வெராண்டா ஐஏஎஸ் நிறுவனம் குடிமைப் பணித் தேர்வுகளுக்கு தயாராவோருக்கான முழுமையான உறைவிடப் பயிற்சித் திட்டத்தை தொடங்கியுள்ளது.!!!

சென்னை 15 பிப்ரவரி 2023 வெராண்டா ஐஏஎஸ் நிறுவனம் குடிமைப் பணித் தேர்வுகளுக்கு தயாராவோருக்கான முழுமையான உறைவிடப் பயிற்சித் திட்டத்தை  தொடங்கியுள்ளது.!!!

தலைமை வழிகாட்டியாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் செயல்படுகிறார்

சென்னை, 15 பிப்ரவரி 2023: வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸின் துணை நிறுவனமான வெராண்டா ஐஏஎஸ் நிறுவனம் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராவோருக்காக, அகாடமி ஃபார் சிவில் சர்வீஸ் ஆஸ்பிரண்ட்ஸ் (ஏசிஎஸ்ஏ – ACSA) என்ற முழுமையான உறைவிடப் பயிற்சித் திட்டத்தை (residential programme) சென்னையில் தொடங்கியுள்ளது.

இதன் தொடக்க நிகழ்ச்சியில், வெராண்டா ஐஏஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பரத் சீமான், “அறிவொளிச் சுடர்” (Torch of Enlightenment) என்ற பெயரிலான ஜோதியை முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திரு.சகாயத்திடம் ஒப்படைத்தார்.

ஒரு ஆண்டு காலத்திற்கான இந்தப் பயிற்சித் இந்த திட்டத்தில், வெராண்டா உதவித்தொகை தேர்வில் (வெஸ்ட் VEST) தேர்ச்சி பெறுபவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த அகாடமி மாணவர்களுக்கு தனிப்பட்ட வழிகாட்டல் ஆதரவை முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வழங்குவார்.

இந்தியா முழுவதிலும் உயர்மட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் ஆர்வமுள்ளவர்களுக்குப் பயிற்சி அளிப்பதோடு, வேலைவாய்ப்புப் பயிற்சியை எளிதாக்குவார்கள்.

விழாவில் பரத் சீமான் பேசுகையில்…

இந்த திட்டல் மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்கு, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் திறமையும் அந்தஸ்தும் எங்களுடன் இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

அவர் எங்களது அடையாளத்தின் மதிப்புகளுடன் இணைந்த ஒரு முன்மாதிரி நபராகத் திகழ்கிறார். அவர் மாணவர்களை ஊக்குவிப்பதோடு, அவர்களின் பயிற்சிப் பயணத்தின் போது அவர்களுக்குத் தேவையான தெளிவை அளித்து, வெற்றியை நோக்கி அவர்களை வழிநடத்துவார்.” என்றார்.

Read Also  முன்று வயது குழந்தைகளுக்கு உலகத்தரம் வாய்ந்த FEFDY பாடத்திட்டம் கல்வி அறிமுகம்!!!

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், தலைமை ஆலோசகருமான சகாயம் [Mr Sagayam, former IAS officer and Chief Mentor] கூறுகையில்…

தேசத்தின் நிர்வாகப் பணிகளில் சேரவும், தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் பங்கேற்கவும் விரும்பும் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டதை நான் Veranda

பெருமையாகக் கருதுகிறேன்.

இந்த உறைவிப் பயிற்சித் திட்டத்தின் தொடக்கத்தின் மூலமாக, மாணவர்களின் பயிற்சிப் பயணத்தில் ஒரு முழுமையான அணுகுமுறையை வெராண்டா லேர்னிங் உருவாக்கி உள்ளதுடன் அவர்களது தேர்வுத் தயாரிப்புக்கு அருமையான அடித்தளத்தை அமைத்துள்ளது.” என்றார்.

அறிவொளிச் சுடர் ஜோதி கீழ்க்கண்ட தேதிகளில் தமிழ்நாட்டின் 6 இடங்களுக்கு பயணிக்கும்.

