சென்னை அண்ணாநகரில் ராம்கி ஐஏஎஸ் அகாடமியை அமைச்சர் பி கே சேகர்பாபு மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து திறந்து வைத்தனர்!!

சென்னை 19 ஜூன் 2022 சென்னை அண்ணாநகரில் ராம்கி ஐஏஎஸ் அகாடமியை அமைச்சர் பி கே சேகர்பாபு மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து திறந்து வைத்தனர்!!

சென்னை அண்ணாநகரில் ராம்கி ஐஏஎஸ் அகாடமியை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் திறந்து வைத்தனர்.

2017-ம் ஆண்டு முதல் ஆன்லைன் வகுப்புகளை வெற்றிகரமாக நடத்தி வரும் ராம்கி ஐஏஎஸ் அகாடமி, மாணவர்கள் மற்றும் சிவில் சர்வீஸ் ஆர்வலர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, அண்ணாநகரில் 13-வது பிரதான சாலையில் புதிய மையத்தைத் திறந்துள்ளது. நிபுணர்களின் சிறப்பு பயிற்சி மற்றும் மாணவர்கள் மீது தனிப்பட்ட கவனம் ஆகியவை இந்த நிறுவனத்தின் சிறப்பம்சங்கள் ஆகும். சாமானியர்களை சாதனையாளர்களாக மாற்றுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது குறித்து பேசிய ராம்கி ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் ராமகிருஷ்ணன், “ஐபிஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன், ஆனால் அந்த கனவை நிறைவேற்ற முடியவில்லை. எனவே, என்னைப் போன்ற ஆர்வலர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க விரும்பினேன். இந்த தொலைநோக்குப் பார்வையில் உருவானதுதான் ராம்கி ஐஏஎஸ் அகாடமி”, என்றார்.

இந்த கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்று சிவில் சர்வீசஸ்களுக்கு தேர்வாகும் மாணவர்கள் தங்கள் கட்டணத்தை திரும்பப் பெறலாம். ராம்கி ஐஏஎஸ் அகாடமியின் தனித்துவமான மற்றும் முக்கிய அம்சங்களில் இது ஒன்றாகும்.

அகாடமியின் இயக்குநர் சுஷ்மோன் கூறுகையில், “மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் நம்பிக்கையுடனும், அச்சமின்றியும் கலந்து கொண்டு தேர்ச்சி பெறுவதற்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் மற்றும் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் பயிற்சி அளிப்பார்கள்,” என்று தெரிவித்தார்.

Read Also  தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை வரும் ஜூன் மாதம் 13-ந் தேதி பள்ளிகள் திறப்பு!!

முதல்நிலை, முதன்மை மற்றும் ஆளுமைத் தேர்வு ஆகிய மூன்று நிலைகளிலும் சிவில் சர்வீஸ் தேர்வின் விரிவான புரிதலில் அகாடமி கவனம் செலுத்துகிறது. இந்த மூன்று நிலைகளுக்கான அணுகு முறை, குறிப்பிட்ட திறன்களுடன் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

“மாதிரித் தேர்வுகள், நிபுணர்களின் விரிவுரைகள், வழிகாட்டிகளுடன் நேரடி உரையாடல் ஆகியவற்றோடு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் முறையான பாடத் திட்டங்களைத் தொகுத்துள்ளோம்.

தேர்வை எதிர் கொள்பவர்களின் திறனையும் நம்பிக்கையையும் இவை மேம்படுத்துகின்றன” என்று ராமகிருஷ்ணன் மேலும் கூறினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *