ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் முதன் முறையாக பிரசவத்துக்கு முந்தைய காலம் மற்றும் கர்ப்ப கால செலவுகள், பிறந்த குழந்தையின் மருத்துவ  செலவுகளுக்கான காப்பீட்டை முதல் நாளிலில் இருந்தே வழங்கும் புதிய காப்பீட்டை அறிமுகம் செய்துள்ளது!

சென்னை 23 மார்ச் 2022 ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் முதன் முறையாக பிரசவத்துக்கு முந்தைய காலம் மற்றும் கர்ப்ப கால செலவுகள், பிறந்த குழந்தையின் மருத்துவ  செலவுகளுக்கான காப்பீட்டை முதல் நாளிலில் இருந்தே வழங்கும் புதிய காப்பீட்டை அறிமுகம் செய்துள்ளது!

  • வழக்கமான சுகாதார காப்பீடு பாதுகாப்பு தவிர, , பிரசவத்துக்கு முந்தைய காலம், கர்ப்ப கால செலவுகள் மற்றும் பிறந்த குழந்தையின் மருத்துவ செலவுகளை காப்பீடு ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்தே வழங்கும் பாலிசியாக  ஸ்டார் வுமென் கேர் இன்சூரன்ஸ் பாலிசி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை, 23, மார்ச் 2022 : ஸ்டார் ஹெல்த்  &அல்லய்ட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில், தேசிய அளவிலான துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபல மருத்துவர்கள் பங்கேற்று சுகாதார செலவுகளை சந்திப்பதில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விவாதித்தனர்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டார் வுமென் கேர் இன்சூரன்ஸ் பாலிசியின் [Star Women Care Insurance Policy] கீழ், முதன்முறையாக பெண்களில்  அனைத்து வயதையும் மையப்படுத்திய தாய்மார்கள் இந்த பலன்களை பெறலாம். இந்த பாலிசி, வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் உள்ள பெண்களுக்கு அனைத்தையும் உள்ளடக்கிய பாதுகாப்பை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த பாலிசியில், அசிஸ்டட் ரீப்ரொடக்‌ஷன் சிகிச்சை, பிரசவத்துக்கு முந்தைய மற்றும் பிரசவ கால செலவுகள், கருப்பையில் கரு அறுவை சிகிச்சைகள் [Assisted Reproduction treatment, Antenatal and delivery expenses, In-Utero fetal surgeries, hospitalization expenses], புதிதாக பிறந்த குழந்தைக்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகள், பிறவி குறைபாடுகள் மற்றும் கரு சிதைவு மற்றும் தடுப்பூசி செலவுகள்  [treatment of the new-born, cover for congenital defects and even miscarriage and vaccination expenses] ஆகியவை அடங்கும். மேலும் மெட்டபாலிக் ஸ்கிரீனிங், குழந்தை மருத்துவர் மற்றும் மருத்துவ ஆலோசனைகள், வாலண்டரி ஸ்டெரிலைசேஷன் மற்றும் முன்னெச்சரிக்கை நோய் தடுப்பு மருத்துவ பரிசோதனை [metabolic screening, pediatrician/ medical consultations, voluntary sterilization & preventive health check-up] ஆகியவற்றுக்கான காப்பீட்டையும் இந்த பாலிசி வழங்குகிறது.

இந்நிகழ்ச்சியில் ஸ்டார் ஹெல்த் & அல்லய்ட் இன்சூரன்ஸ் கம்பெனி லிட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், டாக்டர் எஸ். பிரகாஷ் (Dr. S Prakash, Managing Director of Star Health and Allied Insurance Co. Ltd.,) பேசுகையில், இன்றைய கால கட்டத்தில் குழந்தை பிறந்த முதல் நாள் தொடங்கி பலன்களை வழங்கும் காப்பீட்டு பாலிசி எதுவும் இல்லை. பொதுவாக ஆரோக்கியமான குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட கால காத்திருப்புக்கு பிறகே காப்பீட்டை பெறுவார்கள். புதிதாக பிறந்த குழந்தைகளும், கர்ப்பிணி தாய்மார்களும் நிதி நெருக்கடிக்கு உள்ளாவதால், இந்த இடைவெளியை பூர்த்தி செய்ய வேண்டிய தேவை உள்ளது. ஆகவே பெண்கள், குறிப்பாக கர்ப்பிணி பெண்ககள், கருவின் ஆரோக்கியம் மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத் தேவைகளை புரிந்து கொள்வதற்காக முன்னணி நிபுணர்களிடம் ஆலோசனை பெறும் வகையில், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, இந்த பாலிசியை வடிவமைத்துள்ளோம். இதுவரை காப்பீடு செய்யாத பகுதிகளையும் இந்த பாலிசி உள்ளடக்கியுள்ளது.

Read Also  இந்தியா 2023க்கான பினாங்கு ரோட்ஷோ: MICE தொழில் துறையை மேம்படுத்த ‘சலோ பினாங்கு’ பிரச்சாரம்.!!

சென்னை மெடிஸ்கேன் சிஸ்டம்ஸ் இயக்குநர் டாக்டர் சுரேஷ் சேஷாத்ரி (Dr. Suresh Seshadri, Director, MEDISCAN Systems, Chennai) கூறுகையில், “எனது இருபது வருட கனவு இப்போது நிறைவேறியுள்ளது. இருதய கோளாறுகள், ட்வின் டூ ட்வின் டிரான்ஸ்ஃப்யூஷன் சின்ட்ரோம் (, Twin to Twin transfusion syndrome) அல்லது பிற மருத்துவ நிலைகள் போன்ற உடல் நலப் பிரச்னைகள் உள்ள குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை ஆரோக்கியமான இயல்பான வாழ்க்கையை வாழ முடியும். இந்த கரு அறுவை சிகிச்சைகள் இது போன்ற குழந்தைகளின் வாழ்வு மற்றும் இறப்புக்கு இடையிலான அமைப்பை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக அமைகின்றன. இந்த நடைமுறைகள் பெரும்பாலும் மிகுந்த செலவு மிக்கவை. எனவே பல தாய்மார்கள் புதிதாக பிறந்த குழந்தையை காப்பாற்றுவதை விட கர்ப்பத்தை கலைக்கவே விரும்புகின்றனர். இத்தகைய நடைமுறைகளுக்கான காப்பீடு என்பது பெண்களுக்கு காலத்தின் தேவையாக உள்ளது” என்றார்.

கருவில் அறுவை சிகிச்சையின் முன்னேற்றங்கள் மூலம், குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது, இது போன்ற நிலைமைகளில் ஒரு சில சந்தர்ப்பங்களில் கர்ப்ப காலங்களில் சிகிச்சை அளிக்கப்படலாம். அத்தகைய புதிய காப்பீடு என்பது இந்த குடும்பங்களுக்கு ஒரு உண்மையான வரப்பிரசாதமாகும். இந்திய மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர் டாக்டர் எஸ் சம்பத்குமாரி Prof. Dr. S. Sampathkumari, Vice President elect – Federation of Obstetric and Gynecological Societies of India), குறிப்பாக மகளிர் தினத்தன்று பெண்களுக்கு மிகவும் அந்தரங்கமான உடல் நலக் காப்பீட்டை ஸ்டார் நிறுவனம் வழங்கியுள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். 

Read Also  2023 ஜுன் 30 அன்று முடிவடைந்த காலாண்டுக்கான நிதிசார் முடிவுகள்.!!

மேலும் அவர் கூறுகையில், “அசிஸ்டட் ரீபுரொடக்ஷன் (Assisted Reproduction) போன்ற புதிய தொழில் நுட்பங்களுக்கான காப்பீடு ஒரு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். பெரும்பாலும் பெண்கள் கர்ப்ப காலம் ஒரு மென்மையான பயணம் என்று கருதுகின்றனர். ஆனால் இன்றைய நவீன உலகில், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற வாழ்க்கை முறை நோய்கள் பிரசவ நேரத்தில் சிக்கலை ஏற்படுத்துகின்றன. ஸ்டார் ஹெல்த் வழங்கும் புதிய பாலிசி, அத்தகைய குழந்தை பிறப்புக்கு முந்தைய மற்றும் கர்ப்ப கால சிக்கல்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கான செலவையும் உள்ளடக்கியுள்ளது. Assisted Reproduction க்கான காப்பீடு மிகவும் அற்புதமான அம்சங்களில் ஒன்றாகும். தற்போதைய கால கட்டங்களில் குழந்தையின்மை நிகழ்வுகள் அதிகரித்து வருவதை காண்கிறோம். இந்த பாலிசி பெண்களுக்கு உண்மையிலேயே அதிகாரம் அளித்து, தாய்மைக்கான தேர்வை அவர்களுக்கு திரும்ப கொடுக்கிறது. நிதி நெருக்கடி காரணமாக எந்தவொரு பெண்ணும் இதை இழந்து  விடக் கூடாது” என்றார்.

இந்திய குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் கெளரவ செயலாளர் (தமிழ்நாட்டு பிரிவு) பேராசிரியர் டாக்டர் ரமேஷ்பாபு எஸ் (Prof. Dr. Ramesh Babu S, Honorary Secretary TN Chapter of Indian Association of Pediatric Surgeons) கூறுகையில், பிறந்த குழந்தைகளுக்கான பிறவியிலேயே ஏற்படும் உள் மற்றும் வெளிப்புற குறைபாடுகளை முதல் நாளிலிருந்தே களைவதற்கான நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இது உடல் நல காப்பீட்டில் மிக சிறந்த முன்னுதாரணமான மாற்றமாகும். மேலும் பிறவி குறைபாடுடன் குழந்தை பிறப்பதால் ஒவ்வொரு ஆண்டும் வறுமையில் வாடும் நடுத்தர வர்க்க குடும்பங்களையாவது காப்பாற்ற முடியும்” என்றார். ஆரோக்கியமான பெண்கள் தங்களை பாதுகாக்கும் பாலிசியை எடுப்பதுடன், இந்தியாவின் காப்பீட்டின் பரவலை அதிகரிக்க செய்வதற்குமான பாலிசியை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இது குறித்து டாக்டர் பிரகாஷ் மேலும் கூறுகையில், “ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தில், பெண்களுக்கு அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களின் உடல்நலம் தொடர்பான அனைத்து தேவைகளுக்கும் பொருத்தமான காப்பீட்டு தொகையை வழங்கும் அந்தரங்கமான பாலிசியை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளோம். நிதி செலவுகளைப் பற்றி கவலைப்படாமல், கர்ப்பிணி தாய்மார்கள் இப்போது அனைத்து சிகிச்சைகளையும் காப்பீட்டின் காரணமாக எளிதில் பெறமுடியும். அதிகரித்து வரும் காப்பீட்டின் பரவலாக்கம் மூலம், பிறவி குறைபாடுகள் மூலம் ஏற்படும் நிதி நெருக்கடிகளை இளம் பெற்றோர் சமாளிக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம். மேலும், பல பெண்களுக்கு மிக சிறந்த மருத்துவ சேவையையும் பெற முடியும். இது போன்ற பாலிசி, சுகாதார செலவுகளுக்கு பணம் செலுத்துவதை தவிர, தாய் இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதத்தை குறைக்க உதவும். ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் இந்த தயாரிப்பை நம் நாட்டுக்காக வழங்குவதில் பெருமை கொள்கிறது” என்றார்.

Read Also  தனது ரசிகர்களுக்கு பிஸ்சா ட்ரீட் வைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன்!


ஸ்டார் ஹெல்த் & அல்லய்ட் இன்சூரன்ஸ் கம்பெனி லிட். குறித்து

ஸ்டார் ஹெல்த் & அல்லய்ட் இன்சூரன்ஸ் கம்பெனி லிட். நிறுவனம் ((BSE:543412 | NSE:STARHEALTH) ) 2006-ல் தனது செயல்பாடுகளை தொடங்கிய நிறுவனமாகும். சில்லறை சுகாதாரம், குழு சுகாதாரம், தனி நபர் விபத்து காப்பீடு மற்றும் வெளிநாட்டு பயண காப்பீடு ஆகியவற்றை கையாள்வதில் இந்தியாவில் முதல் தனித்துவமான காப்பீட்டு நிறுவனமாகும் (Source: CRISIL Research). சிறப்பான சேவையும் புதுமையான தயாரிப்பும் என வாடிக்கையாளர்களுக்கு சிறப்பானதை வழங்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த எங்களது வளங்களை பயன்படுத்தி வருகிறோம். தனிநபர்கள், குடும்பங்கள், கார்ப்பரேட்கள் ஆகியோருக்கு நேரடியாகவும், ஏஜெண்டுகள், தரகர்கள், கார்ப்பரேட் ஏஜென்டு வங்கி மற்றும் கலந்துரையாடும் செயலிகள், இணையதளங்கள் உள்ளிட்ட ஆன் லைன் தளங்கள் உள்ளிட்டவை வாயிலாக சுகாதார காப்பீட்டு தயாரிப்புகளை நாங்கள் வழங்கி வருகிறோம்.

2021 நிதியாண்டில் நாங்கள் பெற்ற மொத்த பிரீமியத் தொகை ரூ.9388 கோடி ஆகும். நிகர வருவாய் ரூ.3484 கோடி ஆகும். எங்களது விநியோக வலைப்பின்னல் நாடு முழுவதும் உள்ள 25 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களில், 779 கிளைகளில் 14 ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளர்களை கொண்டுள்ளது. மார்ச் 31, 2021 நிலவரப்படி ஏற்கனவே செயல்பட்டு வரும் கிளைகளின் வாயிலாக, சிறிய அளவிலான சேவை மையங்கள் என்ற வகையில் கூடுதலாக 562 விற்பனை மேலாளர் மையங்களையும் (“SMS”) 6,892 அலுவலக விற்பனை மேளாளர்களையும் அளித்துள்ளது.

ஸ்டார் ஹெல்த் & அல்லய்ட் இன்சூரன்ஸ் கம்பெனி லிட். நிறுவனம் தேசிய பங்கு சந்தையிலும் (NSE) மும்பை பங்கு சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு : http://www.starhealth.in/ 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *