எந்த திதிகளில் விநாயகர் வழிபாடு செய்தால் விசேஷ பலன்கள் என்ன !

சென்னை 19 ஜூலை 2022 எந்த திதிகளில் விநாயகர் வழிபாடு செய்தால் விசேஷ பலன்கள் என்ன !

நமது  ஆன்மீக குழுவிலிருந்து எந்த திதிகளில் எந்த விநாயகர் வழிபாடு செய்தால் விசேஷ பலன் என்பதைப் பற்றிய பதிவுகள்.

நாம் ஒவ்வொரு நாளும் வரக்கூடிய குறிப்பிட்ட திதியில் குறிப்பிட்ட கணபதி ரூபத்தை வணங்கும் போது நாம் முன்னெடுக்கும் செயலுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது.

பிரதமை திதியில் – பால கணபதி.

பால கணபதியை பிரதமை திதியில் வழிபட்டு வந்தால் குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள் நீங்குவதோடு சீதள நோய் குணமாகும்.

துவிதியை திதியில் – தருண கணபதி.

துவிதியை திதியில் தருண கணபதியை வணங்குவது மிக சிறப்பு.

இந்த நாளில் தருண கணபதியை வணங்கி வர வலிப்பு நோய் குணமாவதோடு நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் கணேசன் துணை நிற்பார்.

திருதியை திதி – பக்தி கணபதி.

தொழில், உத்தியோகம் அல்லது சில காரணங்களுக்காக ஊர் விட்டு வெளியூர் அல்லது வெளிநாடு சென்று வசிப்பவர்கள் திருதியை திதியில் பக்தி கணபதி வணங்கி வர நன்மை ஏற்படும்.

சதுர்த்தி திதி – வீர கணபதி.

ஒருவருக்கு திருமண வரன் அமைவதில் தடங்கல், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு இருப்பின் அவர்கள் வீர கணபதியை வணங்கி வந்தால் நிவர்த்தி ஆகும்.

பஞ்சமி திதி – சக்தி கணபதி.

பஞ்சமி திதியில் சக்தி கணபதியை வணங்கி அன்னதானம் செய்து வழிபட்டு வந்தால் வாகன விபத்து உள்ளிட்ட எந்த விபத்துகளும் அண்டாதவாறு காத்தருளுவார்.

Read Also  நமது குடும்பத்தில் செல்வ வளத்தை பெருக செய்யும் வழிபாடுகள்.

சஷ்டி திதி – துவிஜ கணபதி.

பல பிறவிகளாக நம்மை தொடரும் பாவங்கள் அகல, நாம் செய்யக் கூடிய தொழில் மேம்பட சஷ்டி தோறும் த்விஜ கணபதியை வழிபடுங்கள்.

சப்தமி திதி – சித்தி கணபதி.

தொழில், வியாபாரம் செய்பவர்கள் குறிப்பாக இரும்பு தொழில் செய்பவர்கள் சப்தமி திதி அன்று சித்தி கணபதியை வணங்கி வாருங்கள்.

அஷ்டமி திதி – உச்சிஷ்ட கணபதி.

கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்கள், கல்வித் துறையில் இருப்பவர்கள் அஷ்டமி அன்று உச்சிஷ்ட கண்பதியை வணங்குவதால் முன்னேற்றம் ஏற்படும். அதோடு கோயில் வேலை செய்பவர்களுக்கு இந்த வழிபாடு நல்ல பலனை அள்ளித்தரும்.

நவமி திதி -விக்ன கணபதி.

வட்டி கடை நடத்துபவர்களும், பொன், பொருள் விற்பனை செய்பவர்கள் நவமி திதியில் விக்ன கணபதியை வணங்கி வந்தால் அவர்களின் தொழில் மேம்படும்.

தசமி திதி – ஷூப்ர கணபதி

சினிமா உள்ளிட்ட கலைத்துறையினரும், கணினி துறை, கட்டடத் துறையில் வேலை பார்ப்பவர்கள் தசமி திதிகளில் ஷிப்ர கணபதியை வணங்கி வந்தால் எல்லா நன்மைகளும் வந்து சேரும்.

ஏகாதசி திதி – ஹேரம்ப கணபதி.

விவசாயம், பொறியியல், காவல் துறை, அறிவியல் ஆராய்ச்சி செய்பவர்கள், வரித்துறையில் இருப்பவர்கள் ஏகாதசி திதிகளில் ஹேரம்ப கணபதியை வணங்கி வந்தால் எல்லா வளங்களும் கிடைக்கும்.

துவாதசி திதி – லட்சுமி கணபதி.

எந்த ஒரு வியாபாரம் செய்பவராக இருந்தாலும் அவர்கள் துவாதசி திதிகளில் லட்சுமி கணபதிக்குப் பொங்கல் வைத்து படைத்து வழிபட்டால் லாபம் உண்டாகும்.

Read Also  இன்று அக்ஷய திருதியை ‌ என்பதால் உங்கள் வீட்டில் இதை கட்டாயம் செய்யுங்கள்.

சதுர்த்தசி திதி – விஜய கணபதி

நீதித்துறையில் இருக்கும் அதிகாரிகள், பணியாளர்கள் சதுர்த்தி திதியில் விஜய கணபதியை வணங்கி வந்தால் எல்லா வழக்கு மற்றும் செயல்களில் வெற்றி கிடைக்கும்.

அமாவாசை அல்லது பவுர்ணமி திதி – நிருத்த கணபதி.

குடும்ப சண்டைகள் நீங்கி ஒற்றுமை வளர்வதோடு, பிதுர், தேவதைகளின் ஆசி கிடைக்க பெளர்ணமி / அமாவாசை திதிகளில் நிருத்த கணபதியை வணங்கி வரவும்.

இவ்வாறு வணங்கி வந்தால் வெற்றி நிச்சயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *