1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை விடலாமா? என்பது பற்றி பள்ளிக்கல்வித்துறை பரிசீலித்து வருகிறது!

சென்னை 18 ஏப்ரல் 2022 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை விடலாமா? என்பது பற்றி பள்ளிக்கல்வித்துறை
பரிசீலித்து வருகிறது!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலால் கடந்த இரண்டு வருடங்கள் பள்ளிகள் முழுமையாக செயல் படவில்லை.

1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படித்த மாணவ-மாணவிகள் அனைவருக்கும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி அளிக்கப்பட்டது.

பொதுத்தேர்வு எழுதக்கூடிய 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் முறையாக தேர்வு நடத்தப்படவில்லை.

மாதாந்திர மற்றும் பிற தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி அளிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு குறைந்ததால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

முதலில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கும் பின்னர் 6 முதல் 8 வகுப்புகளுக்கும் அதனைத் தொடர்ந்து 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கும் பல்வேற்று கட்டமாக சுழற்சி முறையில் வகுப்புகள் நடந்தன.

டிசம்பரில் கொரோனா 3-வது அலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாததால் பள்ளிகள் வழக்கமான நிலையில் இயங்கத் தொடங்கின.

ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறைக்கு பின்பு அனைத்து பள்ளிகளும் பின்னர் முழு அளவில் இயங்கத் தொடங்கின.

தொடக்க பள்ளிகள் முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை வாரத்தில் 6 நாட்கள் செயல்பட பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.

அதனால் ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாட்களும் வேலை நாட்களாக கருதி முழுவீச்சில் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது.

Read Also  வெராண்டா ஐஏஎஸ் நிறுவனம் குடிமைப் பணித் தேர்வுகளுக்கு தயாராவோருக்கான முழுமையான உறைவிடப் பயிற்சித் திட்டத்தை தொடங்கியுள்ளது.!!!

பிற மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு தொடங்கி முடிவு பெறும் நாட்களும் கல்வித்துறை மூலம் அறிவிக்கப்பட்டன.

கொரோனாவால் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதோடு சுழற்சி முறையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நடந்ததால் பாடத்திட்டமும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்டன.

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமின்றி பிற வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு அதனை குறித்த காலத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு பாட பகுதிகள் முடிக்கப்பட்டன.

பள்ளி வேலை நாட்கள் குறைவாக இருப்பதால் 1 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் சனிக்கிழமையிலும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

அடுத்த மாதம் மே 5-ந்தேதி பிளஸ்-2விற்கு பொதுத்தேர்வு தொடங்கி 28-ந்தேதி முடிகிறது.

எஸ்.எஸ்.எல்.சி.-க்கு மே 6-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி நிறைவடைகிறது.

பிளஸ்-1 மாணவர்களுக்கு 10-ந்தேதி தொடங்கி மே 31-ந்தேதி முடிகிறது.

1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே 3-ந்தேதி தேர்வு தொடங்கி 13-ந்தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வுகள் நடைபெறுகின்றன.

பள்ளிகளின் கடைசி வேலை நாள் 13-ந்தேதி ஆகும்.

அதன்பிறகு கோடை விடுமுறை ஒரு மாதம் விடப்படுகிறது.

ஜூன் மாதம் 14-ந் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது.

இந்த நிலையில் கோடைவெயிலின் தாக்கம் தமிழகத்தில் இந்த ஆண்டு அதிகமாக இருப்பதால் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.

குறிப்பாக தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வெயிலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

வழக்கமாக ஏப்ரல் இறுதிக்குள் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு மே மாதத்தில் இருந்து விடுமுறை விடப்படும்.

Read Also  கல்வியில் நவீன மாற்றங்களை உட்புகுத்தும் லேர்ன் என் இன்ஸ்பையர் நிறுவனம்!!!

ஆனால் கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு வகுப்புகள் தாமதமாக திறக்கப்பட்டதால் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

மே மாதம் 2-வது வாரம் தேர்வு நடைபெறுகிறது.

அதனால் பள்ளி சிறுவர்கள் கோடை வெயிலின் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்படுவதை தவிர்க்க சனிக்கிழமை வேலைநாளை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை பெற்றோர்களிடம் இருந்து வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு மட்டும் சனிக்கிழமைகளில் விடுமுறை விடலாமா? என்பது பற்றி பள்ளிக்கல்வித்துறை பரிசீலித்து வருகிறது.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மட்டுமே இன்னும் பள்ளி இறுதித்தேர்வு நடைபெற வேண்டியது உள்ளது.

தனியார் மெட்ரிக்குலே‌ஷன், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்த வாரத்துடன் இறுதித்தேர்வு முடிகிறது.

பெரும்பாலான பள்ளிகள் தேர்வை நடத்தி முடித்துவிட்டன.

அரசு பள்ளிகளில் மட்டுமே தேர்வு நடைபெற வேண்டி இருப்பதால் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் (திங்கள் முதல் வெள்ளி வரை) வகுப்புகள் நடத்தவும், சனி, ஞாயிறு விடுமுறை அளிக்கவும் ஆலோசிக்கப்படுகிறது.

கடந்த வாரம் தொடர் விடுமுறையால் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து வருகிற 23, 30-ந்தேதிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *