பஜாஜ் அலையன்ஸ் லைஃப் நிறுவனத்தின் வாழ்க்கை லட்சியங்கள் தொடர்பான ஆய்வு 2023-ல் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது.! March 15, 2023 Business Tamil சென்னை 16 மார்ச் 2023 பஜாஜ் அலையன்ஸ் லைஃப் நிறுவனத்தின் வாழ்க்கை லட்சியங்கள் தொடர்பான ஆய்வு 2023-ல் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது.! தென் இந்திய மக்களின் முக்கிய வாழ்க்கை லட்சியங்கள்களில் உடல்நலம், கொடை மற்றும் சுற்றுலா ஆகியவை உள்ளன சுகாதார லட்சியங்கள் 73 சதவீதம் அதிகரித்துள்ளது கோவிட்-19 தொற்று பாதிப்புக்குப் பிறகு கொடை தொடர்பான சிந்தனை 61 சதவீதம் அதிகரித்துள்ளது சென்னையில், சேவைப் பணிகள் தொடர்பான லட்சியங்கள் 173 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னையில் 55 சதவீதம் பேரும் பெங்களூரில் 59 சதவீதம் பேரும் பயண லட்சியங்களை வைத்துள்ளனர். இது தேசிய சராசரியான 52 சதவீதத்தை விட அதிகமாகும் ஆயுள் காப்பீடு என்பது வாழ்க்கை லட்சியங்களை அடைவதற்கு மிகவும் விருப்பமான முதலீட்டுத் தேர்வாக உள்ளது வாழ்க்கை லட்சியங்கள் தயார் நிலைக் குறியீடு என்பது இந்தியாவின் 47 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, தென் இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் இது 41 சதவீதமாக உள்ளது சென்னை, 15 மார்ச், 2023: முன்னணி தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ், தமது முக்கிய ஆய்வான பஜாஜ் அலையன்ஸ் லைஃப் – இந்தியாவின் வாழ்க்கை லட்சியங்கள் தயார்நிலை ஆய்வு 2023-ன் (Bajaj Allianz Life India’s Life Goals Preparedness Survey 2023) என்ற ஆய்வில் தென்னிந்தியாவிற்கான முக்கிய தகவல்ளை வெளியிட்டுள்ளது, இது இந்தியர்களின் வாழ்க்கை லட்சியங்கள் மற்றும் விருப்பங்களை எடுத்துரைக்கிறது. இந்த ஆய்வு தென்னிந்திய மக்களின் வாழ்க்கை லட்சியங்கள், விருப்பங்கள், அவற்றை ஊக்குவிக்கும் விஷயங்கள் மற்றும் இந்த லட்சியங்களை அடைவதற்கான தயார்நிலை ஆகியவை தொடர்பான விரிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது. நாற்பதுக்கும் மேற்பட்ட வாழ்க்கை லட்சியங்களைப் பட்டியலிட்டு அந்த லட்சியங்களை அடைவதற்கு அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை இந்த ஆய்வு மதிப்பிட்டுள்ளது. Read Also மீண்டும் ஸ்கோடா கோடியாக் இந்தியா முழுவதுமுள்ள விநியோக மையங்களில் 2023 முதலாம் காலாண்டுக்கான முன்பதிவுகள் ஆரம்பம் !தென் இந்தியாவில் இந்த ஆய்வில் கேள்விகளுக்குப் பதிலளித்தவர்களில் 74 சதவீதம் பேர் மற்ற இலக்குகளை விட முதன்மையான வாழ்க்கைக் இலக்காக குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பைத் தெரிவித்தனர். சென்னையில், பதிலளித்தவர்களில் சுமார் 76 சதவீதம் பேர் குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பை தங்கள் முதன்மையான வாழ்க்கை இலக்காகத் தெரிவித்தனர். ஆரோக்கியமான மற்றும் உடல் நலத்துடன் கூடிய வாழ்க்கை முறையை பின்பற்றுதல், ஓய்வூதியத் திட்டமிடல், சேவைப் பணிகள் மூலம் சமுதாயத்திற்கு பங்களிப்பை வழங்குதல் ஆகியவை சிறந்த வாழ்க்கை லட்சியங்களில் தொடர்ந்து இந்த ஆய்விலும் இடம்பெற்றுள்ளன. பஜாஜ் அலையன்ஸ் லைஃப் நிறுவனத்தின் இந்திய மக்களின் வாழ்க்கை லட்சியங்களுக்கான தயார்நிலை ஆய்வு 2023-ல் கிடைத்துள்ள தகவலின்படி, மக்களின் வாழ்க்கை லட்சியங்கள் தற்போது இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியர்களுக்கான வாழ்க்கை லட்சியங்களின் எண்ணிக்கை. 2019-ம் ஆண்டில் 5 ஆக இருந்த நிலையில் அது 2023-ம் ஆண்டில் 11 ஆக அதிகரித்துள்ளது. தென்னிந்திய மக்களின் முக்கியமான வாழ்க்கை லட்சியங்களின் வகைகள் பதிலளித்தவர்களில் 74 சதவீதம் பேர் தங்கள் குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பை மிக முக்கியமான வாழ்க்கை லட்சியமாகக் கொண்டுள்ளனர் தென் இந்தியாவில் உள்ள சுமார் 30 சதவீதம் பேர் “பணத்தை பெருக்கி பணக்காரர்கள் என்ற நிலையில் ஓய்வு பெற” விரும்புகிறார்கள். சென்னையைப் பொறுத்தவரை இந்த எண்ணிக்கை 43 சதவீதமாக உயர்ந்துள்ளது. தென் இந்தியாவில் உடல்நலம் மற்றும் உடற்தகுதி இலக்குகள் 73 சதவீதம் அதிகரித்துள்ளது தென்னிந்தியர்களில் இரண்டில் ஒருவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் என இரண்டிலுமே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டுள்ளனர். பதிலளித்தவர்களின் முக்கியமான முதல் 5 வாழ்க்கை லட்சியங்களில் இது ஒன்றாக அமைந்துள்ளது Read Also இந்தியன் வங்கி சென்னையில் காசா பிரச்சாரத்தில் மெகா ரோட் ஷோ நடத்தியது.!!சென்னையில் இது 2 மடங்குக்கும் அதிகமாக உள்ளது சென்னையில், சுற்றுலா லட்சியங்கள் 2.3 மடங்கு அதிகரித்துள்ளது. சென்னையில் பதிலளித்தவர்களில் 55 சதவீதம் பேர் சுற்றுலை லட்சியங்களைக் கொண்டுள்ளனர். பெங்களூரில் சுற்றுலாப் பயண லட்சியம் 59 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்பு வாழ்க்கை லட்சியங்களில் ஒன்றார, கொடை என்பது பெரிய அளவில் அதிகரித்துள்ளது சேவை மற்றும் தொண்டு லட்சியங்கள் தென் இந்தியாவில் 61 சதவீதம் அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்புக்கு முந்தைய காலத்தை விட இது சென்னையில் 173 சதவீதம் அதிகரித்துள்ளது தென் இந்தியாவில் உள்ள மூன்று பேரில் ஒருவர் சமூகத்தில் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை உருவாக்குவதில் பங்களிப்பை வழங்க விரும்புகின்றனர் “வாழ்க்கை, தொழில், ஆரோக்கியம் மற்றும் குடும்பம் பற்றிய நமது கண்ணோட்டங்களை கோவிட் தொற்று பாதிப்பு, மாற்றி அமைத்துள்ளது. சமூக-பொருளாதார விஷயங்களில் சுய அக்கறை, குடும்பப் பாதுகாப்பு மற்றும் சமூகத்தின் நல்வாழ்வு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ விரும்பும் ஆழமான புரிதல் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்திய மக்களின் வாழ்க்கை லட்சியங்களுக்கு நம்பகமான ஒன்றாகவும் லட்சியங்களை அடைய உதவும் வழிமுறையாகவும் ஆயுள் காப்பீடு என்பது தொடர்ந்து இருந்து வருவது மிக முக்கியமாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.” என்று பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் சந்தைப்படுத்தல் அதிகாரி சந்திரமோகன் மெஹ்ரா (Chandramohan Mehra, Chief Marketing Officer, Bajaj Allianz Life Insurance) இந்த ஆய்வு அறிக்கையை சென்னையில் வெளியிட்டுப் பேகையில் கூறினார். Read Also Actress Raashii Khanna commences the 2-Day Skechers GO RUN Beat My Speed Challenge in Chennai.!!வாழ்க்கை இலக்குகளுக்கான உந்துதல்கள் பஜாஜ் அலையன்ஸ் லைஃப் நிறுவனத்தின் இந்தியாவின் வாழ்க்கை லட்சியங்கள் தயார்நிலை ஆய்வு 2023, தாக்கம் ஏற்படுத்துபவர்களின் சராசரி எண்ணிக்கை 3 முதல் 4 வரை அதிகரித்துள்ளதாக வெளிப்படுத்துகிறது. மேலும் ஆலோசனைகளை