சென்னையில் பிரபலமாகி வரும் மீன் குழம்புக்கு மட்டும ஒரு உணவகம் மீன் சட்டி எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்.
சென்னை 23 ஏப்ரல் 2022 சென்னையில் பிரபலமாகி வரும் மீன் குழம்புக்கு மட்டும ஒரு உணவகம் மீன் சட்டி எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்.
மீனுக்கென்றே ஸ்பெஷலாக துவங்கப்பட்டிருக்கும் இந்த உணவகம் (Sea food based cloud kitchen) கலா என்பவரின் கைப்பக்குவத்தில், 25 ஆண்டு கால சமையல் அனுபவத்தில் இயங்குகிறது.
அரவிந்த், ரிச்சி ரிச்சர்ட் என இரு இளைஞர்களின் அழகிய பேக்கிங்கில் மண் சட்டியிலேயே மீன் குழம்பை தருவது உள்ளிட்ட வித்தியாசமான ஐடியாக்களால் வாடிக்கையாளர்கள் பெருகி வருகிறார்கள்.
அப்படிப்பட்ட மீன் சட்டி உணவகத்திற்கு நாமும் ஒரு விசிட் அடித்தோம்…
Meen Satti Experience Store என்கிற மீன் சட்டி உணவகம் சென்னை கிண்டி ஈக்காட்டு தாங்கலில் இருக்கிறது.
சமையலறை ஸ்டார் ஹோட்டல் பிரமாண்டத்துடன், துய்மையான பணியாளர்களுடன் செயல்படுகிறது.
இங்கிருந்து, தினமும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300லிருந்து 400 பேருக்கு பார்சலில் மீன் குழம்பு அனுப்புகிறார்கள்.
16 பேர் அமர்ந்து சாப்பிடும் வசதியும் இருக்கிறது.
கலா, அரவிந்த், ரிச்சி ரிச்சர்ட் உள்ளிட்ட உணவக நிர்வாகிகளிடம் உரையாடினோம்…
”நம்மூர்ல மீனுக்கு மட்டுமேன்னு தனி ஹோட்டல்கள் இல்லை.
அதை நாம உருவாக்கினா என்னன்னு யோசிச்சதோட விளைவுதான் இந்த மீன் சட்டி எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்.
மீன் சம்பந்தப்பட்ட உணவு மட்டும்தான்கிறதால எங்க உணவகத்துல மெனு கார்டுலாம் கிடையாது.
பல ஹோட்டல்கள்ல மீன் குழம்பை தக்காளி பயன்படுத்தி செய்றாங்க.
ஆனா, நாங்க தரமான புளியைப் பயன்படுத்தி, மண் சட்டியில செய்றோம்.
மண் சட்டியில செய்றதால சுவை கூடுறதோட ஆரோக்கியமும் அதிகம்.
எங்ககிட்டே தனித்துவமான ஃபேமிலி ரெசிபி உண்டு.
கடந்த 25 வருஷமா அதுல எந்த புதுமையையும் புகுத்தாம அதாவது பாரம்பரிய சுவை மாறாம கடைப்பிடிக்கிறோம்.
எங்களோட குடும்ப செய்முறையை ரகசியமாக பாதுகாத்துக்கிட்டும் வர்றோம்.
இந்த உணவகம் தொடங்கி ஒரு வருஷமாகுது.
பேக்கிங் பொறுத்தவரை ஒரு அழகான மண்சட்டியில கொடுவா மீன் தலையோடு மீன் குழம்பு நிரம்பியிருக்கும்.
கூடவே 3லேருந்து 4 மீன் துண்டுகள் இருக்கும்.
தவிர, வறுத்த 6 மீன் துண்டுகள், ஒன்றரை கிலோ சாதம், 500 மிலி ரசம், 4 ஸ்பெஷல் பீடா ஸ்வீட் எல்லாமும் சேர்ந்த காம்போ பேக்கா கொடுக்கிறோம்.
3லேருந்து 4 பேர் திருப்தியா சாப்பிடலாம்.
எங்ககிட்டே சாப்பிடுறவங்க, ”என்னோட பாட்டி கைப்பக்குவம் மாதிரி இருக்கு”, ”எங்க அம்மா வைக்கிற அதே சுவையை இதுல உணர முடியுது”னு சொல்றப்போ அவ்ளோ ஹேப்பியா இருக்கும்.
அதைத்தான் எங்களோட சக்ஸஸா பார்க்கிறோம்.
எல்லாருக்கும் ஆன்லைன்ல ஆர்டர் பண்ண தெரியாது.
அப்படிப்பட்டவங்க நேர்ல வந்து சாப்பிடறப்போ அவங்களுக்கு ஆன்லைன்ல எப்படி ஆர்டர் பண்றதுன்னு சொல்லிக் கொடுக்கிறோம்.
எங்க முயற்சில அடுத்த கட்டம்னு பார்த்தா சென்னையில் மட்டுமில்லாம தமிழ்நாடு முழுக்க கிளைகள் தொடங்கணும்.
அடுத்த கட்டமா மற்ற மாநிலங்கள், சிங்கப்பூர், மலேசியா, துபாய்னு வெளிநாடுகள்லயும் மீன் சட்டி உணவகத்தை விரிவு படுத்தணும்.
கஸ்டமர்ஸோட ஆதரவோட படிப்படியா எல்லாமே நடக்கும்!
நிறைவா ஒரு விஷயம்… ”மீன் குழம்பு, மீன் வறுவல்னு ஒரேயொரு விஷயத்தை (Single Product Company) வெச்சுக்கிட்டு எப்படி மார்க்கெட்ல நிலைக்க முடியும்?”னு பலரும் எங்ககிட்டே கேட்கிறதுண்டு.
அவங்களுக்கெல்லாம் எங்க பதில், ”நம்ம ஊர் பிரியாணி எப்படி உலகளவுல பிரபலமாச்சோ அதே மாதிரி மீன் குழம்பு உலகம் முழுதும் வாசம் வீசும்.
பொருத்திருந்து பாருங்க” என்கிறார்கள் உறுதியாக.
கூடுதல் விவரங்களுக்கு meensatti.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.