விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலைக்கழக ‘லா ஸ்கூல்’-ன் புதிய டீனாக டாக்டர். அனந்த் பத்மநாபன் நியமனம்.!!

சென்னை 05 ஜனவரி 2023 விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலைக்கழக ‘லா ஸ்கூல்’-ன் புதிய டீனாக டாக்டர். அனந்த் பத்மநாபன் நியமனம்.!!

சென்னை, 05 ஜனவரி 2023: விநாயகா மிஷன்’ஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷன் (நிகர்நிலை பல்கலைக்கழகம்), அதன் லா ஸ்கூல்-ன் புதிய டீன் ஆக பேராசிரியர் (முனைவர்) அனந்த் பத்மநாபன் அவர்களை நியமனம் செய்திருக்கிறது.

டாக்டர். பத்மநாபன், தற்போது ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ‘ஸ்லோன் ஃபெல்லோ’ என்ற பொறுப்பை வகித்து வருகிறார்.

யுஎஸ்ஏ-வில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் லா ஸ்கூல்-ன் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களை இவர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

2017-ல் இந்தியாவின் பெங்களூருவில் அமைந்துள்ள நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இந்தியா பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலைப் படிப்பை முடித்த பிறகு, மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் ஆறு ஆண்டுகள் காலஅளவிற்கு தொழில் தகராறுகள் துறை சார்ந்த வழக்கறிஞராக டாக்டர். பத்மநாபன் பணியாற்றினார். அதன்பிறகு, பென் கேரி லா-ல் ஒரு ஆண்டு எல்எல்எம் கல்வித்திட்டத்தை மேற்கொள்ள  அவர் முடிவுசெய்தார். 2014-ம் ஆண்டில் அதனை வெற்றிகரமாக முடித்தபிறகு எஸ்ஜேடி கல்வித்திட்டத்தில் பயில்வதற்கு டீன்ஸ் ஸ்காலர்ஷிப் அவருக்கு வழங்கப்பட்டது. இந்தியாவில் இருந்தபோதும் மற்றும் அவரது எல்எல்எம் கல்வித்திட்ட ஆண்டின்போதும் அவர் பெற்ற வியத்தகு தொழில்நுட்ப சட்ட மற்றும் கொள்கை பயிற்சியினால் குறிப்பிடத்தக்க அளவு ஊக்கம் பெற்ற டாக்டர். பத்மநாபன் புதுடெல்லியில் கார்னகி எண்டோமென்ட் அமைப்புடன் இணைந்து பணியாற்றினார். முனைவர் பட்டப்படிப்பிற்கான ஆய்வேடு செயல்திட்டத்தை வெற்றிகரமாக முடித்தபிறகு டாக்டர். பத்மநாபன், ஒரு பல்கலைக்கழக தலைவராக பணியாற்றிய அதே வேளையில் முழுநேர கல்விசார் பணிக்கு தன்னை மாற்றிக்கொண்டார். அந்த பயணத்தில் அவர் பெற்ற அனுபவமும், உள்நோக்குகளும், அவரது பயணத்திற்கான இலக்குகளை சிறப்பாக தெளிவுபடுத்த அவருக்கு உதவின. அதைத் தொடர்ந்து ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் பிசினஸ்-ல் மிட்-கேரியர் கல்வித்திட்டத்தில் சேர அவர் முடிவெடுத்தார்.

Read Also  மிகவும் சிறப்பாக செயல்படும் 150 கல்லூரிகளுக்கு அங்கீகாரம் நேரடி ஆய்வின்றி வழங்க அண்ணா பல்கலை. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..!!!

தொழில்நுட்ப கொள்கை, அறிவுசார் சொத்து உரிமைகள் மற்றும் புத்தாக்க ஸ்காலர்ஷிப் ஆகியவை டாக்டர். பத்மநாபனின் ஆராய்ச்சியில் அவர் ஆர்வம் காட்டுகிற பிரிவுகளாக இருக்கின்றன. ‘அறிவுசார் சொத்துரிமைகள்: மீறல்கள் மற்றும் தீர்வுகள்’ (லெக்சிஸ்நெக்சிஸ், 2012) என்ற சிறப்பான ஆய்வு கட்டுரையை அவர் எழுதினார் மற்றும் ‘புத்தாக்கத்தின் முன்னோடியாக இந்தியா’ (ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ், 2017) என்ற முக்கியமான தொகுப்பின் இணை ஆசிரியராக பங்களிப்பை அவர் வழங்கினார். இந்தியாவில் ஒழுங்குமுறை விதிகள்: வடிவமைப்பு, திறன், செயல்பாடு (ஹார்ட் பப்ளிஷிங், 2019) என்பதன் மீதான ஒரு சமீபத்திய புத்தகத்தில் பிக் டேட்டா என்பது மீதான அத்தியாயத்தின் இணை ஆசிரியரான டாக்டர். பத்மநாபன், பொது சட்டம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் ஒழுங்குமுறை பரிமானங்கள் என்பதனை ஆய்வுசெய்வதற்கான ஒரு தொடர் முன்னெடுப்பின் ஒரு அங்கமாக செயலாற்றி வருகிறார். அரசியல் அமைப்பு சட்ட சூழலுக்குள் இந்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றத்தின் மீதான அவரது புரிதலை இது வெளிப்படுத்துகிறது; இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் மீதான மறுசிந்தனை (OUP 2017) மற்றும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் ஆக்ஸ்ஃபோர்டு கையேடு (OUP 2016) என்ற தலைப்பிலான அத்தியாயங்கள் வழியாக இதை அவர் ஆய்விற்கு உட்படுத்தியிருக்கிறார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ், தி பிரின்ட், லைவ்மின்ட், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய பத்திரிகைகளிலும் மற்றும் பிற ஊடகங்களிலும் இவரது கருத்தை வெளிப்படுத்தும் கட்டுரை வழியாக தொழில்நுட்பத்தின் தாக்கம் மீதான விரிவான பொது உரையாடல்களில் இவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *