தனது புதிய திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் பயணிகளை ஈர்க்கக் கேரளா சுற்றுலாத் துறை தனது மூலோபாயங்களைச் சீரமைக்க முடிவு.!!

சென்னை 16 பிப்ரவரி 2023 தனது புதிய திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் பயணிகளை ஈர்க்கக் கேரளா சுற்றுலாத் துறை தனது மூலோபாயங்களைச் சீரமைக்க முடிவு.!!

சென்னை 2023 பிப்ரவரி 16 பன்னாட்டு விருதுகள் மற்றும் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் கேரள சுற்றுலாத் துறை வருடம் முழுவதும் மாநிலத்தைச் சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாக மாற்றப் புதிய திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை அறிவிக்க உள்ளது. 

இதன் மூலம் புதிய தலைமுறைப் பயணிகள் கடற்கரைப் பின்புறமுள்ள எழில்மிகு கிராமங்களையும், அதிகம் அறியப்படாத இடங்களைக் கண்டு களிக்கவும், ஓய்வெடுக்கவும், புத்துணர்வு மற்றும் கற்றல் அனுபவத்தைப் பெறவும் முடியும். 

கேரளா சுற்றுலாத் துறை 2022இல் உலகளாவிய மற்றும் தேசிய அளவிலான கௌரவங்களை ஈர்க்கும் வகையில் மகத்தான சாதனைகளைப் படைத்துள்ளது. 

புகழ் பெற்ற ‘டைம்’ பத்திரிக்கை கேரளத்தை ‘2022இல் ஆய்வதற்கான 50 அசாதாரண இடங்களைக் கொண்டுள்ள மாநிலமாக அறிவித்துள்ளது. கோண்டே நாஸ்ட் டிராவலர் 2022இல் பார்க்க வேண்டிய 30 இடங்களுள் ஒன்றாக கேரளத்திலுள்ள ‘அய்மனம் கிராமத்தைத்’ தேர்ந்தெடுத்துள்ளது. 

‘குளோபல் விஷன்’ விருதுக்காக டிராவல் & லீஷர் பத்திரிக்கையும்,  ‘பெஸ்ட் வெட்டிங்க் டெஸ்டினேஷன்’ என்றும் டிராவல் ப்ளஸ் லீஷர் வாசகர்களும் கேரளத்தை அங்கீகரித்துப் பட்டியலிட்டுள்ளன. 

சந்தையியல் பிரச்சாரங்கள் குறித்து கேரள சுற்றுலா அமைச்சர் பி ஏ முகம்மத் ரியாஸ் பேசுகையில் ‘கடற்கரைகள், உப்பங்கழிகள் மற்றும் மலைவாழ் இடங்கள் ஆகியவற்றில் மட்டுமே இனி கவனம் செலுத்தப் போவதில்லை. மாறாக, கேரளம் முழுவதையும் சுற்றுலாவின் சுவர்க்கமாக மாற்ற உள்ளோம். இதன் மூலம் பயணிகளுக்கு ஏராளமான வாய்ப்புகளும், பல்வகை அனுபவங்களும் கிடைக்கும். இவை அனைத்தும் ஒன்றிணைத்து, படகு இல்லம், கேரவான், பாரம்பரிய, கலாச்சார இடங்கள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் சாகசப் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு, வித்தியாசமான அனுவங்களை வழங்க உள்ளோம்.

Read Also  இனி தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்கலாம்.. வந்தாச்சு இவி யாத்ரா ஆப்!

கேரளத்தைப் பன்னாட்டு திருமணங்களுக்கான இடமாகவும், தேனிலவு தம்பதிகளுக்கான சொர்க்கமாகவும், மேம்படுத்தப் பல்வேறு சந்தையியல் முனைவுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றார். 

கேரள சுற்றுலாத் துறை முதன்மைச் செயலர் கே எஸ் ஸ்ரீனிவாஸ் தொடர்கையில் ‘கோவிட்-19 கொள்ளைநோயால் கடுமையான பாதிப்புக்கு உள்ளான நிலையைத் தாண்டி, கடந்த ஆண்டு சுற்றுலாத் துறை மாநிலத்துக்கு நல்ல வருவாயையும், சாதனைகளை வாரி வழங்கியது. கேரளத்தின் படகு இல்லங்கள், கேரவான், வனப்பகுதி, மலைத் தோட்டங்கள், வீடுகள் ஆகியவற்றில் தங்குதலும், ஆயுர்வேத அடிப்படையிலான மருத்துவ சிகிச்சைத் தீர்வுகளும், சாகசப் பயணங்களும், நடை பயணங்களும், மலையேறுதலும், பயணிகளுக்கு நிச்சயம் வித்தியாசமான அனுபவங்களைத் தரும். அதிகம் பயணிக்காத இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதே எங்கள் முனைவின் நோக்கமாகும்’ என்றார்.

கேரள சுற்றுலாத் துறை இயக்குனர் பி பி நூ பேசுகையில் ‘கேரவான் டூரிசம்’ – ‘கேரவான் கேரளம்’ உள்ளிட்ட கேரளத்தின் புதிய திட்டங்கள் மூலம், எங்களது பாரம்பரியப் பெருமை மிக்க கடற்கரைகள், மலைவாச இடங்கள், படகு வீடுகள், உப்பங்கழி பிரிவுகளுக்கும் பயணிகளை  ஈர்க்க  விரிவான திட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.  சுற்றுலாவை மேம்படுத்தும் எங்கள் புதிய முனைவுகள் சூழலியல் தேவைகளுக்கும், நிலைத்தன்மைக்கும் இணக்கமாக இருக்கும்’ என்றார்.

கடந்த ஆண்டு உள்ளூர் சுற்றாலாவில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஈர்த்துக் கேரளம் மகத்தான சாதனையை படைத்துள்ளது. கடந்த ஆண்டு முதல் மூன்று காலாண்டுகளில் மாநிலம் 1.33 கோடி சுற்றுலாப் பயணிகளை வரவேற்றது.  இது முந்தைய கொள்ளை நோய் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.94% அதிகமாகும். 

Read Also  நமது வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து சேவையாற்ற வேண்டும் தொழிலதிபர் நல்லி குப்புசாமி!!

மாநிலத்தின் ‘பொறுப்புள்ள சுற்றுலா’ முனைவின் ஓர் அங்கமாகக், கடந்த ஆண்டு நடைபெற்ற ஸ்ட்ரீட் திட்டம், இலண்டன் வேர்ல்ட் டிராவெல் மார்க்கெட் (டபிள்யூடிஎம்) பன்னாட்டு விருதைப் பெற்றது. மேலும், ‘பெரிய மாநிலங்கள்’ பிரிவில், சுற்றுலாத் துறையில் சிறந்து செயல்படும் மாநிலமாகக் கேரளத்தை  இந்தியா டுடே பட்டியலிட்டுள்ளது. 

2022 டிசம்பர் – 2023 ஏப்ரல் கொச்சி-முஸிரி ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வுக்கு உலகம் முழுவதுமுள்ள கலை மற்றும் சுற்றுலாப் பயணிகள் சிறப்பான ஆதரவை அளித்து வருகின்றனர். ‘நிஷாகந்தி பண்டிகை’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நாடு முழுவதுமுள்ள பல்வேறு பாரம்பரியக் கலைகளை நடத்தும் கலைஞர்கள் பங்கேற்பர். 

பி2பி கூட்டாண்மையின் முதற்கட்ட சந்திப்பு தில்லி, சண்டிகர், ஜெய்பூர் மற்றும் லக்னோ நகரங்களில் ஜனவரியிலும், அகமதாபாத்தில் கடந்த வாரமும் நடைபெற்றன.  சுற்றுலாத் துறையின் மகத்தான வரவேற்பு ஊக்கமளிப்பதாக இருந்தது. இவற்றைத் தொடர்ந்து, பொருட்காட்சிகளில் பங்கேற்பு, பி2பி சாலைக் காட்சிகளுக்கு ஏற்பாடு, உள்ளிட்ட பல்வேறு பயண வர்த்தக வலைமைவு நிகழ்ச்சிகள் வரிசையாகத் தொடரும். 

கேரள சுற்றுலா தனது தனித்துவமான சுற்றுலா அம்சங்களைச் சமீபத்தில் முடிவடைந்த மும்பை ஓடிஎம் (அவுட்பவுண்ட் டிராவெல் மார்க்கெட்) மற்றும் புது தில்லி தெற்கு ஆசியன் டிராவெல் & டூரிஸம் எக்ஸ்சேஞ்ச் (ஏஸ்ஏடிடிஇ) ஆகியவற்றில் பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்தியது. கேரள சுற்றுலாத் துறை பிப்ரவரியில் ஹைதராபாத் மற்றும் பெங்களூருவில் பி2பி தொடர் வர்த்தகக் காட்சிகளை நடத்தும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *