி, அறுவைசிகிச்சை செயல்முறைக்கு உதவியது.
சிம்ஸ் மருத்துவமனையின் ஏசியன் ஆர்த்தோபெட்டிக் இன்ஸ்டியூட்-ன் முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை பிரிவின் முதுநிலை நிபுணர் டாக்டர். K அப்பாஜி கிருஷ்ணன், இந்த அறுவைசிகிச்சை குறித்து கூறியதாவது: “கடுமையான முதுகு கூனல் அல்லது அனகோண்டா ஸ்பைன் என அறியப்படும் ஒரு அரிதான பாதிப்பு மெர்ஷாவுக்கு இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த 6 ஆண்டுகள் காலஅளவில் இப்பாதிப்பு இந்த அளவுக்கு வளர்ச்சியடைந்திருக்கிறது. இந்த ஊனத்தின் தீவிர நிலையை சார்ந்து, முதுகுத்தண்டை நேராக்குவதற்கான அறுவைசிகிச்சையானது, 4 வார காலத்திற்கு கவனமான கண்காணிப்பு மற்றும் டிராக்ஷன் சிகிச்சை செயல்முறைக்குப் பிறகு செய்யப்பட்டது. இதய மற்றும் நுரையீரல் செயலிழப்பை விளைவிக்கக்கூடிய இந்நோய்க்கு இதன் மூலம் வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப்பட்டிருக்கிறது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு இந்த இளம் நோயாளி இப்போது குணமடைந்து நல்ல நிலையில் இருக்கிறான். கால்பந்தாட்ட வீரனாக வரவேண்டும் என்ற அவனது கனவை சாதிப்பதற்கு உதவுவதில் ஒரு முக்கிய பங்கை ஆற்றியதற்காக நாங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியும், பெருமிதமும் கொண்டிருக்கிறோம்.”
SRM மருத்துவமனையின் துணைத் தலைவர் – மருத்துவர் மற்றும் முதுநிலை சிறப்பு மருத்துவரான டாக்டர் ராஜு சிவசாமி, இது குறித்து மேலும் பேசுகையில், “வெற்றிகரமான இந்த அறுவைசிகிச்சையை செய்ததற்காக எமது மருத்துவர்கள் குழுவை நான் பாராட்டி மகிழ்கிறேன். நோயாளிகள் பராமரிப்பு சேவையில் சிம்ஸ் மருத்துவமனை பிறருக்கு வழிகாட்டும் வகையில் முதன்மை வகிக்கிறது. இந்த இளம் நோயாளியின் கனவை நனவாக்குவதற்கு ஒரு முக்கிய பங்களிப்பை செய்திருப்பதில் நாங்கள் பெருமைகொள்கிறோம். ஆரோக்கியமான, நிறைவான வாழ்க்கையை வாழவும், தனது கனவை நிஜமாக்கவும் மெர்ஷா சொந்த நாட்டிற்கு திரும்ப செல்வது குறித்து எங்களது மனது மகிழ்ச்சியால் நிறைந்திருக்கிறது,” என்று கூறினார்.
“இயல்பு நிலையை திரும்பப் பெற்று எனது நாட்டிற்கு திரும்பச் செல்வதிலும் மற்றும் இனிமேல் சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும் என்பதிலும் நான் அதிக உற்சாகத்தோடு இருக்கிறேன். கால்பந்தாட்டம் விளையாடுவது என்ற எனது கனவை நிஜமாக்குவதற்காக இந்த அறுவைசிகிச்சையின் மூலம் இனி நான் செயலாற்ற முடியும். இச்சிகிச்சையில் எனக்கு பெரிதும் உதவிய டாக்டர். K அப்பாஜி கிருஷ்ணன் மற்றும் சிம்ஸ்-ன் ஒட்டுமொத்த மருத்துவ குழுவினருக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். மனதிற்கும், உடலுக்கும் கடும் சவாலான இந்த காலகட்டத்தில் இதை வெற்றிகரமாக கடக்க உதவிய டாக்டர். அப்பாஜி கிருஷ்ணன் மற்றும் சிம்ஸ் மருத்துவமனையின் குழுவினர் வழங்கிய ஆதரவுக்கும், ஆற்றலுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று நோயாளியாக இங்கு வந்து உடல்நலம் பெற்று திரும்பும் மாஸ்டர் டெஸ்ஃபயே மெங்கேஷா மெர்ஷா கூறினான்.
சிம்ஸ் மருத்துவமனையில் இயங்கிவரும் தி இன்ஸ்டியூட் ஆஃப் ஆர்த்தோபெட்டிக்ஸ், சிக்கலான எலும்பு மற்றும் மூட்டு பாதிப்புகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சையளிப்பதில் சர்வதேச புகழ்பெற்ற மையமாகத் திகழ்கிறது. இது, AOI (ஏசியன் ஆர்த்தோபெட்டிக் இன்ஸ்டியூட்) எனவும் அழைக்கப்படுகிறது. மூட்டு மாற்று சிகிச்சை, விபத்து (எலும்பு முறிவு அறுவைசிகிச்சை), விளையாட்டு மருத்துவம் மற்றும் ஆர்த்தோஸ்கோபி சிகிச்சை மற்றும் முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை ஆகியவற்றில் சிறப்பு ஆர்வமும், அனுபவமும், திறனும் கொண்ட சென்னையின் மிகச்சிறந்த எலும்பு முறிவியல் அறுவைசிகிச்சை நிபுணர்கள் குழுவால் இந்த மையம் நிர்வகிக்கப்படுகிறது.