தேதி – இடம்.

25 பிப்ரவரி 2023 – வேலூர்.

26 பிப்ரவரி 2023 திருநெல்வேலி.

4 மார்ச் 2023 சேலம்.

5 மார்ச் 2023 கோயம்புத்தூர்.

11 மார்ச் 2023 திருச்சி.

12 மார்ச் 2023 மதுரை.

இந்த இடங்களில் வெஸ்ட் (VEST) தேர்வும் நடத்தப்படும்.

ஏசிஎஸ்ஏ (ACSA) 150 மாணவர்களை தமது சென்னை “பிருந்தாவன் வளாகத்தில்” இணைத்துக் கொள்ளும். அத்துடன் 5 மாணவர்களுக்கு 100 சதவீதம் உதவித்தொகை வழங்கப்படும். இவர்களின் பெயர்கள் 19 மார்ச் 2023 அன்று சென்னையில் நடைபெறும் ஒரு மிகப் பெரிய நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும்.

வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் பற்றி-:

கல்பாத்தி ஏஜிஎஸ் குழுமத்தால் 2018 -ல் நிறுவப்பட்டது.

இந்த நிறுவனம். வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் (Veranda Learning Solutions) என்பது ஒரு பொது பட்டியலிடப்பட்ட கல்வித் தொழில்நுட்ப நிறுவனமாகும்.

Read Also  Veranda RACE felicitates 1,000+ students who cleared respective competitive Banking, State & Central Government examinations!

இது மாநில தேர்வு ஆணையம், வங்கி, காப்பீடு, ரயில்வே, ஐஏஎஸ் (குடிமைப் பணிகள்) மற்றும் ஆடிட்டர் (CA) உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதற்கான பயிற்சித் திட்டங்களை வழங்குகிறது.

பிரபலம் ஆகி வரும் தொழில்நுட்பங்களில் தொழில்முறை திறன் மற்றும் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டங்களையும் இது வழங்குகிறது.

வெராண்டா

லேர்னிங் சொல்யூஷன்ஸ் நிறுவனம், கல்வியாளர்கள், நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் வழிகாட்டுதலில் ஒரு வலுவான கற்றல் தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் தளமானது தொழில்நுட்பம், செயல்முறைகள் மற்றும் வழிமுறைகளை ஒருங்கிணைத்து நாடு முழுவதும் கற்பவர்களுக்கு உயர்தர, ஆழமான, தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் வாய்ப்புகள் மற்றும் உள்ளடக்கத்தை வழங்குகிறது.

மாணவர்கள் மீது ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும், வெற்றிகரமான கல்வியை வழங்குவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட செயல்பாடுகளுடன் வெராண்டா செயல்பட்டு வருகிறது.

கடுமையான மற்றும் ஒழுக்கமான கற்றல் கட்டமைப்பின் ஆதரவுடன் பன்னோக்கு கல்வி வழங்கல் நடைமுறையை ஏற்று வெராண்டா செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் தனக்குச் சொந்தமாக நான்கு துணை நிறுவனங்களின் மூலம் சேவைகளை வழங்கி வருகிறது.

வெராண்டா ரேஸ், வெராண்டா சிஏ, வெராண்டா ஐஏஎஸ், எஜுரேகா – பிரெயின் ஃபோர்ஸ் எஜுகேஷன் சொல்யூஷன்ஸ் (Veranda Race, Veranda CA, Veranda IAS மற்றும் Edureka – Brain4ce Education Solutions) ஆகியவை அவையாகும்.

இந்தியாவின் முதன்மையான சிஏ தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனமான ஜே.கே. ஷா கிளாசஸ் நிறுவனத்துடன் இணைந்து கூட்டுச் செயல்பாட்டின் மூலம் பட்டயக் கணக்கியல் போன்ற அதிக தேவையுள்ள நிதிசார்ந்த படிப்புகளிலும் வெராண்டா லேர்னிங் நுழைந்து மாணவர்களுக்கு கற்பிக்கிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *