அப்போலோ மருத்துவமனை ஆசியாவிலேயே முதன் முறையாக மிட்ராக்ளிப் மற்றும் டிஏவிஆர் மருத்துவ சிகிச்சையை ஒரே நோயாளிக்கு மேற்கொண்டு சாதனை!
சென்னை 30 மார்ச் 2022 அப்போலோ மருத்துவமனை ஆசியாவிலேயே முதன் முறையாக மிட்ராக்ளிப் மற்றும் டிஏவிஆர் மருத்துவ சிகிச்சையை ஒரே நோயாளிக்கு மேற்கொண்டு சாதனை!
75 வயதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் எங்களிடம் கொண்டு வரப்பட்ட நோயாளிக்கு ட்யூயல் மிட்ராக்ளிப் [dual MitraClip] மற்றும் டிஏவிஆர் மருத்துவ நடைமுறைகளை [TAVR procedures] மேற்கொண்டு டாக்டர் சாய் சதீஷ் அந்நோயாளியின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
அப்போலோ மருத்துவ மனையின் மற்றொரு மைல்கல் சாதனையாக, டாக்டர் சாய் சதீஷ் மற்றும் அவரது குழுவினர் 24 மணிநேரத்துக்குள் 9 TAVR- கள் மற்றும் 3 MitraClip-களைப் பொருத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை, 30 மார்ச் 2022: ஆசியாவின் மிகப் பெரிய மற்றும் மிகவும் நம்பகமான சுகாதார குழுமமான அப்போலோ மருத்துவமனை, ஆசியாவிலேயே முதன்முறையாக, இதய சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்காக உடலினுள் பொருத்தப்படும் மிட்ராக்ளிப் [MitraClip] மற்றும் டிரான்ஸ்கத்தீட்டர் ஆர்டிக் வால்வு ரிபிளேஸ்மென்ட் (Transcatheter Aortic Valve Replacement (TAVR)) எனப்படும் டிஏவிஆர் ஆகிய இரு உள்சாதனங்களை ஒரே நோயாளிக்கு பொருத்தி மற்றொரு முக்கியமான சாதனையை படைத்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த 75 வயதான ஆண் நோயாளி ஒருவர் கடுமையான ஆர்டிக் ஸ்டெனோசிஸ் மற்றும் மிட்ரல் வால்வு (MitraClip) கோளாறு காரணமாக உடலின் தேவைகளுக்கேற்ற வகையில் இரத்தத்தை செலுத்தமுடியாமல் இதயம் பிரச்னைக்குள்ளாகும் கார்டியோஜெனிக் அதிர்ச்சியால் [cardiogenic shock] பாதிக்கபட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு மாரடைப்பு ஏற்பட்டு நிலைமை மேலும் சிக்கலானது.
ஆர்டிக் வால்வை [TAVR] மாற்றும் மருத்துவ நடைமுறை மற்றும் பழுதடைந்திருக்கும் மிட்ரல் வால்வை சரி செய்வது என இந்த இரண்டு மருத்துவ சிகிச்சைகளுக்குமான அவசியத்தை உருவாக்கியதால் இந்த மருத்துவ சிகிச்சை ஒரு மைல்கல் சிகிச்சையாக கருதப்படுகிறது. இச்சிகிச்சையை அப்போலோ மருத்துவமனையின் சீனியர் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் டாக்டர். சாய் சதீஷ் அவர்கள் வெற்றிகரமாக மேற்கொண்டார்.
இந்த மைல்கல் மருத்துவ சிகிச்சை மேலும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் வகையில் டாக்டர். சாய் சதீஷ் 24 மணி நேரத்தில் 9 டிஏவிஆர் மருத்துவ நடைமுறைகள் மற்றும் 3 மிட்ராக்ளிப்களை பொருத்தி சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்தார். மேலும் மருத்துவ சிகிச்சை நடைமுறைகள் முடிக்கப்பட்ட அடுத்த 48 மணி நேரத்திற்கும் அனைத்து இயல்பு நிலைக்கு திரும்பினர்.
உலோகத்தினால் செய்யப்பட்ட மெல்லி வலை [metal mesh] மற்றும் விலங்குகளின் திசுக்கள் கலந்து உருவாக்கப்படும் ஒரு புரட்சிகர வால்வை கண்டுபிடித்ததன் மூலம், கடுமையான மற்றும் அறிகுறிகளுடன் கூடிய ஆர்டிக் ஸ்டெனோசிஸ் நோயாளிகளுக்கு பொருத்தப்படும் மிகச் சிறந்த சிகிச்சை முறையாக டிஏவிஆர் மருத்துவ நடைமுறை அமைந்திருக்கிறது. இது ஒரு மெல்லிய குழாய் வழியாக காலில் உள்ள தமனி வழியாக செலுத்தப்பட்டு உரிய இடத்தில் பொருந்தும் வகையில் நிலை நிறுத்தப்படுகிறது.
மிட்ராக்ளிப் சிகிச்சை முறையானது ரத்தம் கசியும் மிட்ரல் வால்வுகளை ஒன்றாக இணைப்பதன் மூலம் சரிசெய்யப்படுகிறது.
மிகவும் குறைவாக ஊடுருவும் இந்த மிட்ராக்ளிப் மற்றும் டிஏவிஆர் மருத்துவ நடைமுறை இவை இரண்டும் திறந்த இருதய அறுவை சிகிச்சையின்றி சேதமடைந்த இதய வால்வுகளை சரி செய்ய அல்லது மாற்றி அமைக்க உதவுகிறது.
இச்சிகிச்சைக்கு பிறகு நோயாளி இயல்பு நிலைக்கு மிகவும் விரைவாக திரும்புவதால். பெரும்பாலான நோயாளிகள் 24 முதல் 48 மணி நேரத்துக்குள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர். மிட்ராக்ளிப் மற்றும் டிஏவிஆர் சிகிச்சை முறைகள் அறுவை சிகிச்சையினால் ஆபாயத்தை எதிர்நோக்கும் வாய்ப்புகளுள்ள நோயாளிகளுக்கு உயிர்காக்கும் சிகிச்சைமுறையாக பலன்களை அளிக்கிறது.
அப்போலோ மருத்துவமனையின் சீனியர் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் டாக்டர். சாய் சதீஷ் (Dr. Sai Satish, Senior Interventional Cardiologist, Apollo Hospitals) கூறுகையில், “கடந்த நான்கு ஆண்டுகளாக மிட்ராக்ளிப் சிகிச்சை முறைகள் மற்றும் டிஏவிஆர் போன்ற அதி நவீன மருத்துவ கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவதில் நாங்கள் முன்னோடிகளாக இருந்து வருகிறோம். இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான சிகிச்சையை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். எங்களது ஆழ்ந்த அனுபவமும், மருத்துவமனையின் அதிநவீன உள்கட்டமைப்பும், மருத்துவ ஆதரவு சேவையும்தான் நோயாளியின் உயிரை காக்கும் டிஏவிஆர் மற்றும் மிட்ராக்ளிப் ஆகிய இரண்டையும் மேற்கொள்ள செய்து அவரது இரு வால்வுகளையும் சரி செய்ய உதவியது. டிஏவிஆர் சிகிச்சையானது மிகவும் குறுகலான ஆர்டிக் வால்வை சரிசெய்ய உதவியது. மேலும் மிட்ராக்ளிப் சாதனத்தை பயன்படுத்தி அதை உள்ளே பொருத்தி (MitraClip implant) மிட்ரல் வால்வை சரி செய்தோம். இதற்கு பிறகு 3 மிட்ராக்ளிப் மற்றும் 9 டிஏவிஆர் சிகிச்சைகளை மிகவும் நோய்வாய்ப்பட்ட ஒரு சில நோயாளிகளுக்கும் வெறும் 24 மணி நேரத்தில் செய்து முடித்தோம். முதல் முறையாக அல்லது எந்தவொரு சாதனையையும் முறியடிப்பதை விட, இது நோயாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் சிகிச்சை முறையில் உள்ள நம்பிக்கையை இது நிரூபிக்கிறது.” என்றார்.
அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி [Dr Prathap C. Reddy, Chairman, Apollo Hospitals Group] கூறுகையில், ” ஒரே நோயாளிக்கு மிட்ராக்ளிப் மற்றும் டிஏவிஆர் சிகிச்சையை தடையின்றி அளிக்கும் ஆற்றலில் ஆசியாவிலேயே முதன்முறையாக ஒரு புதிய மைல்கல் சாதனையை எட்டியது பெருமைக்குரிய ஒன்றாகும். வெறும் 24 மணி நேரத்தில் இவ்வளவு சிக்கலான நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளோம்.
இருப்பினும் வயது மற்றும் பிற காரணங்களால் அதிக ஆபத்து காரணமாக திறந்த இருதய அறுவை சிகிச்சைக்கு செல்ல முடியாத நோயாளிகளின் உயிரை காப்பாற்ற இந்த சிகிச்சை முறைகள் உதவுகின்றன என்ற உண்மையை கொண்டாடுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
இந்த அதிநவீன சிகிச்சை முறைகள் நோயாளிகள் தங்களது உடல் நலக் கோளாறுகள் தொடங்குவதற்கு முன்பு அவர்கள் அனுபவித்த வாழ்க்கை தரத்துக்கு திரும்புவதற்கான வாய்ப்புகளை அளிக்கின்றன. இந்த துறையில் எங்களின் அனுபவம் மற்றும் சிறந்து விளங்குவதற்கு இது ஒரு சான்றாகும். இன்றுவரை இந்தியாவில் உள்ள அனைத்து மிட்ராக்ளிப் சிகிச்சை முறைகளில் 70% அப்போலோ மருத்துவமனைகளிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இருதய நோய் தற்போது நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் மரணத்துக்கு காரணமாக இருக்கும் பிரச்னைகளில் மிகவும் முதன்மையானதாக உள்ளது. உலகம் முழுவதும் சுமார் 25 மில்லியன் இதய செயலிழப்பு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் இந்தியாவில் மட்டும் சுமார் 4.5 மில்லியன் இருதய நோய் பாதிப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய நோயாளிகள் வாழ் நாள் முழுவதும் போராடுவதும், 5 ஆண்டுகளில் 60% வரை மிக அதிகமான இறப்புகளையும் சந்திக்க நேரிடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற சந்தர்ப்பங்களில் மிட்ரல் வால்வு கோளாறு (mitral regurgitation) ஒரு முக்கிய காரணியாக இருக்க கூடும். இது இருதய செயலிழப்பு நோயாளிகள் குணமடைவதை மேலும் மோசமானதாக்கும்.
இருதய நோய் மேலாண்மையில் புதிய குறைந்த அளவில் ஊடுருவும் சிகிச்சைகளை நோயாளிகளுக்கு கிடைக்க செய்வதில் அப்போலோ மருத்துவமனைகள் முன்னணியில் உள்ளன. மருத்துவ சிகிச்சையில் முன்னேற்றமடையாத, மிதமான முதல் கடுமையான அல்லது முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இருதய வால்வு கோளாறுகள் உள்ள இருதய செயலிழப்பு நோயாளிகளுக்கு இவை தரமான சிகிச்சை முறைகளாக இருக்கும்.
உலகம் முழுவதும் 450 டிஏவிஆர் சாதனங்களை பொருத்தி சிகிச்சையை மேற்கொண்டவர், மற்றும் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மிட்ராக்ளிப் சாதனத்தை உள்ளே பொருத்தி சிகிச்சை அளித்து சாதனைப் படைத்திருக்கிறார் டாக்டர் சாய் சதீஷ்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “மிட்ராக்ளிப் மற்றும் டிஏவிஆர் ஆகிய இரண்டும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் ஆகும். இவை இரண்டும் வியத்தகுமுறையில் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துகின்றன. மேலும் பொருத்தமான நோயாளிகளுக்கு ஆயுள் காலத்தை அதிகரிக்க செய்கின்றன” என்றார்.