சன் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் குரூப்-1 தேர்வில் சாதனை: முதன்மையான இடங்களை பிடித்தனர்!

சென்னை 19 ஜூலை 2022 சன் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் குரூப்-1 தேர்வில் சாதனை: முதன்மையான இடங்களை பிடித்தனர்!

சமீபத்தில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப்-1 தேர்வு முடிவுகளில், சன் ஐஏஎஸ் அகாடமியில் பயின்ற மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சன் ஐஏஎஸ் அகாடமியில் படித்த மாணவி பிரியதர்ஷினி மாநில அளவில் 6-வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இ. அபிநயா 8-வது இடமும், எஸ். அஸ்வினி 12-வது இடமும், கார்த்திகா பிரியா 20-வது இடமும், சி. விக்னேஷ் 25-வது இடமும் பெற்று வெற்றி வாகை சூடி இருக்கிறார்கள்.

தமிழ் வழியில் படித்த மாணவர் ஜேசுதாஸ் மாநில அளவில் மூன்றாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சன் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குநர் ஷரண் ராஜேந்திரன், “துணை ஆட்சியர் உள்ளிட்ட அரசு பணியிடங்களில் காலியாக இருக்கும் 66 உயர் பதவிகளுக்காக டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-1 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது.

இதில் சென்னை அண்ணாநகரை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சன் ஐஏஎஸ் அகாடமியில் படித்த பல மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

எங்களின் பயிற்சி முறைக்கும் மாணவர்களின் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த வெற்றியாக இதை நாங்கள் பார்க்கிறோம்.

குரூப்-1 தேர்வில் சாதனை படைத்த மாணவ – மாணவிகளுக்கு, அகாடமி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

தொடங்கிய குறுகிய காலக்கட்டத்தில் சன் ஐ‌ஏ‌எஸ் அகாடமி தொடர்ந்து சாதனை புரிந்து போட்டித்தேர்வுக்கான பயிற்சி அளிக்கக்கூடிய நிறுவனங்கள் மத்தியில் தரமான பயிற்சியை மாணவர்களுக்கு வழங்கி மிகச்சிறந்த நிறுவனமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது,” என்றார்.

Read Also  Lalaji Memorial Omega International School Organises a Music Concert!!

இதற்கு முன்பாக நடந்த வேளாண் அதிகாரிகள் தேர்வில் 137 மாணவர்களும், குரூப்-2 தேர்வில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களும் தேர்வு பெற்று சன் ஐஏஎஸ். அகாடமிக்கு பெருமை சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சாதனை பயணத்தின் தொடர்ச்சியாக சன் ஐஏஎஸ் அகாடமியில் புதிய வகுப்புகள் தொடங்க இருக்கின்றன. ஆகஸ்டு 7-ந்தேதி முதல் இந்த பயிற்சி வகுப்புகள் தொடங்க இருக்கின்றன.

இதற்கான மாணவர் சேர்க்கையும் தற்போது நடந்து வருகிறது.

பயிற்சி வகுப்பில் கையாளப்படும் அனைத்து மெட்டீரியல்களும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்கப்படும்.

அனுபவமிக்க ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளால் மாணவர்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தப்பட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்த பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் 9952920001, 7397355517 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தங்கள் வருகையை முன்பதிவு செய்யலாம். மேலும், சென்னை அண்ணாநகர் 6-வது அவென்யூவில் அகாடமி அலுவலகத்தை (பிளாட் எண்:- 1160) நேரடியாக அணுகலாம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *