மிகவும் சிறப்பாக செயல்படும் 150 கல்லூரிகளுக்கு அங்கீகாரம் நேரடி ஆய்வின்றி வழங்க அண்ணா பல்கலை. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..!!!

சென்னை 08 பிப்ரவரி 2023  மிகவும் சிறப்பாக செயல்படும் 150 கல்லூரிகளுக்கு அங்கீகாரம் நேரடி ஆய்வின்றி வழங்க அண்ணா பல்கலை. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..!!!

சிறப்பாகச் செயல்படும் 150 கல்லூரிகளுக்கு நேரடி ஆய்வின்றி அங்கீகாரம் வழங்க அண்ணா பல்கலை.

முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்தாண்டு நடைபெற்ற பொறியியல் கலந்தாய்வில் 9 கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை. 88 கல்லூரிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களும், 177 கல்லூரிகளில் 50 சதவீத அளவிலும் மட்டுமே மாணவர்கள் சேர்ந்திருந்தனர்.

இந்நிலையில் பொறியியல் படிப்பின் தரத்தை மேம்படுத்தும் வகையில் அமல்படுத்துவதற்கான சில முக்கிய முடிவுகளை அண்ணா பல்கலை. எடுத்துள்ளது. அதன்படி, மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு மட்டும் நேரில் சென்று ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பேராசிரியர் எண்ணிக்கை, உட்கட்டமைப்பு வசதிகள் சரியில்லாத கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கட்டாயம் வழங்கக் கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய வழிமுறைப்படி அங்கீகாரம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கல்லூரியின் வசதிகள், நாக், என்பிஏ சான்றிதழ்கள் போன்ற அளவீடுகளின்படி நன்றாக செயல்பட்டு வரும் 150 கல்லூரிகளில் நேரடி ஆய்வு செய்யாமல் அங்கீகாரம் வழங்கப்படும். வரும் கல்வியாண்டு முதல் இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வரும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *