உங்களது குலதெய்வம் பற்றி தெரியாதவர்கள் இந்த மந்திரத்தை 48 நாட்களில் சொன்னால் குலதெய்வத்தை கண்டிப்பாக அறிந்து கொள்ளலாம்.!
சென்னை 21 ஏப்ரல் 2022 உங்களது குலதெய்வம் பற்றி தெரியாதவர்கள் இந்த மந்திரத்தை 48 நாட்களில் சொன்னால் குலதெய்வத்தை கண்டிப்பாக அறிந்து கொள்ளலாம்.!
குலதெய்வ வழிபாடு மட்டுமே நம்முடைய குலத்தையும் நமது குடும்பத்தையும் காக்கும்.
குலதெய்வம் நமது வீட்டில் இல்லை என்றால் நமது குடும்பத்தில் சந்தோஷம் நிச்சயமாக இருக்காது.
குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்யவில்லை என்றாலும், குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்தோடு செல்வது இல்லை என்றாலும், குறிப்பாக குலதெய்வத்தை மனதில் கூட நினைப்பதில்லை என்றாலும், கஷ்ட காலங்களில் மற்ற தெய்வங்களும் நமக்கு நிச்சயமாக துணையாக நிற்காது.
குலதெய்வம் தெரிந்தவர்கள் குலதெய்வத்தை தினமும் மனதார நினைத்து வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது குடும்பத்தில் சுபிட்சத்தை கண்டிப்பாக தரும்.
தினம்தோறும் இரவு தூங்க செல்வதற்கு முன்பாக நீங்கள் இந்த வழிபாட்டு முறையை பின்பற்ற வேண்டும்.
கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள்.
ஒரு சிறிய டம்ளரில் சுத்தமான குடிக்கின்ற குடிநீரை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் நீரில் ஒரு துளசி இலையை போட்டு கொள்ளுங்கள்.
இந்த டம்ளர் நீரில் முன்பு நீங்கள் அமர்ந்து பின் வரும் மந்திரத்தை 27 முறை உச்சரிக்கவும்.
ஓம் ஹ்ரீம் விசித்திர வீர்யம் ஸ்வப்னே இஷ்ட தர்ஷய நமஹா.
தெரியாத குலதெய்வத்தை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு காட்டிக் கொடுக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு இந்த மந்திரத்தை 27 முறை உச்சரித்து முடித்த பின்பு, டம்ளரில் இருக்கும் நீரை குடித்து விட வேண்டும்.
இதேபோல தொடர்ந்து 48 நாட்கள் இரவு நேரத்தில், மேலே சொன்னபடி இந்த வழிபாட்டு முறையை செய்ய வேண்டும்.
கட்டாயமாக மந்திரத்தை மனதில் நம்பிக்கையோடு உச்சரிக்க வேண்டும்.
இப்படி செய்தால் தெரியாத உங்களது குலதெய்வத்தை பற்றிய விவரம் உங்களுக்கு தெரியவரும் என்பது ஒரு காலாகாலமாக இருக்கும் நம்பிக்கை.
உங்களுக்கு 48 நாட்களில் குலதெய்வம் பற்றிய தகவல் கிடைக்கவில்லை என்றாலும் செய்துவந்த பரிகாரத்தை விட்டுவிட வேண்டாம்.
90 நாட்கள் தொடர்ந்து இப்படி வழிபாட்டை மேற்கொள்ள நிச்சயமாக உங்களுடைய குல தெய்வத்தைப் பற்றிய ஏதாவது ஒரு தகவல், உங்கள் குல தெய்வத்தைப் பற்றிய விபரத்தை யார் மூலமாகவாவது நீங்கள் தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
குலதெய்வத்தை பற்றி தெரியாதவர்கள் இந்த வழிபாட்டை மிகவும் நம்பிக்கையோடு செய்து வரவும்.
கண்டிப்பாக பலன் கிடைக்கும்.