NEC கார்பரேஷன் இந்தியா மற்றும் இன்டெல்® டெக்னாலஜி இந்தியா நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்.

சென்னை 06 பிப்ரவரி 2023 NEC கார்பரேஷன் இந்தியா மற்றும் இன்டெல்® டெக்னாலஜி இந்தியா நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்.

AVIT, VMRF (DU) கல்வி நிறுவனங்கள் AI/ML, IOT, சைபர் பாதுகாப்பு, ஸ்மார்ட் மொபிலிட்டி, FPGA தீர்வுகள் மற்றும் உயர்திறன் கம்ப்யூட்டிங் ஆகிய பிரிவுகளில் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கற்றலை ஏதுவாக்குவது இதன் குறிக்கோள்

Chennai , 6 பிப்ரவரி 2023: AVIT, அறுபடை வீடு இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (AVIT) ( நிகர் நிலை பல்கலைக்கழகமான விநாயகா மிஷன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஒரு கல்வி நிறுவனம்), NEC கார்பரேஷனின் ஒரு துணை நிறுவனமான NEC கார்பரேஷன் இந்தியா மற்றும் இன்டெல்® டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுடன் ஒரு ஒத்துழைப்பு உடன்பாடு மேற்கொள்ளப்பட்டிருப்பதை அறிவித்திருக்கிறது. தொழில்நுட்ப கல்வி கற்கவிருக்கும் மாணவர்களுக்கு ஒரு விரிவான கல்வி செயல்திட்டத்தை வழங்குவதே இதன் நோக்கம். ஒரு பிரத்யேக AI/ML, HPC ஆய்வகம் மற்றும் இன்டெல்® உன்னாட்டி தரவை மையமாகக் கொண்ட ஆய்வகத்தை நிறுவுவதன் மூலம் பல்வேறு தொழில்பிரிவுகளில் தங்களது முழு  சாத்தியத்திறனை மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும் எட்டுவதற்கு உதவுகிற ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU), AVIT மற்றும் NEC கார்பரேஷன் இந்தியா மற்றும் இன்டெல்® ஆகியவை கையெழுத்திட்டிருக்கின்றன. எடுலேட்ரல் ஃபவுண்டேஷனின் வழியாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. இன்டெல்® மற்றும் NEC கார்பரேஷன் உடனான இந்த முக்கிய கூட்டாண்மை செயல்பாடு இந்தியாவில் இவ்வகையினத்தில் முதன்முறையாக மேற்கொள்ளப்படுகிறது. இன்டெல்® – NEC கூட்டாக வழங்கும் சான்றிதழ்களுடனும், உத்தரவாதமுள்ள இன்டர்ன்ஷிப் மற்றும் பணியமைவிட அமர்வு ஆகிய வசதிகளுடன் பொறியியல் & தொழில்நுட்பம் மற்றும் கலை மற்றும் அறிவியல் செயல்திட்டத்தில் விரிவான கல்விசார் செயல்திட்டங்களை இது வழங்குகிறது.

Read Also  கல்வியில் நவீன மாற்றங்களை உட்புகுத்தும் லேர்ன் என் இன்ஸ்பையர் நிறுவனம்!!!

VMRF (DU)-ன் துணை வேந்தர், டாக்டர். P.K. சுதிர் இந்நிகழ்வின்போது கூறியதாவது: “கலவையான கல்விசார் கட்டமைப்புகளை உருவாக்குவதே எதிர்காலத்தில் பிரபலமாக இருக்கும், வன்பொருள் மற்றும் மென்பொருள் பயன்பாடுகளிலும் உருவாகிவரும் தொழில்நுட்ப புத்தாக்கத்தில் உலகத்தரத்தில் எமது மாணவர்களுக்கு NEC இந்தியா மற்றும் இன்டெல்® ஆகிய நிறுவனங்களோடு சேர்ந்து பயிற்சியளிப்பதில் நாங்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கிறோம். இந்த பட்டப்படிப்பு செயல்திட்டம் முழுவதிலும் நிஜ உலகில் பிரச்சனைகளை தீர்க்கும் தீர்வுகளுக்கு பயிற்சியளிப்பதுடன், குறித்த காலஅளவுகளில் திறன்களுக்கான சான்றிதழ்களை வழங்கி இச்செயல்திட்டத்தை நாங்கள் மேற்கொள்ளவிருக்கிறோம்.

எதிர்காலத்தில் தொடர்ந்து மாற்றம் காணக்கூடிய பணியமைவிடத்தில் திறம்பட செயல்பட அறிவு மற்றும் திறன்கள் கொண்ட சிறப்பான தொழில்நுட்ப பணியாளர்களாக உருவெடுக்க எமது மாணவர்களை இது உருவாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *